சர்வதேச அரங்கிற்கு விடைகொடுக்கவுள்ள தென்னாபிரிக்க சகலதுறை வீரர்

72

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சகலதுறை வீரரான வேர்னன் பிளண்டர் இங்கிலாந்து அணியுடன் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக இன்று (23) அறிவித்துள்ளார். 

இங்கிலாந்து கிரிக்கெட் அணி தென்னாபிரிக்காவுக்கு இருதரப்பு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச மற்றும் 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடர்களில்  ஆடவுள்ளது. 

சனத் ஜெயசூரியவின் 22 வருட சாதனையை தகர்த்த ரோஹிட் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் உபதலைவரும் அதிரடி ஆரம்ப….

இந்நிலையில் முதலில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிக்கும் 34 வயதுடைய வேர்னன் பிளண்டர் விடைகொடுக்கவுள்ளார். 1985 ஜூன் 24 இல் தென்னாபிரிக்காவின் பெல்வில்லி நகரில் பிறந்த வேர்னன் பிளண்டர் 2004ஆம் ஆண்டு தனது 19ஆவது வயதில் முதல்தர போட்டியில் அறிமுகம் பெற்றுக்கொண்டார். 

திறமையை சிறப்பாக வெளி உலகிற்கு கொண்டுவந்ததன் மூலம் தனது 22ஆவது வயதில் 2007ஆம் ஆண்டு முதல் முறையாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியில் விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. 2007 ஜுன் மாதம் அயர்லாந்து அணியுடன் நடைபெற்ற ஒருநாள் சர்வதேச போட்டியில் வேர்னன் பிளண்டர் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். தான் விளையாடிய முதலாவது சர்வதேச போட்டியிலேயே 12 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

ஒருநாள் அறிமுகத்தை தொடர்ந்து அதே ஆண்டு செப்டம்பரில் மேற்கிந்திய தீவுகள் அணியுடன் டி20 சர்வதேச அறிமுகத்தையும் பெற்றுக்கொண்டார். ஆனால் அவரால் தொடர்ந்தும் டி20 சர்வதேச அணியில் நிலைத்து நிற்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 2011ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய அணியுடன் டெஸ்ட் அறிமுகத்தை பெற்றுக்கொண்டார். 

நஷீம் ஷாவின் அபார பந்துவீச்சுடன் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

சுற்றுலா இலங்கை – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஐசிசி….

இறுதியாக 2015ஆம் ஆண்டு ஒருநாள் போட்டியில் விளையாடிய நிலையில் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகளில் நிலைத்து நிற்காத வேர்னன் பிளண்டர் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்தும் விளையாடி வந்தார். இந்நிலையிலேயே அடுத்து நடைபெறவுள்ள டெஸ்ட் தொடருடன் அவர் தனது சர்வதேச ஓய்வை அறிவித்துள்ளார். 

இதுவரையில் 60 டெஸ்ட் போட்டிகளில் 8 அரைச்சதங்களுடன் 1,619 ஓட்டங்களையும், பந்துவீச்சில் 13 ஐந்து விக்கெட்டுக்களுடன் 216 விக்கெட்டுக்களையும், 30 ஒருநாள் சர்வதேச போட்டிகளில் 41 விக்கெட்டுக்களையும், 7 டி20 சர்வதேச போட்டிகளில் 4 விக்கெட்டுக்களையும் பிளண்டர் கைப்பற்றியுள்ளார். தென்னாபிரிக்க அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் சிறந்த சகலதுறை வீரராக வேர்னன் பிளண்டர் திகழ்கின்றமை இவரது தரவுகள் உறுதிப்படுத்துகின்றன. 

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<