ஓமான், ஐக்கிய அமெரிக்காவுக்கு சர்வதேச ஒருநாள் போட்டி அந்தஸ்து

119
Image Courtesy - Getty

ஐக்கிய அமெரிக்கா மற்றும் ஓமான் ஆகிய இரு நாடுகளுக்கும் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் உறுப்பு நாடுகளுக்கு இடையே நமீபியாவில் உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 தொடர் நடைபெற்று வருகின்றது. இத்தொடரில் ஓமான், அமெரிக்கா, நமிபியா, ஹொங் கொங், கனடா, பப்புவா நியூகினியா உள்ளிட்ட ஆறு அணிகள் பங்கேற்கிறன.

திமுத், மர்க்ரமை அடுத்து ஹெம்ஷையர் அணியில் ரஹானே

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப…

இதில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2019-21 ஆண்டுக்கான .சி.சி கிரிக்கெட் உலகக் கிண்ண லீக் 2ஆவது சுற்றுக்கு தகுதி பெறும். அதில் .சி.சியின் ஒருநாள் அந்தஸ்து பெற்ற நேபாளம், ஸ்கொட்லாந்து, ஐக்கிய அரபு இராச்சியம் அணிகளுடன் இந்த நான்கு அணிகள் தற்காலிகமாக ஒருநாள் அந்தஸ்து பெற்று போட்டிகளில் பங்கேற்கும்.

இதில் தகுதி பெறும் அணிகள் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 50 ஓவர்கள் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றுக்கொள்ளும்.

இந்த நிலையில், இந்த வருடத்துக்கான டிவிஷன் 2 உலக கிரிக்கெட் லீக் போட்டிகள் தற்போது நமீபியாவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் மூன்று லீக் போட்டிகளில் அமெரிக்கா, கனடா மற்றும் ஹொங் கொங் ஆகிய அணிகளை வீழ்த்திய ஓமான் அணி, இறுதியாக கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் வரவேற்பு நாடான நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இதனையடுத்து 2022 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் வரை சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான அந்தஸ்தை ஓமான் அணி பெற்றுக் கொண்டது.

அதேபோல ஐக்கிய அமெரிக்கா அணி முதல் லீக் போட்டியில் ஓமான் அணியிடம் தோல்வியைத் தழுவியது. அதன்பிறகு பப்புவா நியூ கினியா மற்றும் நமீபியா ஆகிய அணிகளை வீழ்த்திய ஐக்கிய அமெரிக்கா அணி, கடந்த 24ஆம் திகதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஹொங் கொங் அணியை 84 ஓட்டங்களால் வீழ்த்தியது. இதனையடுத்து 2022 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் வரை ஒருநாள் போட்டிகளுக்கான அந்தஸ்தை அவ்வணியும் பெற்றது.

இரண்டு வருட கடின உழைப்புக்கான வெற்றி எனவும், இந்த வெற்றியானது இளம் வீரர்களின் மிகப் பெரிய சாதனை என்றும் ஐக்கிய அமெரிக்கா கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் புபுது தஸநாயக்க தெரிவித்தார்.  

இதன்படி, ஓமான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரு நாடுகளும் இணைந்து எதிர்வரும் இரண்டு வருடங்களில் தலா 36 ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளன.

தொடர் தோல்விகளிலிருந்து மீண்ட பெங்களூர் அணிக்கு பாரிய இழப்பு

தோள்பட்டை வீக்கம் ஏற்பட்டுள்ளதன்…

இதுவரை ஓமான் அணி சர்வதேச ஒருநாள் போட்டிகளில் விளையாடாவிட்டாலும், ஐக்கிய அமெரிக்கா அணி 2004ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

இதுஇவ்வாறிருக்க, இந்த லீக் போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடிக்கின்ற அணிகள், உலகக் கிண்ண்த்துக்கான 2ஆவது லீக் போட்டிகளில் நேபாளம், ஸ்கொட்லாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளுடன் விளையாடவுள்ளன.

ஒருநாள் போட்டிகளில் இதுவரை 12 அணிகள் நிரந்தர சர்வதேச அந்தஸ்து பெற்றுள்ளன. மேலும், நான்கு அணிகள் நிபந்தனையுடன் கூடிய வரையறை கொண்ட சர்வதேச அந்தஸ்தை பெற்றுள்ளன. எனவே, இந்த அணிகளுடன் தற்போது ஓமான் மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய இரண்டு நாடுகளும் வரையறை கொண்ட சர்வதேச ஒருநாள் அந்தஸ்து பெற்றுக் கொண்டன.

இந்த வரையறையானது எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி முதல் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் வரை நீடிக்கும்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<