லசித் மாலிங்கவின் ஓய்வு தொடர்பில் வெளியான புதிய தகவல்!

73

இலங்கை T20I அணியின் தலைவர் லசித் மாலிங்க அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்துக்கு பின்னர், ஓய்வுபெறமாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அனுபவ வீரரான லசித் மாலிங்க இலங்கை T20I அணியின் தலைவராக செயற்பட்டு வருகின்றார். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெற்றுள்ள லசித் மாலிங்க அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத்துடன் ஓய்வுபெறுவார் என இதற்கு முன்னர் அறிவித்திருந்தார்.

பங்கபந்து பி.பி.எல் T20 தொடரில் ஐந்து இலங்கையர்கள்

இந்த ஆண்டின் டிசம்பர் மாதம் பங்களாதேஷில் இடம்பெறவுள்ள பங்கபந்து பங்களாதேஷ்…

எனினும், இறுதியாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் மற்றும் கடந்த சில தொடர்களில் தொடர்ச்சியாக சிறப்பான பந்துவீச்சு பிரதியை மாலிங்க நிகழ்த்தி வருகின்றார். இதன் காரணமாக அவர் உலகக் கிண்ணத்துக்கு பின்னரும் அணியில் விளையாடலாம் என்ற கருத்துகளும் முன்வைக்கப்பட்டு வந்தன.

இவ்வாறன நிலையில், தற்போது அபுதாபியில் நடைபெற்று வரும் T10 தொடரில் விளையாடி வரும் மாலிங்க, அடுத்த வருடம் நடைபெறவுள்ள T20I உலகக் கிண்ணத் தொடருக்கு பின்னரும் T20I போட்டிகளில் விளையாடுவார் என்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

“T20I உலகக் கிண்ணத் தொடருக்கான இலங்கை அணி தலைவராக செயற்பட வேண்டும் என கிரிக்கெட் சபை கூறியுள்ளது. ஆனால், எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது தொடர்பில் தெரியாது. எவ்வாறாயினும், T20 போட்டிகளில் 4 ஓவர்கள் மாத்திரமே வீசவேண்டும். எனது திறமையை பயன்படுத்தி என்னால் விளையாட முடியும்.

உலகளவில் நடைபெற்று வரும் T20 தொடர்களில் நான் விளையாடியுள்ளேன். அந்த அனுபவம் எனக்கு உள்ளது. எனவே, ஒரு பந்துவீச்சாளராகவும், ஒரு சிறந்த அணித்தலைவராகவும் என்னால் செயற்பட முடியும். அத்துடன், நான் இன்னும் 2 வருடங்களுக்கு T20  போட்டிகளில் விளையாட முடியும் என நம்புகிறேன்” 

சர்வதேச கிரிக்கெட்டில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20I என அனைத்துவகை போட்டிகளிலும் 100 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ள ஒரே வீரர் லசித் மாலிங்க. அவரது அனுபவம் இலங்கை அணிக்கு தேவையான ஒன்றாகும். இவ்வாறான நிலையில், இப்போது உள்ள இளம் அணியை வழிநடத்தி, அணியை வளர்ச்சிப்பாதைக்கு மாலிங்கவால் அழைத்துச் செல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.

“இலங்கை அணி திறமையான பந்துவீச்சாளர் ஒருவர் இல்லாமல் தடுமாறுகிறது. குறிப்பாக பந்துவீச்சாளர்களிடம் தொடர்ந்து நேர்த்தியாக பந்துவீசும் தன்மை குறைவு. அதனை ஒன்று அல்லது ஒன்றரை வருடங்களில் சரிசெய்துவிட முடியாது. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். இதற்கு மூன்று ஆண்டுகள் எடுக்கலாம். அதற்கு வீரர்களின் நிலைத்தன்மை அவசியம். தேர்வுக்குழு இதில் அவதானம் செலுத்த வேண்டும். 

அவிஷ்கவின் அதிரடி வீண்; பங்ளா டைகர்ஸின் வெற்றியை உறுதி செய்த பெரேரா

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் T10 லீக் கிரிக்கெட் தொடரின் நான்காம்…

குறிப்பாக இளம் வீரர்களுக்கு என்னால் உதவி கிடைக்கும் என்றால் நான் அவர்களுடன் இருக்க வேண்டும். அவர்களுக்கு சொல்வதை விட, இப்போது என்னால் இப்படிதான் செய்ய வேண்டும் என்பதை காண்பிக்க முடியும். ஆனால், நான் விளையாடாவிட்டால், வீரர்களுக்கு எவ்வாறான திறமையை காண்பிக்க வேண்டும் என்பதை என்னால் காண்பிக்க முடியாது” என்றார்.

லசித் மாலிங்க அபுதாபி T10 லீக்கில் நொர்தென் வொரியர்ஸ் அணிக்காக விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.