நைஜீரியாவை வீழ்த்தி ஆர்ஜன்டீனாவை முந்திய குரோஷியா

329
@Getty Images

இளம் நைஜீரிய அணிக்கு எதிரான உலகக் கிண்ண போட்டியில் குரோஷிய அணி 2-0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிலையான வெற்றியொன்றை பெற்றது.

ஒகேநேகாரோ எடபோவின் (Oghenekaro ETEBO) ஓன் கோல் மூலம் முதல் பாதியில் 1-0 என முன்னிலை பெற்ற குரோஷியா, இரண்டாவது பாதியில் லுகா மொட்ரிக்கின் பெனால்டி உதை மூலம் வெற்றை உறுதி செய்து கொண்டது.

D குழுவுக்காக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றதன் மூலம் குரோஷிய அணி அந்த குழுவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த குழுவில் ஏற்கனவே நடந்த ஆர்ஜன்டீன மற்றும் ஐஸ்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டி சமநிலையானதால் அந்த இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளுடன் காணப்படுகின்றன.   

2026 பிஃபா உலகக் கிண்ணம் அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில்

எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்கான பிஃபா உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை முதற்தடவையாக அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகிய…

போட்டியின் 32 ஆவது நிமிடத்தில் குரோஷிய வீரர் மரியோ மன்ட்சுக்கி பாய்ந்து தலையால் முட்டி கோல் புகுத்த முயன்றபோது அந்த பந்து நைஜீரிய மத்தியகள வீரர் ஒகேநேகாரோ எடபோவின் மீது பட்டு சொந்த வலைக்குள்ளேயே விழுந்தது. பின்னர் 71 ஆவது நிமிடத்தில் லுகா மொரிட் வெற்றிகரமாக பெனால்டி உதையை மேற்கொண்டார்.

குரோஷிய அணி 2014 மற்றும் 2018 ஆகிய இரண்டு உலகக் கிண்ண போட்டிகளிலும் தனது கோல் எண்ணிக்கையை ஓன் கோல் மூலமே ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் நைஜீரிய அணி உலகக் கிண்ண வரலாற்றில் முதல் அணியாக தொடர்ச்சியாக இரண்டு ஓன் கோல்களை விட்டுக்கொடுத்துள்ளது. கடைசியாக அந்த அணி 2014 உலகக் கிண்ண போட்டியில் பிரான்சுக்கு எதிரான ஆட்டத்திலும் இதேபோன்று எதிரணிக்கு கோல் விட்டுக் கொடுத்தது.    

D குழுவில் எதிர்வரும் வியாழக்கிழமை குரோசிய அணி ஆர்ஜன்டீனாவை எதிர்கொள்ளவுள்ளது. ஒரு புள்ளியுடன் இருக்கும் ஆர்ஜன்டீன அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாகியுள்ளது.

பேருவிடம் இறுதித்தருவாயில் வென்ற டென்மார்க்

கடும் போட்டிக்கு பின்னர் பேருவு அணிக்கு எதிரான போட்டியை டென்மார்க் அணி வென்று உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளது. எனினும் பேரு அணி போட்டியின் ஆரம்பத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பு ஒன்றை தவறவிட்டதே அந்த அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்தது.

இம்முறை உலகக் கிண்ண போட்டியின் C குழுவுக்கான இரண்டாவது ஆட்டமாக சனிக்கிழமை (16) நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் பாதி முடியும் தருவாயில் தென் அமெரிக்க அணியான பேருவுக்கு பெனால்டி வாய்ப்பு ஒன்று கிடைத்தது.

டென்மார்க் வீரர் யுராரி இழைத்த தவறால் பேருவின் கிறிஸ்டியன் குவேவா கீழே விழ வீடியோ தொழில்நுட்பத்தின் உதவியோடு பேருவுக்கு பெனால்டி உதை கிடைத்தது. எனினும் குவேவா உதைத்த பந்து கோல் கம்பத்திற்கு வெளியால் சென்றது.  

இந்த தவறை சாதகமாக்கிக் கொண்ட டென்மார்க் அணி இரண்டாவது பாதியில் பதில் தாக்குதல் நடத்தியது. போட்டியின் 59 ஆவது நிமிடத்தில் எதிரணியின் பின்கள வீரர்களின் எதிர்ப்பு இன்றி யூசுப் பௌல்சன் (Yussuf POULSEN) டென்மார்க் அணிக்கு கோல் புகுத்தினார்.

ரொனால்டோவின் ஹெட்ரிக் கோலால் ஸ்பெயினுடனான போட்டியை சமன் செய்த போர்த்துக்கல்

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹெட்ரிக் கோல் சாகசத்தால் ஸ்பெயினுடனான பரபரப்பான போட்டியை போர்த்துக்கல் அணி …

பேரு அணி உடனடியாக பதில் கோல் புகுத்த முயன்றபோதும் டென்மார்க் அணியின் கோல்காப்பாளர் காஸ்பர் ஸ்ச்மிசல் (Kasper SCHMEICHEL) பந்து வலைக்குள் செல்லாமல் ஒரு கையால் அபாரமாக தடுத்தார்.  

பேரு அணி 1982 ஆம் ஆண்டுக்கு பின்னரே முதல் முறை உலகக் கிண்ணத்தில் ஆடுவதோடு அந்த அணி வீரர்களுக்கு உற்சாகம் அளிக்க 40,000 இற்கும் அதிகமான பேரு நாட்டு ரசிகர்கள் ரஷ்யாவுக்கு வருகை தந்துள்ளனர். பேரு அணி தனது ஆரம்ப போட்டியில் டென்மார்க்கிற்கு போதுமான அளவு நெருக்கடி கொடுத்ததை காண முடிந்தது.

மறுபுறும் டென்மார்க் அணி தனது ஐந்து உலகக் கிண்ண ஆரம்ப போட்டிகளில் நான்கில் வெற்றியீட்டியுள்ளது. அந்த அணி 2010 உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்துடனான ஆரம்ப போட்டியில் மாத்திரமே தோல்வியை சந்தித்தது.  

ஆர்ஜன்டீனாவுடனான போட்டியை சமநிலையில் முடித்த ஐஸ்லாந்து

லியோனல் மெஸ்ஸி பெனால்டி வாய்ப்பை தவறவிட உலகக் கிண்ணத்தில் பங்கேற்றிருக்கும் உலகின் மிகச் சிறிய நாடான ஐஸ்லாந்துடனான ஆரம்ப போட்டியை ஆர்ஜன்டீன அணி 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடித்துள்ளது.

உலகக் கிண்ணத்தின் D குழுவுக்காக  ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் ஸ்பார்டாக் அரங்கில் இன்று (16) நடைபெற்ற போட்டியின் ஆரம்பம் முதலே ஆர்ஜன்டீனா பெரும்பாலும் பந்தை தம்வசம் வைத்துக் கொண்டது.

இதன் மூலம் 19 ஆவது நிமிடத்தில் அகுவெரா ஆர்ஜன்டீனாவுக்காக கோல் புகுத்தி அணியை முன்னிலைபெறச் செய்தார். எனினும் வெறும் நான்கு நிமிடங்கள் இடைவெளியில் முதல் முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கி இருக்கும் ஐஸ்லாந்து அணி பதில் கோல் போட்டு சமநிலைக்கு கொண்டுவந்தது.

பின்பொகாசன் (Alfred FINNBOGASON) ஐஸ்லாந்து அணிக்காக 23 ஆவது நிமிடத்தில் முதல் உலகக் கிண்ண கோலை புகுத்தினார்.

இந்நிலையில் போட்டியின் 64 ஆவது நிமிடத்தில் மெஸ்ஸிக்கு பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. அப்போது கிடைத்த ஸ்பொட்-கிக்கை (Spot-kick) அவர் உதைக்க ஐஸ்லாந்து கோல்காப்பாளர் ஹான்ஸ் ஹல்டோர்சன் இலகுவாக தடுத்தார்.  

கழக மட்டத்திலும் தேசிய மட்டத்திலும் அதிக கோல் புகுத்தும் வீரராக இருந்தபோதும் மெஸ்ஸி பெனால்டி கோல் பெறுவதில் தொடர்ந்து தடுமாற்றம் கண்டு வருகிறார்.

2018 உலகக் கிண்ணம்: ஜெர்மனி அணியின் முன்னோட்டம்

கடைசியாக 1962 ஆம் ஆண்டு பிரேசில் அணியாலேயே உலகக் கிண்ணத்தை வெற்றிகரமாக தக்கவைத்துக் கொள்ள முடிந்தது…

கழகம் மற்றும் தேசிய அணி என்று இரண்டுக்கும் மெஸ்ஸி கடைசியாக பெற்ற ஏழு பெனால்டி வாய்ப்புகளில் தவறவிட்ட நான்காவது முயற்சி இதுவாகும். ஒட்டுமொத்தமாக மெஸ்ஸி தனது கால்பந்து வாழ்வில் பெற்ற 103 பெனால்டி வாய்ப்புகளில் 24 பெனால்டிகளை தவறவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபுறம் நேர்த்தியான தற்காப்பு ஆட்டம் ஒன்றை வெளிப்படுத்திய ஐஸ்லாந்து அணி இந்த போட்டியை சமநிலை செய்திருப்பது அந்த அணி வெற்றி பெற்றதற்கு நிகராகும்.

இதன் மூலம் D குழுவில் ஆர்ஜன்டீனா மற்றும் ஐஸ்லாந்து ஆகிய அணிகள் தலா ஒரு புள்ளியை பெற்றிருக்கும் நிலையில் ஆர்ஜன்டீன அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற போராட வேண்டி ஏற்பட்டுள்ளது.

ஆர்ஜன்டீன அணி எதிர்வரும் 21 ஆம் திகதி குரோஷியாவை எதிர்கொள்ளவுள்ளது.

அவுஸ்திரேலியா உடனான போட்டியில் பிரான்ஸ் நெருக்கடியுடன் வெற்றி

உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் பலம் மிக்க பிரான்ஸ் அணி அவுஸ்திரேலியாவுடனான முதல் போட்டியில் நெருக்கடிக்கு பின் 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இரு பெனால்டிகளோடு போட்டி சமநிலை பெற்றபோது கடைசி நிமிடங்களில் போல் பொக்பா (Paul Pogba) கோல் புகுத்தி பிரான்ஸுக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். இந்த போட்டியில் முதல் முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் வீடியோ உதவி தொழில்நுட்பம் (VAR) அதிகம் செல்வாக்கு செலுத்தியது.

ரஷ்யாவின் கசான் நகரில் C குழுவுக்கான முதல் ஆட்டமாகவே இன்று (16) பிரான்ஸ் அணி அவுஸ்திரேலியாவை எதிர்கொண்டது. 2016 ஐரோப்பிய கிண்ணத்தில் இரண்டாவது இடத்தை பிடித்த டிடியர் டிஸ்சம்ப்ஸின் பிரான்ஸ் அணி போட்டி ஆரம்பித்தது தொடக்கம் வேகமாக ஆடி எதிரணி கோல் கம்பத்தை அடிக்கடி ஆக்கிரமித்தபோதும் அவுஸ்திரேலிய வீரர்களின் உறுதியான தற்காப்பு ஆட்டத்தின் முன் முதல் பாதியில் கோல் பெற முடியவில்லை.

இரண்டாவது பாதி ஆட்டம் ஆரம்பித்தபோது பந்தை கடத்திச் சென்ற அன்டோனியோ க்ரிஸ்மனை அவுஸ்திரேலிய வீரர் ஜோஷ் ரிஸ்டன் குறுக்கிட்டதை அடுத்து வீடியோ உதவி தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது. இதன் மூலம் பிரான்ஸ் அணிக்கு 54 ஆவது நிமிடத்தில் பெனால்டி கோல் ஒன்று கிடைத்தது. இந்த தொழில்நுட்ப உதவி மூலம் உலகக் கிண்ணத்தில் பெறப்பட்ட முதல் கோலாக இது இருந்தது.

எவ்வாறாயினும் பிரான்ஸ் பின்கள வீரர் சாமுவேல் உம்டிடி (Samuel UMTITI) அவுஸ்திரேலிய வீரர் உதைத்த ப்ரீ கிக் பந்தை கையால் தொட அவுஸ்திரேலிய அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் அந்த அணி 62 ஆவது நிமிடத்தில் போட்டியை சமநிலை செய்தது.  

எனினும் போட்டியின் 80 ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் போக்பா பந்தை உயர உதைக்க அது கோல் கம்பத்தில் பட்டு ஒரு அங்குலம் எல்லைக்குள் புகுந்து வெளியே வந்தது. சிறு குழப்பத்திற்கு பின் அந்த கோல் உறுதி செய்யப்பட்டது.

இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் C குழுவில் 3 புள்ளிகளுடன் பிரான்ஸ் உலகக் கிண்ணத்தை ஆரம்பித்துள்ளது.  

>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<