நீல நிறங்களின் சமரில் கிண்ணத்தை கைப்பற்றப்போவது யார்?

84

இலங்கை பாடசாலை கிரிக்கெட் பெரும் சமர்களில் முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் ஒன்றான நீல நிறங்களின் சமர் என்று அழைக்கப்படும் கல்கிஸ்சை புனித தோமியர் மற்றும் கொழும்பு றோயல் கல்லூரிகளுக்கு இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க மாபெரும் கிரிக்கெட் சமர், 141வது தடவையாக கொழும்பு SSC மைதானத்தில் நாளை (12) முதல் எதிர்வரும் 14ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் வெற்றி

இன்று (9) யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று முடிந்திருக்கும்…

உலகின் மிகவும் பழைமையான கிரிக்கெட் தொடர்களில் 2வது இடத்தை நீல நிறங்களின் சமர் பெற்றுக்கொண்டிருக்கிறது. முதலாவதாக இந்த தொடருக்கு ஒரு வருடத்துக்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட அவுஸ்திரேலியா அடிலெய்ட் நகரிலுள்ள புனித பேதுரு கல்லூரி மற்றும் பிரின்ஸ் அல்பர்ட் கல்லூரிக்கும் இடையே நடைபெற்றுவரும் போட்டியாக இடம்பிடித்துள்ளது.

வரலாறு

நீல நிறங்களின் சமர் கிரிக்கெட் போட்டி 1880ஆம் ஆண்டு கொழும்பு காலி முகத்திடலில உள்ள தாஜ் சமுத்திரா ஹோட்டலில் அமைந்துள்ள பகுதியில் நடைபெற்றுள்ளது. அன்று முதல் தொடர்ச்சியாக இப்போட்டியானது எந்தவொரு தடையுமின்றி நடைபெற்று நடைபெற்று வருகின்றது.

ஒட்டுமொத்தமாக இரண்டு அணிகளும் தலா 35 போட்டிகளில் வெற்றியை தக்கவைத்துள்ளதுடன், ஏனைய போட்டிகள் சமனிலையில் முடிவடைந்துள்ளன. 

இதில், 1985ம் ஆண்டு நடைபெற்ற நீல நிறங்களின் சமரானது மிகவும் சுவாரஷ்யமான ஒன்றாக அமைந்திருந்தது. குறித்த போட்டியில் றோயல் கல்லூரி அணி 9 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழக்க, இரண்டாவது நாள் ஆட்டம் கைவிடப்பட்டது. எனினும், இந்தப் போட்டியானது புனித தோமியர் கல்லூரியினால் வெற்றியாகவும், றோயல் கல்லூரி சார்பில் சமனிலையான போட்டியாகவும் கணக்கிடப்பட்டது.

றோயல் கல்லூரியானது இறுதியாக 2016ம் ஆண்டு கீஷாத் பண்டித்தரத்ன தலைமையில் வெற்றியை தக்கவைத்ததுடன், புனித தோமியர் கல்லூரி சித்தார ஹப்புஹின்ன தலைமையில் கடந்த வருடம் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

றோயல் கல்லூரி

கடந்த வருடம் டிவிஷன் 2இல் விளையாடிவந்த றோயல் கல்லூரி அணி, இந்த வருடம் முதல் டிவிஷனுக்கு முன்னேறியிருந்தது. இதன்படி, தெவிந்து சேனாரத்ன தலைமையில் இம்முறை 16 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 4 வெற்றிகளை பெற்றுக்கொண்டுள்ளது.

பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு

இந்த ஆண்டு 91ஆவது முறையாக நடைபெற்ற கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் …

எதிர் முடிவு
புனித அலோசியஸ் கல்லூரி   சமனிலை
இசிபத்தன கல்லூரி  வெற்றி
புனித செபஸ்தியன் கல்லூரி       சமனிலை
ரிச்மண்ட் கல்லூரி       சமனிலை
புனித பெனடிக் கல்லூரி  சமனிலை
புனித அந்தோனியார் கல்லூரி  வெற்றி
மஹிந்த கல்லூரி       சமனிலை
புனித ஜோசப் கல்லூரி  சமனிலை
புனித பேதுரு கல்லூரி  சமனிலை
டி.எஸ். சேனாநாயக்க கல்லூரி சமனிலை
மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி  சமனிலை
ஆனந்த கல்லூரி வெற்றி
டி மெசனோட் கல்லூரி  வெற்றி
ப்ரின்ஸ் ஒஃப் வேல்ஸ் கல்லூரி  சமனிலை
வெஸ்லி கல்லூரி  சமனிலை
திரித்துவக் கல்லூரி சமனிலை

எதிர்பார்ப்பு வீரர்கள்

றோயல் கல்லூரியை பொருத்தவரை, தேசிய இளையோர் அணியில் விளையாடிய கமில் மிஷார, அஹான் விக்ரமசிங்க ஆகியோர் முக்கியமான துடுப்பாட்ட வீரர்களாக உள்ளனர். இவர்களுடன், கவிந்து மதரசிங்க மற்றும் இசிவர திஸாநாயக்கவும் இந்த பருவகாலத்தில் அணிக்காக அதிசிறந்த துடுப்பாட்ட பிரதிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

முக்கிய சுழல் பந்துவீச்சாளர்களாக ப்ரஷான் கல்ஹார மற்றும் கிஷான் பாலசூரிய ஆகியோர் உள்ளதுடன், இவர்கள் இருவரும் இந்த பருவகாலத்தில் 50 விக்கெட்டுகளுக்கும் அதிகமாக வீழ்த்தியுள்ளனர். வேகப் பந்துவீச்சை அணித் தலைவர் தெவிந்து சேனாரத்னவுடன், லஹிரு மதுசங்க மற்றும் கவிந்து பத்திரன ஆகியோர் வழிநடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச பதினொருவர் 

கவுஷான் குலசூரிய, கமில் மிஷார, கவிந்து மதரசிங்க, அஹான் விக்ரமசிங்க, டசிஸ் மன்சநாயக்க/இசிவர திசாநாயக்க, தித்திர வீரசிங்க, கவிந்து பதிரன, தெவிந்து சேனாரத்ன (தலைவர்), ப்ரஷான் கல்ஹார, கிஷான் பாலசூரிய, லஹிரு மதுசங்க

புனித தோமியர் கல்லூரி

கல்கிஸ்ஸை புனித தோமியர் கல்லூரி அணி, தெவின் இரியாக தலைமையில் தோல்வியுறாத அணியாக இந்த பருவகாலத்தில் விளையாடி வருகின்றது. இதுவரை, 17 போட்டிகளில் விளையாடியுள்ள இந்த அணி 4 வெற்றிகளையும் சுவைத்துள்ளது. 

எதிர் முடிவு
புனித அந்தோனியார் கல்லூரி சமனிலை
தர்மபால வித்தியாலயம் வெற்றி
தர்மராஜ கல்லூரி சமனிலை
புனித செர்வதியஸ் கல்லூரி சமனிலை
மொரட்டுவ மஹா வித்தியாலயம் சமனிலை
புனித ஏன்ஸ் கல்லூரி சமனிலை
ஆனந்த கல்லூரி வெற்றி
ப்ரின்ஸ் ஓஃப் வேல்ஸ் சமனிலை
சென். ஜோன்ஸ் கல்லூரி வெற்றி
புனித பேதுரு கல்லூரி சமனிலை
சென். ஜோசப் கல்லூரி சமனிலை
நாலந்த கல்லூரி சமனிலை
தர்மாசோக கல்லூரி வெற்றி
புனித பெனடிக் கல்லூரி சமனிலை
வெஸ்லி கல்லூரி சமனிலை
ட்ரிண்டி கல்லூரி சமனிலை
திரித்துவக் கல்லூரி சமனிலை

எதிர்பார்ப்பு வீரர்கள்

சிறந்த துடுப்பாட்ட வீரர்களை கொண்ட அணியாக இந்தமுறை வலம் வரும் புனித தோமியர் கல்லூரி அணி ரியான் பெர்னாண்டோ, மனீஷ ரூபசிங்க மற்றும் கடந்த முறை பெரும் சமரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவுசெய்யப்பட்ட உமயங்க சுவரிஸ் ஆகியோரை இந்த அணி கொண்டுள்ளது.

ராஜன் கதிர்காமர் சவால் கிண்ணம் புனித பத்திரிசியார் கல்லூரி வசம்

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கு எதிரான 28 ஆவது ராஜன் கதிர்காமர் சவால் கிண்ண ஒருநாள் போட்டியில்…

இவர்கள் அனைவரும் இந்த பருவகாலத்தில் 500 ஓட்டங்களை கடந்துள்ளனர். அத்துடன், மற்றுமொரு நட்சத்திர துடுப்பாட்ட வீரரான ரவிந்து டி சில்வா தென்னாபிரிக்காவில் நடைபெற்று முடிந்த இளையோர் உலகக் கிண்ணத்தில் இரண்டாவது அதிகூடிய ஓட்ட எண்ணிக்கையை விளாசியிருந்தார்.

இந்த அணியின் பந்துவீச்சினை சுழல் பந்துவீச்சாளர் டில்மின் ரத்நாயக்க வழிநடத்துவார் என எதிர்பார்க்கின்றது. இந்த பருவகாலத்தில் இவர் 64 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அத்துடன், தேசிய இளையோர் அணிக்காக விளையாடி வரும் யசிரு ரொட்ரிகோவும் அணியின் பந்துவீச்சை பலப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தேச பதினொருவர் 

டில்மின் ரத்நாயக்க, ஷாலின் டி மெல், ரவிந்து டி சில்வா, ரியான் பெர்னாண்டோ, கிஷான் முனசிங்க, உமயங்க சுவாரிஸ், மனீஷ ரூபசிங்க, கவிந்து பொதேஜு, தெவின் இரியாகம (தலைவர்), யசிரு ரொட்ரிகோ, கனிஷ்டன் குணரத்னம்

இரண்டு அணிகளும் அதிகமாக துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்புடன் தங்களுடைய ஆதிக்கங்களை இந்த பருவகாலத்தில் செலுத்தி வருகின்றன. அதனால், எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த சமரில் அணிகளின் பந்துவீச்சு வெளிப்படுத்தல்கள் போட்டியின் திசையில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.

அத்துடன், இந்த பருவகாலத்தில் இரண்டு அணிகளின் வெளிப்படுத்தல்களை பார்க்கும் போது, எந்த அணி வெற்றியை பெற்றுக்கொள்ளும் என்பதை இலகுவாக கூற முடியாது. எனினும், எதிர்வரும் மூன்று போட்டி தினங்களிலும் எந்த அணி மிகச்சிறந்த கிரிக்கெட் ஆடுகின்றதோ அந்த அணி புதிய தசாப்தத்தின் முதல் வெற்றியை பெற்றுக்கொள்ளும்.

இன்னிங்ஸ் வெற்றியுடன் வடக்கின் சமர் சம்பியனான சென். ஜோன்ஸ்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணிகள் இடையிலான…

141வது நீல நிறங்களின் சமரை சுவாரஷ்யமாகவும், நேரடியாகவும் எதிர்வரும் மூன்று தினங்களிலும் வழங்க ThePapare.com காத்திருக்கிறது. அத்துடன், இந்தப் போட்டி எதிர்வரும் 3 நாட்களிலும் காலை 09.00 மணி முதல் டயலொக் டீவி மற்றும் Mytv போன்றவற்றிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க