இரண்டாவது பயிற்சிப் போட்டியில் இலங்கை அணிக்கு பலம் சேர்த்த சரித் அசலங்க

855

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் கொழும்பு கிரிக்கெட் கழக மைதானத்தில் (CCC) இன்று (02) ஆரம்பித்த இரண்டாவது பயிற்சிப் போட்டி சமனிலையில் முடிவுக்கு வந்தது.

இரண்டு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது பயிற்சிப் போட்டி நேற்று ஆரம்பிக்கப்படவிருந்த நிலையில், சீரற்ற காலநிலை காரணமாக நாணய சுழற்சியும் இன்றி, முதல் நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. இந்தநிலையில் இன்றைய தினம் இரண்டு அணிகளுக்கும் தலா 50 ஓவர்கள் என்ற அடிப்படையில் போட்டி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.  

சமனிலையில் முடிவடைந்த முதலாவது பயிற்சிப் போட்டி

இலங்கை கிரிக்கெட் சபை பதினாருவர் அணிக்கு எதிராக கொழும்பு என்.சி.சி. மைதானத்தில் நடைபெற்ற முதலாவது இரண்டு

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து. இதன்படி களமிறங்கிய இங்கிலாந்து அணி, பென் ஸ்டோக்ஸின் அரைச்சதம் மற்றும் கீடொன் ஜென்னிங்ஸ் மற்றும் செம் கரன் ஆகியோரின் துடுப்பாட்ட பங்களிப்புடன், 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 210 ஓட்டங்களை பெற்றது.

பென் ஸ்டோக்ஸ் 53 ஓட்டங்களை பெற்று, அடுத்துவரும் வீரருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் மைதானத்திலிருந்து வெளியேறினார். இவரைத் தொடர்ந்து கீடொன் ஜென்னிங்ஸ் 45 ஓட்டங்களுடன் வெளியேறி ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பை வழங்கினார். பின்னர் வருகைத்தந்த செம் கரன் 48 ஓட்டங்களையும், பென் போகஸ் 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின் இளம் வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார முதல் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். இவர் 19 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார் என்பதுடன், ஜெப்ரி வெண்டர்சே ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர் அணியின், தலைவர் லஹிரு திரிமான்னே மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். எனினும் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் அஷித பெர்னாண்டோ, சரித் அசலங்க மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோரின் உதவியுடன் இலங்கை அணி, 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 200 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அஷித பெர்னாண்டோ ஒரு பந்துக்கு தலா ஒரு ஓட்டம் என 47 ஓட்டங்களை பெற்று ரன்அவுட் மூலமாக ஆட்டமிழந்த நிலையில், சரித் அசலங்க 68 ஓட்டங்களையும், ரொஷேன் சில்வா 29 ஓட்டங்களையும் பெற்று, ஏனைய துடுப்பாட்ட வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் உடைமாற்றும் அறைக்கு திரும்பினர்.

பின்னர் வருகைத்தந்த, மனோஜ் சரத்சந்திர மற்றும் செஹான் மதுசங்க ஆகியோர் முறையே 14 மற்றும் 12 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, ஆட்டநேர முடிவில் இலங்கை அணி 200 ஓட்டங்களை பெற்றது. இங்கிலாந்து அணி சார்பாக செம் கரன், ஒல்லி ஸ்டோன், ஜெக் லீச் மற்றும் ஸ்டுவர்ட் புரோட் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதன்படி, டெஸ்ட் போட்டிக்கு முன்னதான இரண்டு பயிற்சிப் போட்டிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கைஇங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் எதிர்வரும் 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டி சுருக்கம்









Title





Full Scorecard

England

210/6 & 0/0

(0 overs)

Result

SL board XI

200/7 & 0/0

(0 overs)

England ‘s 1st Innings

Batting R B
Rory Burns c N Peiris b L Kumara 19 30
Keaton Jennings not out 45 95
Joe Denly lbw by L Kumara 0 2
Ollie Pope c M Sarathchandra b L Kumara 0 2
Ben Stokes not out 53 58
Jos Butler c K Mendis b J Vandersay 25 37
Sam Curran not out 48 50
Ben Foakes not out 19 26
Extras
1 (w 1)
Total
210/6 (50 overs)
Fall of Wickets:
1-28 (RJ Burns, 6.3 ov), 2-28 (JL Denly, 6.5 ov), 3-28 (OJ Pope, 8.1 ov), 4-108 (BA Stokes, 28.6 ov), 5-128 (KK Jennings, 32.6 ov), 6-155 (JC Buttler, 42.2 ov)
Bowling O M R W E
Lahiru Kumara 7 0 19 3 2.71
Dushmantha Chameera 9 1 35 0 3.89
Nishan Peiris 13 3 61 0 4.69
Shehan Madushanka 5 0 30 0 6.00
Jeffrey Vandersay 16 2 65 1 4.06

SL board XI’s 1st Innings

Batting R B
Avishka Fernando (runout) J Anderson 47 47
Lahiru Thirimanne c J Root b S Curran 3 20
Sadeera Samarawickrama c J Root b S Broad 10 8
Roshen Silva not out 29 83
Charith Asalanka not out 68 64
Ashan Priyanjan b O Stone 3 8
Kamindu Mendis b J Leach 12 19
Manoj Sarathchandra not out 14 34
Shehan Madushanka not out 12 17
Extras
2 (lb 2)
Total
200/7 (50 overs)
Fall of Wickets:
1-10 (HDRL Thirimanne, 5.2 ov), 2-21 (S Samarawickrama, 6.6 ov), 3-64 (WIA Fernando, 15.6 ov), 4-158 (ARS Silva, 36.6 ov), 5-158 (KIC Asalanka, 36.6 ov), 6-173 (PHKD Mendis, 41.2 ov), 7-175 (SMA Priyanjan, 42.4 ov)
Bowling O M R W E
Stuart Broad 5 1 10 1 2.00
Sam Curran 6 2 31 1 5.17
Jack Leach 13 3 29 1 2.23
Olly Stone 7 0 36 1 5.14
Joe Denly 5 0 43 0 8.60
Ben Stokes 6 1 24 0 4.00
Moeen Ali 7 0 18 0 2.57
Joe Root 1 0 7 0 7.00







 மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க