தமிமின் சதத்தினால் ஒருநாள் தொடர் பங்களாதேஷ் அணிக்கு

48

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பங்களாதேஷ் அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்குமிடையேயான ஒருநாள் தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் மூன்றாவதும் இறுதியுமான போட்டி நேற்று (28) நடைபெற்றது. போட்டியில் பங்களாதேஷ் அணி 18 ஓட்டங்களால் வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 2 – 1 என்ற அடிப்படையில் கைப்பற்றியது.

இறுதி ஓவரில் பங்களாதேஷ் அணியின் வெற்றியை பறித்த ஜேசன் ஹோல்டர்

கயானாவின் ப்ரோவிடன்ஸ் சர்வதேச விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற சுற்றுலா பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில்…….

தீர்மானம் மிக்க  இறுதிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பங்களாதேஷ் அணித்தலைவர்  மஷ்ரபி மொர்டசா முதலில் துடுப்பாட்டத்தை தீர்மானித்தார். அந்த வகையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தமிம் இக்பால் மற்றும் அனாமுல் ஹக் ஜோடி 35 ஓட்டங்களை   பெற்றிருந்த வேளை அனாமுல் ஹக் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல் ஹசன்  தமிம் இக்பாலுடன் ஜோடி சேர்ந்தார். முதலாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் இணைப்பாட்டமாக இரட்டை சதம் கடந்த இவ்விருவரும் நேற்றைய போட்டியிலும் மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டியிருந்தனர். இருப்பினும் இப்போட்டியில் இருவரும் இணைந்து 81 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.

அணியின் ஓட்ட எண்ணிக்கை 116 ஆக இருந்த போது ஷகிப் அல் ஹசன் 37 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார். கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய முஷ்பிகுர் ரஹீம் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, மறுமுனையில் சிறப்பாக விளையாடிய தமிம் இத்தொடரில் தனது இரண்டாவது சதத்தை பூர்த்தி செய்து 103 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டு தொடர்பில் மனம் திறக்கும் கிளேன் மெக்ஸ்வெல்

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான கிளேன் மெக்ஸ்வெல் தன்மீது மறைமுகமாக சுமத்தப்பட்டிருக்கும்…..

தொடர்ந்து மஹ்மதுல்லாஹ் மற்றும் அணித்தலைவர்  மஷ்ரபி மொர்டசா ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தின் மூலம் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 301 ஓட்டங்களை பெற்று வழுவான நிலையை அடைந்தது. மஷ்ரபி மொர்டசா 36 ஓட்டங்களையும் மஹ்மதுல்லாஹ் ஆட்டமிழக்காமல் 67 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர். பந்து வீச்சில் ஜேசன் ஹோல்டர் மற்றும் அஷ்லி நேர்ஸ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

பின்னர், 302 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணிக்கு கிறிஸ் கெய்ல் மற்றும் எவின் லுயிஸ் ஆகியோர் சிறப்பான ஆரம்பத்தை வழங்கியிருந்தனர். மேலும், மேற்கிந்திய தீவுகள் அணியின் முதல் மூன்று விக்கெட்டுக்களுக்கான இணைப்பாட்டங்கள் அரைச்சதம் கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  ஒரு கட்டத்தில் 172 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து வெற்றியை நோக்கி நகர்ந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் துடுப்பாட்டம் பங்களாதேஷ் பந்து வீச்சாளர்களால் முறியடிக்கப்பட்டது.  

மேற்கிந்திய தீவுகளின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 73 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழந்தார். மேலும் சாய் ஹோப் 64 ஓட்டங்களையும் அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்காக கடைசி வரை போராடிய ரோமன் பவல் ஆட்டமிழக்காமல் 41 பந்துகளில் 74 ஓட்டங்களையும் பெற்றிருந்தார்.

டெஸ்ட் தொடரில் சாதித்த இலங்கை ஒரு நாள் தொடரிலும் சாதிக்குமா?

விருந்தினர்களாக இலங்கைக்கு வந்த தென்னாபிரிக்க கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் தொடரில் வைட்வொஷினை பரிசளித்த……

எனினும், இறுதியில் 50 ஓவர்கள் நிறைவில் மேற்கிந்திய தீவுகள் அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 283 ஓட்டங்களை மட்டுமே பெற்று 18 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது. பந்து வீச்சில்  பங்களாதேஷ் அணி சார்பாக அணித்தலைவர் மஷ்ரபி மொர்டாசா இரண்டு விக்கெட்டுக்களையும் ஏனைய மூன்று பந்து வீச்சாளர்கள் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தியிருந்தனர்.

இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்த பங்களாதேஷ் அணியினர் ஒருநாள் தொடரில் சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றுள்ளனர். இது பங்களாதேஷ் அணிக்கு ஒன்பது வருடங்களுள் சொந்த மண்ணில் அல்லாமல் சுற்றுலா சென்று பெற்றுக்கொண்ட முதலாவது ஒருநாள் தொடர் வெற்றியாகும்.  மேலும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிராக பெற்றுக் கொண்ட முதலாவது ஒருநாள் தொடர் வெற்றி என்பதும் குறிப்பிடத்தக்கது. போட்டியின் ஆட்ட நாயகனாகவும் தொடரின் சிறப்பாட்டக்காரராகவும் பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமிம் இக்பால் தெரிவானார்.

இவ்விரு அணிகளுக்குமிடையிலான இரண்டு போட்டிகளைக் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 தொடர் எதிர்வரும் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் அணி – 301/6 (50) – தமிம் இக்பால் 103, மஹ்மதுல்லாஹ் 67* , அஷ்லி நேர்ஸ் 53/2, ஜேசன் ஹோல்டர் 55/2

மேற்கத்திய தீவுகள் அணி – 283/6 (50) – ரோமன் பவல்74* , கிறிஸ் கெய்ல் 73, சாய் ஹோப் 64, மஷ்ரபி மொர்டாசா 63/2

போட்டி முடிவு : பங்களாதேஷ் அணி 18 ஓட்டங்களால் வெற்றி.