IPL தொடரிலிருந்து வெளியேறும் வொசிங்டன் சுந்தர்!

IPL 2023

181

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சு சகலதுறை வீரரான வொசிங்டன் சுந்தர் உபாதை காரணமாக IPL தொடரிலிருந்து வெளியேறியுள்ளார்.

வொசிங்டன் சுந்தருக்கு தசைப்பிடிப்பு உபாதை ஏற்பட்டுள்ளதன் காரணமாக தொடரிலிருந்து வெளியேறியுள்ளாதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கோஹ்லி, வனிந்துவின் பிரகாசிப்புகள் வீண்; பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக இந்த ஆண்டு 7 போட்டிகளில் வொசிங்டன் சுந்தர் விளையாடியிருந்த போதும், முதல் 6 போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை கைப்பற்றவில்லை.

எனினும் கடைசியாக டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய போட்டியில் 24 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை சாய்த்ததுடன், 15 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் விளாசியிருந்தார். எவ்வாறாயினும் இந்தப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வியை சந்தித்திருந்தது.

வொசிங்டன் சுந்தர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாக IPL தொடரிலிருந்து பாதியில் வெளியேறிகின்றார். 2021ம் ஆண்டு விரலில் ஏற்பட்ட உபாதை காரணமாக வெளியேறிய இவர், 2022ம் ஆண்டு கொவிட்-19 தொற்று காரணமாக வெளியேறியிருந்தார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இந்த ஆண்டு IPL தொடரில் 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகளை மாத்திரமே பெற்றுள்ள நிலையில், 4 புள்ளிகளுடன் 9வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<