திமுத், மர்க்ரமை அடுத்து ஹெம்ஷையர் அணியில் ரஹானே

86

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் உப தலைவரான அஜின்கியா ரஹானே, கௌண்டி சம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடருக்காக இங்கிலாந்தின் கௌண்டி (உள்ளூர்) கிரிக்கெட் கழகமான ஹெம்ஷையர் அணியில் விளையாடுவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வேகப்பந்து வீச்சாளரை சுழல் பந்துவீச்சாளராக மாற்றிய சனத் ஜயசூரிய

இலங்கை அணியும், இந்திய அணியும் 1996ஆம் ஆண்டின் ……..

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி கிரிக்கெட் வீரரான அஜின்கியா ரஹானே, ஹெம்ஷையர் அணியில் விளையாடுவதற்கான அனுமதியை கோரியிருந்ததாக கடந்த வாரம் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்த நிலையில், தற்போது ரஹானே கௌண்டி கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு இந்திய கிரிக்கெட் சபை அனுமதியளித்துள்ளது.

அஜின்கியா ரஹானே, ஹெம்ஷையர் கிரிக்கெட் கழகத்துக்காக விளையாடவுள்ள முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறவுள்ளார். அத்துடன், ரஹானே தென்னாபிரிக்க அணியின் வலதுகை துடுப்பாட்ட வீரர், எய்டன் மர்க்ரமிற்கு பதிலாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக ஹெம்ஷையர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போது, ஹெம்ஷையர் அணிக்காக மர்க்ரம் விளையாடி வரும் போதும், அவர் மே மாத ஆரம்ப பகுதியில் நிறைவுக்கு வரவுள்ள றோயல் இலண்டன் ஒருநாள் கிண்ண குழு நிலை போட்டிகளுடன் நாடு திரும்பவுள்ளார். உலகக் கிண்ண குழாத்தில் இடம்பெற்றுள்ள மர்க்ரம் தேசிய அணியுடன் இணையும் பட்சத்தில் நாடு திரும்பவுள்ளார்.

இலங்கை அணியின் ஒருநாள் தலைவர் திமுத் கருணாரத்னவுக்கு பின்னர் மர்க்கரம் ஹெம்ஷையர் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். எவ்வாறாயினும் திமுத் கருணாரத்ன இலங்கையின் உலகக் கிண்ண அணியின் தலைவராக தெரிவுசெய்யப்பட்டதையடுத்து, கௌண்டி தொடரில் விளையாடவில்லை. தற்போது, மர்க்ரமும் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளதால் ரஹானேவை ஹெம்ஷையர் அணி இணைத்துள்ளது.

உலகக் கிண்ணத்திற்கான விஷேட பயிற்சிகளை இரத்துச் செய்துள்ள இலங்கை கிரிக்கெட் சபை

உலகக் கிண்ணத்திற்காக தெரிவு செய்யப்பட்ட ………

ஹெம்ஷையர் அணியில் இணைந்துள்ள ரஹானே எதிர்வரும் மே, ஜூன் மற்றும் ஜூலை ஆரம்பப்பகுதிகளில் நடைபெறவுள்ள 8 கௌண்டி சம்பியன்ஷிப் போட்டிகளில் விளையாடவுள்ளார். இதேவேளை, இவருடன் புஜாரா, ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் இசான் சர்மா ஆகியோர் கௌண்டி கழகங்களில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்த நிலையில் ரஹானேவும் இந்த பட்டியிலில் இணைந்துள்ளதுடன், முதன்முறையாக கௌண்டியில் விளையாடவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அஜின்கியா ரஹானே கடந்த வருடம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய குழாத்தில் இடம்பெற்றிருந்தார். அங்கு நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர், 2 அரைச்சதங்கள் அடங்கலாக 257 ஓட்டங்களை பெற்றிருந்தார் என்பதுடன், இவரது ஓட்ட சராசரி 25.70 ஆக அமைந்திருந்தது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<