ஆசிய ரக்பி தொடர் குழாமிலிருந்து யோசித ராஜபக்ஷவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது

117

ஆசிய ரக்பி போட்டித் தொடருக்கான 40 பேர் கொண்ட இலங்கை குழாமிலிருந்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோசித ராஜபக்ஷவின் பெயர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது.

ஆசிய ரக்பி போட்டித் தொடர், எதிர்வரும் மே மாதம் 9ஆம் திகதி பிலிப்பைன்ஸில் ஆரம்பமாகவுள்ளது.

இந்நிலையில் இப்போட்டியில் கலந்துகொள்ளும் ரக்பி வீரர்கள் பட்டியலில், யோசித்த இடம்பெறவில்லை.

எனினும் வீரர்களின் இறுதிப் பெயர் பட்டியல் நாளைய தினம் கிடைக்கும் வரை, எவ்வித பதிலும் கூறமுடியாதென இலங்கை ரக்பி வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரொஹான் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை ரக்பி அணியின் தலைவராக மூன்றுவருட காலம் யோசித்த பதவி வகித்தார். குறிப்பாக 2012ஆம் ஆண்டில் ரக்பி தொடரில் இரண்டாம் இடத்தையும், 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற ரக்பி போட்டியில் சாம்பியன் பட்டத்தை வென்று ஆசியாவின் நான்காம் இடத்தை பிடித்தமையும் குறிப்பிடத்தக்கது.