அவுஸ்திரேலிய கிரிக்கட் அணி ஜூலை மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட், 5 ஒருநாள் சர்வதேசப் போட்டிகள் மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. இத்தொடரின் முதல் டெஸ்ட் போட்டி ஜூலை மாதம் 26ஆம் திகதி கண்டி பல்லேகலே விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.

டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள 15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய அணி குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக கடந்த 7 மாதங்களாக அவுஸ்திரேலிய அணியில் இடம்பெறாமல் இருந்த மிட்சல் ஸ்டார்க் குணமடைந்து விட்டார். இதனால் இவர் இந்தக் குழாமில் இணைக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல் தொடரின் இறுதிக்கட்டப் போட்டிகள்

15 பேர் கொண்ட அவுஸ்திரேலிய டெஸ்ட் குழாம்

1.ஸ்டீவ் ஸ்மித் (தலைவர்)
2.டேவிட் வோர்னர்
3.ஜெக்சன் பேர்ட்
4.ஜோ பர்ன்ஸ்
5.நாதன் கோல்ட்டர் நைல்
6.ஜோஷ் ஹெசில்வூட்
7.மொயிசஸ் ஹென்ரிக்ஸ்,
8.உஸ்மான் கவாஜா
9.நெதன் லியன்,
10.மிட்செல் மார்ஷ்,
11.ஷோன் மார்ஷ்,
12.பீட்டர் நெவில்,
13.ஸ்டீபன் ஓப்கீ,
14.மிட்செல் ஸ்டார்க்,
15.எடம் வோஜஸ்

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்