அரையிறுதியில் மலேஷிய வலைப்பந்து அணியிடம் தோல்வியை தழுவிய இலங்கை

199
JAPAN NETBALL ASSOCIATION

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டியில், இலங்கை வலைப்பந்து அணியினை மலேஷிய வலைப்பந்து அணி 72-54 என்ற புள்ளிகள் அடிப்படையில் தோற்கடித்துள்ளது.

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட சம்பியன்ஷிப் தொடர் தற்போது ஜப்பானில் 11 ஆவது முறையாக நடைபெற்று வருகின்றது.

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்டத்தில் இலங்கை அரையிறுதிக்கு தகுதி

ஆசிய இளையோர் வலைப்பந்தாட்ட….

இந்த தொடரில் குழு A இல் பங்கேற்ற இலங்கை வலைப்பந்து அணி, குழுநிலை போட்டிகளில் சிங்கப்பூருடன் தோல்வியைத் தழுவிய போதிலும் தென் கொரியா, நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக அபார  வெற்றிகளை பதிவு செய்து பலம் மிக்க மலேஷிய வீராங்கனைகளுடன் அரையிறுதி போட்டியில் விளையாடுவதற்கு தெரிவாகியது.

இதன் பின்னர் இன்று (6) ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி போட்டி ஆரம்பமானது. போட்டியில்  இலங்கை வலைப்பந்து அணி மெதுவான ஆரம்பத்தையே காண்பித்தது. இதனால், அரையிறுதி போட்டியின் முதல் கால்பகுதி 10-14 என்ற புள்ளிகள் கணக்கில் மலேஷிய அணியின் வசமாகியது.

தொடர்ந்து, இரண்டாம் கால்பகுதியில் மலேஷிய வீராங்கனைகள் தமது ஆதிக்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தனர். இதனால், இரண்டாம் கால்பகுதியினை மலேஷிய வலைப்பந்து வீராங்கனைகள் 11-18 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றினர்.

அதனால், போட்டியின் முதல் பாதி 21-32 என்ற புள்ளிகள் கணக்கில் மலேஷிய வலைப்பந்து அணியின் முன்னிலையுடன் நிறைவுக்கு வந்தது.

இலங்கை இளையோர் வலைப்பந்து அணிக்கு முதல் 2 போட்டிகளிலும் அபார வெற்றி

மெலனி விஜேசிங்கவின் அபார ஆட்டத்தினால்….

இதனை அடுத்து போட்டியின் மூன்றாம் மற்றும் நான்காம் கால்பகுதிகளிலும் மலேஷிய வலைப்பந்து அணி, அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தியது. இதனை தடுத்து இலங்கை மங்கைகள் புள்ளிகள் பெற முயன்ற போதிலும்  அந்த முயற்சிகள் வீணாகியிருந்தன.

அதன்படி, போட்டியின் மூன்றாவது மற்றும் நான்காவது கால்பகுதிகளை மலேஷிய வலைப்பந்து அணி முறையே 16-20, 17-20 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றி மொத்தமாக 72-54 என்ற புள்ளிகள் கணக்கில் இலங்கை வலைப்பந்து அணியை அரையிறுதி போட்டியில் தோற்கடித்தது.

இதேநேரம் மலேஷிய வலைப்பந்து அணி, ஆசிய வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் மற்றைய அரையிறுதி போட்டியில், ஹொங்கொங் வலைப்பந்து அணியை 62-36 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தியிருக்கும் சிங்கப்பூர் அணியை இறுதிப் போட்டியில் நாளை (07) எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல சுவாரசியமான செய்திகளைப் படிக்க<<