Home Tamil பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு

பழுப்பு வர்ணங்களின் சமர் சமநிலையில் நிறைவு

124
91st Battle of the Maroons

இந்த ஆண்டு 91ஆவது முறையாக நடைபெற்ற கொழும்பு ஆனந்த கல்லூரி மற்றும் நாலந்த கல்லூரி அணிகள் இடையிலான “பழுப்பு வர்ணங்களின் சமர்”  (Battle ot the Maroons) என அழைக்கப்படும் கிரிக்கெட் பெரும் போட்டி சமநிலையில் நிறைவுக்கு வந்திருக்கின்றது.

86ஆவது புனிதர்கள் சமர் சமநிலையில் முடிவு

புனித ஜோசப் கல்லூரி மற்றும் புனித பேதுரு கல்லூரிகளுக்கு இடையிலான 86 ஆவது புனிதர்களுக்கு

கொழும்பு SSC மைதானத்தில் கடந்த சனிக்கிழமை (07) ஆரம்பமாகிய இரண்டு நாட்கள் கொண்ட இந்த கிரிக்கெட் பெரும் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற கனிஷ்க ரன்திலக்க தலைமையிலான ஆனந்த கல்லூரி அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை நாலந்த கல்லூரி வீரர்களுக்கு வழங்கியது.

இதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய நாலந்த கல்லூரி வீரர்கள் 307 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து வலுப்பெற்று காணப்பட்ட போது, தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை இடைநிறுத்தினர். 

Photos – Ananda College vs Nalanda College | 91st Battle of the Maroons – Day 1

நாலந்த அணியின் துடுப்பாட்டம் சார்பாக, சதம் பெற்ற ரவின் டி சில்வா 81 பந்துகளுக்கு 4 சிக்ஸர்கள் மற்றும் 11 பெளண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற, அரைச்சதம் பெற்ற வீரர்களில் ரசன் திஸ்ஸநாயக்க 77 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருந்தார். இதேநேரம், இலங்கை கனிஷ்ட கிரிக்கெட் அணி வீரரான சமிந்து விஜேசிங்க 56 ஓட்டங்கள் எடுத்திருந்தார். 

ஆனந்த கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் தினேத் ப்ரேமோதித்த 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Photos: Ananda College vs Nalanda College | 91st Battle of the Maroons – Day 2

பின்னர் தமது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்த, ஆனந்த கல்லூரி அணி முதல் இன்னிங்ஸில் 150 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. ஆனந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக, நெத்ம கருணாரத்ன 59 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடிய ஓட்டங்களைப் பதிவு செய்தார்.

மறுமுனையில் நாலந்த கல்லூரி அணியின் பந்துவீச்சில் ஜித்தேஷ் வாசல 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ரவின் டி சில்வா 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

பின்னர், எதிரணி வீரர்களை விட முதல் இன்னிங்ஸ் ஓட்டங்கள் போதாது என்பதால், 157 ஓட்டங்கள் பின்தங்கியவாறு ஆனந்த கல்லூரி அணி பலோவ் ஒன் முறையில் தமது இரண்டாம் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.

பின்னர், போட்டியின் இரண்டாம் நாள் இறுதிவரை துடுப்பாடிய ஆனந்த கல்லூரி அணி 69 ஓவர்களுக்கு 7 விக்கெட்டுக்களை இழந்து 225 ஓட்டங்கள் பெற்ற நிலையில், ஆட்டமும் சமநிலையில் முடிவடைந்தது.

ஆனந்த கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பாக அரைச்சதம் பெற்ற ஹன்சஜ விஜேசிங்க 89 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் இருக்க, அணித்தலைவர் கனிஷ்க ரன்திலக்க 67 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.

இதேநேரம், நாலந்த கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பில் ரவின் டி சில்வா 65 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியின் சமநிலை முடிவுடன் பழுப்பு வர்ணங்களினு சமர் 73ஆவது முறையாக சமநிலையில் முடிவடைந்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

Result

Match drawn

Ananda College
150/10 (51) & 225/7 (69)

Nalanda College
307/4 (54.5)

Batsmen R B 4s 6s SR
Avishka Perera c Hansaja Jayasinghe b Shashika Umayanga 26 33 4 0 78.79
Ranindu de Silva c Deneth Pramoditha Nissanka b J Jayawardene 28 59 3 0 47.46
Chamindu Wijesinghe c Shashika Umayanga b Deneth Pramoditha Nissanka 56 71 5 2 78.87
Raveen De Silva not out 100 81 11 4 123.46
Moksha Sankalpa c Mineth Premarathna b Deneth Pramoditha Nissanka 5 12 1 0 41.67
Rashan Dissanayanake not out 77 75 12 0 102.67


Extras 15 (b 1 , lb 4 , nb 2, w 8, pen 0)
Total 307/4 (54.5 Overs, RR: 5.6)
Fall of Wickets 1-52 (10.4) Avishka Perera, 2-89 (21.6) Ranindu de Silva, 3-143 (31.6) Chamindu Wijesinghe, 4-148 (33.6) Moksha Sankalpa,

Bowling O M R W Econ
Deneth Pramoditha Nissanka 10 2 34 2 3.40
Dasun Tharaka 12 0 75 0 6.25
Shashika Umayanga 13 1 77 1 5.92
J Jayawardene 12 1 77 1 6.42
Saviru Bandara 7.5 2 40 0 5.33
Batsmen R B 4s 6s SR
Anuda Jayaweera b Jithesh Wasala 13 10 3 0 130.00
Kanishka Rantilakage c Ranindu de Silva b Jithesh Wasala 11 8 2 0 137.50
Kalana Wijesiri c Ranindu de Silva b Jithesh Wasala 3 11 0 0 27.27
Nethma Karunaratne lbw b Raveen De Silva 59 132 9 0 44.70
Shashika Umayanga c Avishka Perera b Jithesh Wasala 0 5 0 0 0.00
Hansaja Jayasinghe b Mahima Weerakoon 26 55 4 0 47.27
Janindu Jayaweera c Moksha Sankalpa b Anudha Jithwara 7 48 0 0 14.58
Dasun Tharaka c Ranindu de Silva b Jithesh Wasala 2 11 0 0 18.18
Saviru Bandara not out 13 27 2 0 48.15
Mineth Premarathna lbw b Raveen De Silva 2 5 0 0 40.00
Deneth Pramoditha Nissanka c Chamindu Wijesinghe b Jithesh Wasala 4 4 1 0 100.00


Extras 10 (b 0 , lb 0 , nb 10, w 0, pen 0)
Total 150/10 (51 Overs, RR: 2.94)
Fall of Wickets 1-21 (2.3) Kanishka Rantilakage, 2-27 (3.2) Anuda Jayaweera, 3-34 (7.1) Kalana Wijesiri, 4-34 (7.6) Shashika Umayanga, 5-67 (23.3) Hansaja Jayasinghe, 6-100 (37.3) Janindu Jayaweera, 7-113 (42.2) Dasun Tharaka, 8-0 (47.5) Nethma Karunaratne, 9-143 (49.6) Mineth Premarathna, 10-150 (50.6) Deneth Pramoditha Nissanka,

Bowling O M R W Econ
Dineth Samaraweera 15 4 43 1 2.87
Jithesh Wasala 17 4 63 5 3.71
Ranindu de Silva 2 1 1 0 0.50
Raveen De Silva 7 1 28 2 4.00
Mahima Weerakoon 3 1 6 1 2.00
Chamodya Rajapaksha 2 0 2 0 1.00
Anudha Jithwara 5 1 7 1 1.40


Batsmen R B 4s 6s SR
Kanishka Rantilakage c Rashan Dissanayanake b Anudha Jithwara 37 68 7 0 54.41
Anuda Jayaweera c Ranindu de Silva b Jithesh Wasala 6 20 0 0 30.00
Nethma Karunaratne c Moksha Sankalpa b Raveen De Silva 20 53 2 0 37.74
Mineth Premarathna b Raveen De Silva 6 17 1 0 35.29
Hansaja Jayasinghe not out 89 135 11 1 65.93
Dasun Tharaka c Vihanga Vimanga b Ranindu de Silva 29 82 4 0 35.37
Janindu Jayaweera c Mahima Weerakoon b Avishka Perera 7 33 0 0 21.21
Kalana Wijesiri c Chamindu Wijesinghe b Avishka Perera 0 5 0 0 0.00
Saviru Bandara not out 5 8 0 0 62.50


Extras 26 (b 12 , lb 9 , nb 4, w 1, pen 0)
Total 225/7 (69 Overs, RR: 3.26)
Fall of Wickets 1-15 (7.1) Anuda Jayaweera, 2-65 (22.6) Nethma Karunaratne, 3-66 (23.1) Kanishka Rantilakage, 4-76 (28.3) Mineth Premarathna, 5-187 (57.3) Dasun Tharaka, 6-209 (64.6) Janindu Jayaweera, 7-217 (66.5) Kalana Wijesiri,

Bowling O M R W Econ
Jithesh Wasala 10 2 29 1 2.90
Dineth Samaraweera 8 2 22 0 2.75
Anudha Jithwara 8 2 14 1 1.75
Mahima Weerakoon 8 0 28 0 3.50
Chamodya Rajapaksha 8 1 14 0 1.75
Raveen De Silva 18 2 65 2 3.61
Ranindu de Silva 6 0 16 1 2.67
Avishka Perera 3 0 16 2 5.33



முடிவு – போட்டி சமநிலையில் அடைந்தது

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க