பாடசாலை மட்டத்தில் மலியதேவ கல்லூரி மாணவன் இரட்டைச் சதம் அடித்து அசத்தல்

172

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 3 போட்டிகள் இன்று ஆரம்பமாகியதுடன், மேலும் 5 போட்டிகள் நிறைவுக்கு வந்தன. இதில் குருநாகல் மலியதேவ கல்லூரியின் சுபுன் சுமனரத்ன, பாடசாலை அரங்கில் நீண்ட இடைவெளியின் பிறகு இரட்டைச் சதம் குவித்து அசத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தர்மபால கல்லூரி, பன்னிப்பிட்டிய எதிர் மலியதேவ கல்லூரி, குருநாகல்

துடுப்பாட்டம், பந்துவீச்சு என இரு பாடசாலை வீரர்களும் அசத்திய இப்போட்டியில் இரட்டைச்சதம், ஒரு சதம் மற்றும் 5 அரைச்சதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டதுடன், போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவுக்கு வந்தது.

குருநாகல் வெலகெதர மைதானத்தில் நேற்று ஆரம்பமான இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய தர்மபால கல்லூரி வீரர்கள் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 298 ஓட்டங்களினைப் பெற்றுக்கொண்டனர். அவ்வணிக்காக அவிஷ்க ஹசரிந்த 101 ஓட்டங்களையும், மலித் சந்தகெலும் 69 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்து வலுச்சேர்த்தனர்.

>> பங்களாதேஷுடனான T-20 தொடரில் குசலுக்குப் பதிலாக குசல் <<

இதனையடுத்து தம்முடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மலியதேவ கல்லூரி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 383 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அவ்வணிக்காக துடுப்பாட்டத்தில் அசத்திய சுபுன் சுமனரத்ன இரட்டைச் சதம் (202) கடந்து அசத்தினார். பந்துவீச்சில் தர்மபால அணியின் இடதுகை சுழல் பந்துவீச்சாளர் சமிந்து சமரசிங்க 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

இதன்படி, 90 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்மபால கல்லூரி, 251 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்த போது போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி நிறைவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

தர்மபால கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 298 (62) – அவிஷ்க ஹசரிந்த 101, மலித் சந்தகெலும் 69, அஷேன் எகொடகே 40, கவீன் பண்டார 4/66, சஞ்சீவன் பிரயதர்ஷன் 2/35

மலியதேவ கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) 383 (84.3) – சுபுன் சுமனரத்ன 202, முதித்த பிரேமதாஸ 60, துலாஜ் ரணதுங்க 46, சமிந்து சமரசிங்க 5/115, டில்ஷான் டி சில்வா 3/114

தர்மபால கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 251/5 (41) – மலித் சந்தகெலும் 65, அமில தயாநக 71, லக்‌ஷித புரசிங்க 50*, துலாஜ் ரணதுங்க 3/73

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


லும்பினி கல்லூரி, கொழும்பு எதிர் புனித தோமியர் கல்லூரி, கல்கிஸ்சை

புனித தோமியர் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் தோமியர் அணியினர் இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் லும்பினி கல்லூரி அணியை தோல்வியடையச் செய்தனர்.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த லும்பினி கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 179 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது. இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் தோமியர் கல்லூரியினர் மந்தில விஜேரத்ன ஆட்டமிழக்காது பெற்றுக்கொண்ட அபார சதத்தின் (105) உதவியுடன் 280 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை இழந்து மிகவும் வலுவாக காணப்பட்டிருந்த போது தமது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டனர்.

இதனையடுத்து 101 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த லும்பினி வீரர்கள் 99 ஓட்டங்களை மாத்திரமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.

முதல் இன்னிங்ஸில் லும்பினி அணிக்கு பந்துவீச்சில் அச்சுறுத்தலை கொடுத்து ஷனோன் பெர்ணான்டோ 6 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியதுடன் , இரண்டாவது இன்னிங்ஸில் பவித் ரத்னாயக்க 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி தமது அணிக்கு வெற்றியைப் பெற்றுக்கொடுத்தனர்.

போட்டியின் சுருக்கம்

லும்பினி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) -179 (67.3) – கொவின் கெமித 43, லக்னிது உபேந்திர 38, டிஷான் பெர்ணான்டோ 22, ஷனோன் பெர்ணான்டோ 6/33, தெவின் எரியகம 2/30

புனித தோமியர் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 280/5d (59) – மந்தில விஜேரத்ன 105*, துலிப் குணரத்ன 87, மனீஷ ரூபசிங்க 29, பசிந்து நதுன் 3/44

லும்பினி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 99 (32) – சதுனில் சங்கல்ப 24, துஷான் பெர்ணான்டோ 20, பவித் ரத்னாயக்க 4/23, தெவின் எரியகம 2/09, ஷனோன் பெர்ணான்டோ 2/40

முடிவு – புனித தோமியர் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 2 ஓட்டங்களால் வெற்றி


புனித அந்தோனியார் கல்லூரி, கண்டி எதிர் ஸாஹிரா கல்லூரி, மருதானை

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் அந்தோனியார் கல்லூரி அணி 116 ஓட்டங்களால் வெற்றி  பெற்றது.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த புனித அந்தோனியார் கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 123 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் ஸாஹிரா அணியின் மொஹமட் காலித் 4 விக்கெட்டுக்களைக் கைப்பற்றினார்.

>>இலங்கை அணியில் களமிறங்குவதற்கு தயாராகும் அஞ்செலோ மெதிவ்ஸ்<<

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்ஸில் ஸாஹிரா அணியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 130 ஓட்டங்களைப் பெற்றனர்.

இந்நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த அந்தோனியார் கல்லூரி, டியொன் ஸ்டௌடரின் (Dion Stouter) சதத்தின் (115) உதவியால் 7 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் தமது ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து 226 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த ஸாஹிரா கல்லூரி, சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது.

பந்துவீச்சில் அந்தோனியார் அணி சார்பாக நிம்னக ஜயதிலக 8 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 123 (28.2) – சுனெர ஜயசிங்க 46, சசித் ஹிருதிக 25, மொஹமட் காலித் 4/24, அரவிந்த் ரஸேந்திரன் 2/25, தில்ஹார ரமேஷ் 2/28

ஸாஹிரா கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 130 (25.2) – தில்ஹார சமிந்த 24, மொஹமட் ஷமாஸ் 22, கல்ஹார சேனாரத்ன 3/15, நிம்னக ஜயதிலக 3/28

புனித அந்தோனியார் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 273/7d (36.5) – டியொன் ஸ்டௌடர் 115, தீக்ஷன குணசிங்க 71, சுனெர ஜயசிங்க 40, யசித் நிர்மல 2/25

ஸாஹிரா கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 150 (33) – சதுர தில்ருக்‌ஷான் 54, நிம்னக ஜயதிலக 8/49, தமாஷ அபேகோன் 2/43

முடிவு – புனித அந்தோனியார் கல்லூரி 116 ஓட்டங்களால் வெற்றி


திரித்துவக் கல்லூரி, கண்டி எதிர் தர்மாசோக கல்லூரி, அம்பலாங்கொடை

தர்மாசோக கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற திரித்துவக் கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

கண்டி அஸ்கிரிய மைதானத்தில் நேற்று தொடங்கியிருந்த இந்தப் போட்டியில் திரித்துவக் கல்லூரி அணியினர் தம்முடைய முதல் இன்னிங்சுக்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 181 ஓட்டங்களை சேர்த்திருந்தனர். இதில் தர்மாசோக கல்லூரியின் தினுக டில்ஷான் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

திரித்துவக் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 181 (41.4) – ட்ரெவொன் பேர்ஸிவல் 63, ஹசிந்த ஜயசூரிய 33, தினுக டில்ஷான் 5/27, அகில மெண்டிஸ் 3/09

தர்மாசோக கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 150/9d (50) – ரவிந்து ரசந்த 40, இசுரிந்த மெண்டிஸ் 36, ரஷ்மிக டில்ஷான் 3/25, கவிஷ்க சேனாதீர 3/27

திரித்துவக் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 222/5d (45.1) – புபுது பண்டார 96, ஹசித போயகொட 47, அகில் மெண்டிஸ் 3/65

தர்மாசோக கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 172/6 (55) – தினுக டில்ஷான் 71, சமிந்து டில்ஷான் 38, சச்சின் சந்தீப் 33, கவிஷ்க சேனாதீர 3/65

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.


வெஸ்லி கல்லூரி, கொழும்பு எதிர் ஜோசப் வாஸ் கல்லூரி, வென்னப்புவ

மொவின் சுபசிங்கவின் சகலதுறை ஆட்டத்தால் ஜோசப் வாஸ் கல்லூரிக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற வெஸ்லி கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

 > ICC டெஸ்ட் தரவரிசையில் அதிரடி முன்னேற்றம் கண்ட ரொஷேன், அகில <

இதில் நிபுன் தனஞ்சய 10  விக்கெட்டுக்களை ஜோசப் வாஸ் கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

வெஸ்லி கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 273 (76.1) – மொவின் சுபசிங்க 82, ஹசித் கீசர 47, சகுந்த லியனகே 33, நிபுன் தனஞ்சய 6/74, அவிந்து ஷெஹார 3/66

ஜோசப் வாஸ் கல்லூரி (முதல் இன்னிங்ஸ்) – 183 (66.4) – அஞ்சன ருக்மால் 69, திலான் பிரதீப 34, மொவின் சுபசிங்க 4/60, மொஹமட் உபைதுல்லாஹ் 2/32

வெஸ்லி கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 72/8d (29.4) – ஹசித் கீசர 27, சஷான் தினித் 4/29, நிபுன் தனஞ்சய 4/24

ஜோசப் வாஸ் கல்லூரி (இரண்டாவது இன்னிங்ஸ்) – 76/3 (11.2) – நிபுன் தனஞ்சய 52

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி முடிவுற்றது.