ரொனால்டோவின் ஹெட்ரிக் கோலால் ஸ்பெயினுடனான போட்டியை சமன் செய்த போர்த்துக்கல்

520
Image Courtesy - AFP

கிறிஸ்டியானோ ரொனால்டோவின் ஹெட்ரிக் கோல் சாகசத்தால் ஸ்பெயினுடனான பரபரப்பான போட்டியை போர்த்துக்கல் அணி 3-3 என்ற கோல்கள் கணக்கில் சமநிலை செய்தது.

பிஃபா உலகக் கிண்ண போட்டியின் B குழுவின் பலம் கொண்ட இரு அணிகளுக்கு இடையிலான போட்டியாக நடைபெற்ற இந்த ஆட்டம் சமநிலையில் முடிந்ததால் இரு அணிகளும் தலா ஒரு புள்ளியை பெற்றுக்கொண்டதோடு ஈரான் அந்த குழுவில் 3 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

ரஷ்யாவின் சொச்சி (Sochi) நகரில் நடைபெற்ற இப்போட்டியில் போர்த்துக்கல் அணித் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 4 ஆவது நிமிடத்திலேயே பெனால்டி வாய்ப்பொன்றை பெற்று தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். தொடர்ந்து ஸ்பெயின் கோல்காப்பாளர் டேவிட் டி கீ, ரொனால்டோ உதைத்த பந்தை இலகுவாக தடுக்க முடிந்தபோதும் அதனை கைநழுவவிட போர்த்துக்கல் அணி 44 ஆவது நிமிடத்தில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற்றது.

ஸ்பெயின் பயிற்றுவிப்பாளர் அதிரடி நீக்கம்

பிபா உலகக் கிண்ண போட்டியில் போர்த்துக்கல்லுக்கு எதிராக தனது முதல் போட்டியில்…

எனினும் டியாகோ கொஸ்டா 22, 55 ஆவது நிமிடங்களில் அபார இரட்டை கோல்களை பெற ஸ்பெயின் அணியால் போட்டியை 2-2 என சமநிலைக்கு கொண்டுவர முடிந்தது.

எனினும் 58 ஆவது நிமிடத்தில் நாசோ (Nacho) பெனால்டி எல்லைக்கு விளிம்பில் இருந்து ரொக்கெட் வேகத்தில் உதைத்த பந்தை போர்த்துக்கல் கோல்காப்பாளரால் தடுக்க முடியாமல் போனது. இதன் மூலம் ஸ்பெயின் அணி 3-2 என்ற கோல்கள் கணக்கில் முன்னிலை பெற முடிந்தது.

சமநிலை கோலை புகுத்தும் நெருக்கடியுடன் ஆடிக்கொண்டிருந்த போர்த்துக்கல் அணிக்கு ரொனால்டோ தனது நட்சத்திர ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 88 ஆவது நிமிடத்தில் ப்ரீ கிக் வாய்ப்பை பெற்ற ரொனால்டோ பந்தை உயரச் சென்று வலைக்குள் விழுமாறு கோலாக மாற்றினார். இதன் மூலம் ரொனால்டோ தனது 51 ஆவது ஹட்ரிக் கோலை பெற்றார்.

ஸ்பெயின் அணி இரு தினங்களுக்கு முன்னர் தனது பயிற்றுவிப்பாளர் ஜுலன் லொபெடகுய்யை நீக்கிய நிலையிலேயே உலகக் கிண்ணத்தின் முதல் போட்டியில் களமிறங்கி இருந்தது. இந்த போட்டியில் பெரும்பாலான நேரம் ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தியபோதும் ஆரம்பத்தில் துரதிஷ்டவசமாக விட்டுக்கொடுத்த கோல்கள் அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது.


பரபரப்பான போட்டியில் ஓன் கோலால் வென்ற ஈரான்

மொரோக்கோ உடனான கடும் போட்டி நிலவிய ஆட்டத்தில் கடைசி தருவாயில் ஓன் கோல் (Own Goal) ஒன்றின் மூலம் ஈரான் அணி உலகக் கிண்ணத்தை வெற்றியுடன் ஆரம்பித்தது. மொரோக்கோ அணி 94 நிமிடங்களாக சரிநிகராக ஆடியபோதும் கடைசியில் செய்த சிறு தவறு பாதகமாக மாறியது.

ஈரான் அணி 1998 ஆம் ஆண்டு அமெரிக்காவை 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பின் உலகக் கிண்ணத்தில் முதல் வெற்றியை பெற்று தனது D குழுவில் தீர்க்கமான 3 புள்ளிகளை பெற்றுக்கொண்டது.

உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பேர்க் அரங்கில் வெள்ளிக்கிழமை (15) நடைபெற்ற இந்த போட்டியில் மொரோக்கோ அணி எதிரணி கோல் கம்பத்தை அதிகமுறை ஆக்கிரமித்தது. அந்த அணி ஈரானை விடவும் அதிகமுறை கோலை நோக்கி பந்தை செலுத்தியது.

குறிப்பாக ஹகிம் சியச் (Hakim ZIYACH) கோலை நோக்கி அடித்த பந்தை ஈரான் கோல் காப்பாளர் அலிரேசா பெய்ரன்வன்ட் (Ali BEIRANVAND) அபாரமாக தடுத்தார்.

அதேபோன்று மொரோக்கோ வீரர்களிடமே அதிக நேரம் பந்து இருந்தது. மறுபுறம் ஈரானும் அதற்கு நிகராக ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

எனினும் மொரோக்கோ அணியின் மாற்று வீரராக வந்த அஸிஸ் பெஹத்தௌஸ் 95 ஆவது நிமிடத்தில் ஈரானின் ப்ரீக் கிக் ஒன்றை தடுக்க கோல் எல்லைக்கு அருகில் இருந்து தலையால் முட்டியபோது அது தனது சொந்த வலைக்குள்ளேயே புகுந்தது.

உலகக் கிண்ண போட்டி ஒன்றில் மாற்று வீரர் ஒருவர் ஓன் கோல் விட்டுக்கொடுப்பது கடந்த 12 ஆண்டுகளில் இது முதல் முறையாகும். கடைசியாக 2006 ஆம் ஆண்டில் ஜெர்மனிக்கு எதிராக போர்த்துக்கல் அணிக்காக பெடிட் (Petit) ஓன் கோல் ஒன்றை பெற்றிருந்தார்.       

இம்முறை உலகக் கிண்ணத்தில் ஆபிரிக்க மண்டலத்தில் இருந்து வந்த இரண்டாவது அணியாகவே மொரோக்கோ கடைசி தருவாயில் எதிரணிக்கு கோல் விட்டுக்கொடுத்து தோல்வியை சந்தித்தது. முன்னதாக வெள்ளிக்கிழமை உருகுவே அணியுடனான போட்டியில் எகிப்து மேலதிக நேரத்தில் கோல் விட்டுக்கொடுத்து தோல்வி அடைந்தது.


கடைசி நேர கோலினால் எகிப்த்தை வீழ்த்திய உருகுவே

உருகுவே அணி கடைசி நேரத்தில் போட்ட கோல் மூலம் எகிப்துடனான உலகக் கிண்ண போட்டியில் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எகிப்து நட்சத்திரம் மொஹமது சலாஹ் ஆசனத்தில் அமர்த்திவைக்கப்பட்ட நிலையில் அந்த அணி கடைசி வரை கடுமையாக போராடியது.

ரஷ்யாவில் ஆரம்பமான பிஃபா உலகக் கிண்ண போட்டியின் இரண்டாவது ஆட்டமாக A குழுவில் இன்று (15) நடைபெற்ற இந்த போட்டியின் 90 ஆவது நிமிடத்தில் கார்லஸ் சன்செஸின் ப்ரீ கிக் மூலம் ஜோஸ் கிமனஸ் பந்தை தலையால் முட்டி உருகுவே அணிக்கு வெற்றி கோலை பெற்றுக் கொடுத்தார்.   

ரஷ்யாவின் கோல் மழையுடன் உலகக் கிண்ண போட்டி ஆரம்பம்

போட்டியை நடாத்தும் ரஷ்யா, பெரும் கோல் மழையுடன் இம்முறை உலகக் கிண்ண கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைத்துள்ளது……

போட்டி ஆரம்பம் தொடக்கம் உருகுவே அணி கோல்பெற முயற்சித்தபோதும் கடைசி நேரம் வரை ஆட்டம் இழுபறியோடே நீடித்தது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லுவிஸ் சுவாரெஸ் நான்கு கோல் வாய்ப்புகளை தவறவிட்டார்.

எனினும் இந்த பருவத்தில் லிவர்பூல் அணிக்காக 44 கோல்களை பெற்ற சலாஹ் இந்த போட்டியில் எகிப்து அணிக்காக களமிறங்கவில்லை. கடந்த மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் லீக் தொடரில் தோள்பட்டையில் காயத்திற்கு உள்ளான அவர் தொடர்ந்தும் அதில் இருந்து மீண்டு வருகிறார்.

சலாஹ் இன்றி எகிப்து அணி எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமிக்க தவறியது. 1990 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ண போட்டியில் முதல் முறை களமிறங்கிய எகிப்து முதல் போட்டியில் தோல்வியுற்றிருக்கும் நிலையில் அந்த அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு சவூதி அரேபியா மற்றும் ரஷ்ய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் சோபிக்க வேண்டியுள்ளது.

எகிப்து, வரும் செவ்வாய்க்கிழமை ரஷ்யாவை எதிர்கொள்ளவிருப்பதோடு அந்த போட்டியில் மொஹமது சலாஹ் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சலாஹ்வின் 26 ஆவது பிறந்த நாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது.       

இரண்டு முறை உலக சம்பியனான உருகுவே இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் A குழுவில் 3 புள்ளிகளை பெற்று ரஷ்யாவுக்கு அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளது.

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<