சவிந்து பீரிஸ் 10 விக்கெட்டுகள்; பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் வெற்றி

124

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையில் நடைபெற்றுவரும் 19 வயதுக்கு உட்பட்ட டிவிஷன் – 1 பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரின் கீழ் 5 போட்டிகள் நிறைவுக்கு வந்ததுடன், மேலும் 2 போட்டிகள் ஆரம்பமாகியது.

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை எதிர் இசிபதன கல்லூரி, கொழும்பு

சவிந்து பீரிஸின் அபார பந்துவீச்சினால் இசிபதன கல்லூரிக்கு எதிராக நிறைவுக்கு வந்த இப்போட்டியில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் வெற்றியைப் பதிவு செய்தது.

கொழும்பு BRC மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, சதுன் பெர்ணான்டோ (94), அவிந்து பெர்ணான்டோ (65) மற்றும் சனோஜ் தர்ஷிக (65) ஆகியோரின் அரைச் சதங்களின் உதவியுடன் 7 விக்கெட்டுகளை இழந்து 321 ஓட்டங்களை பெற்ற போது ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

தொடர்ந்து தமது முதல் இன்னிங்சை ஆரம்பித்த இசிபதன கல்லூரி மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி 162 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆனந்த கல்லூரிக்கு எதிராக இன்னிங்ஸ் வெற்றியைப் பதிவு செய்த ஜோசப் கல்லூரி

இதன்படி, பலோவ் ஒன் (Follow on) முறையில் இரண்டாம் இன்னிங்சில் மீண்டும் துடுப்பாட நிர்ப்பந்திக்கப்பட்ட இசிபதன அணியினர் 90 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து இன்னிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.

இதில் பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரியின் சவிந்து பீரிஸ் இரண்டு இன்னிங்சுகளிலும் தலா 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி, மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 321/7d (77) – சந்துன் பெர்ணான்டோ 94, அவிந்து பெர்ணான்டோ 65, சனோஜ் தர்ஷிக 65, சவிந்து பீரிஸ் 39*, மதுஷங்க சந்தருவன் 3/89, காலிக் அம்மாத் 2/69

இசிபதன கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 162 (69.2) – அயன சிறிவர்தன 39, அஷேன் குணவர்தன 34, சஞ்சுல அபேவிக்ரம 33, சவிந்து பீரிஸ் 5/38, அவிந்து பெர்ணான்டோ 3/11, கௌமல் நானயக்கார 2/50

இசிபதன கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) f/o – 90 (45) – சஞ்சுல அபேவிக்ரம 31, லெஷான் அமரசிங்க 21, சவிந்து பீரிஸ் 5/24, கௌமல் நானயக்கார 3/39

முடிவு – பிரின்ஸ் ஒப் வேல்ஸ் கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 69 ஓட்டங்களால் வெற்றி


ஜனாதிபதி கல்லூரி, கோட்டே எதிர் புனித மரியாள் கல்லூரி, கேகாலை

உபாலி குணரத்ன மைதானத்தில் நிறைவுக்கு வந்த இப்போட்டியில் கோட்டே ஜனாதிபதி கல்லூரி 150 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்றது.

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த ஜனாதிபதி கல்லூரி அணி இரங்க ஹஷானின் சதத்தின் (102) உதவியுடன் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 201 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பாடிய புனித மரியாள் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய ஜனாதிபதி கல்லூரி அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது

இதன்படி, 293 ஓட்டங்களை வெற்றி இலக்காக் கொண்டு தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த மரியாள் கல்லூரி, மறுபடியும் 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 150 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.

துடுப்பாட்டத்தில் மரியாள் கல்லூரி மோசமாக விளையாடி தோல்வியைத் தழுவியிருந்தாலும், பந்துவீச்சில் சிறப்பாக செயற்பட்ட அவ்வணியின் சஞ்சய ஜயமால் இரு இன்னிங்சுகளிலும் 11 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (முதல் இன்னிங்ஸ்) – 201 (43) – இரங்க ஹஷான் 102, தனுல சமோத் 28, அகில ரொஷான் 24*, சஞ்சய ஜயமால் 6/55, சுபுன் குமார 4/67

புனித மரியாள் கல்லூரி, கேகாலை (முதல் இன்னிங்ஸ்) – 143 (41) – சுபுன் குமார 45, சஜீவ ஜயமால் 36, ஹசிந்து ப்ரேமகுமார 3/30, ஹிருன சிகேரா 2/31

ஜனாதிபதி கல்லூரி, கோட்டே (இரண்டாவது இன்னிங்ஸ்) – 235/5d  (42.2) – ஹசிந்து பிரமுக 58, இரங்க ஹஷான் 49, தனுல சமோத் 36, சஞ்சய ஜயமால் 5/78, இஷான் வீரசூரிய 2/35, சுபுன் குமார 2/62

புனித மரியாள் கல்லூரி, கேகாலை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 143 (36.1) – சஜீவ ஜயமால் 43, கஜித கொடுவேகொட 41, ஹிருன சிகேரா 4/59, ஹசிந்து ப்ரேமகுமார 4/62

முடிவு – கோட்டே ஜனாதிபதி கல்லூரி 150 ஓட்டங்களால் வெற்றி


புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை எதிர் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு

புனித அந்தோனியார் கல்லூரி மைதானத்தில் முடிவடைந்த இப்போட்டியில் மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 164 ஓட்டங்களால் அந்தோனியார் கல்லூரியை தோல்வியடையச் செய்தது.

சாதனையுடன் T-20 போட்டிகளின் தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த இலங்கை

நேற்று தொடங்கிய இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த புனித அந்தோனியார் கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 92 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

தொடர்ந்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரியினர் லசித் குரூஸ்புள்ளேயின் சதம் (129) மற்றும் சதுர அனுராதவின் அரைச்சதத்தின் (74) உதவியுடன் 8 விக்கெட்டுக்களை இழந்து 349 ஓட்டங்களைப் பெற்றநிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டனர்.

இதனையடுத்து 257 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாம் இன்னிங்சுக்காக தமது துடுப்பாட்டத்தை ஆரம்பித்த புனித அந்தோனியார் கல்லூரி வீரர்கள் 93 ஓட்டங்களை மாத்திரம் பெற்று இன்னிங்ஸ் மற்றும் 164 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவினர்.

போட்டியின் சுருக்கம்

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (முதல் இன்னிங்ஸ்) – 96 (37) – ரஷ்மிக மெவான் 19, பசிந்து உசெட்டி 4/15, அவீஷ கேஷான் 4/54

மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி, நீர்கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 349/8d  (72.3) – லசித் குரூஸ்புள்ளே 129, சதுர அனுராத 74, மார்க் ஷெவோன் 47, கவீஷ துலான்ஜன 4/63, கவிந்து ஹெட்டியாரச்சி 2/80

புனித அந்தோனியார் கல்லூரி, வத்தளை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 93 (33.2) – கவீஷ துலான்ஜன 27, ரவிந்து பெர்ணான்டோ 5/13, பசிந்து உசெட்டி 3/42, அவீஷ கேஷான் 2/17

முடிவு – மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி இன்னிங்ஸ் மற்றும் 164 ஓட்டங்களால் வெற்றி


டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு எதிர் மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை

மொரட்டு மஹா வித்தியாலயத்துக்கு எதிராக முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, முதல் இன்னிங்ஸ் புள்ளிகளுடன் போட்டியை சமநிலையில் முடித்தது.

மொரட்டு மஹா வித்தியாலய மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரி 160 ஓட்டங்களுக்கு சுருண்டபோதும் டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் பந்துவீச்சாளர்கள் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து மொரட்டு மஹா வித்தியாலய அணியை 140 ஓட்டங்களுக்கு சுருட்டியது.

இதில் டி.எஸ் சேனநாயக்க கல்லூரியின் முதித லக்‌ஷான் 6 விக்கெட்டுக்களையும் நெதுஷன் குமார 4 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து தமது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, முதித லக்‌ஷானின் அபார சதத்தின் உதவியுடன் 7 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

இதனையடுத்து, 248 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய மொரட்டு மஹா வித்தியாலயம், 4 விக்கெட்டுக்களை இழந்து 167 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டியின் ஆட்ட நேரம் முடிவடைந்தது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவடைந்தது.

போட்டியின் சுருக்கம்

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 160 (61.1) – சமத் பண்டார 33, டெரொன் ஷெனால் 31, உவின் ஒசந்த 23, ஷெஹான் ஜீவந்த 4/31, ரஷான் கவிஷ்க 3/55, நதித் இஷேந்திர 2/18

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (முதல் இன்னிங்ஸ்) – 140 (46.5) – ஷெஹந்த நிசேந்திர 28, ஜனித செவ்மித் 25, நிஷான் மதுஷ்க 24, முதித லக்‌ஷான் 6/46, நெதுஷன் குமார 4/43

டி.எஸ் சேனநாயக்க கல்லூரி,  கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 227/7d (39.5) – முதித லக்‌ஷான் 100*, தசுன் பெரேரா 47, சமத் பண்டார 37, ஷெஹந்த நிசேந்திர 3/38, ஷெஹான் ஜீவந்த 2/53

மொரட்டு மஹா வித்தியாலயம், மொரட்டுவை (இரண்டாவது இன்னிங்ஸ்) – 167/4 (41) – நிஷான் மதுஷ்க 61*, ஷெஹந்த நிசேந்திர 54, நிராஜ் கவிஷ்க 36

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.


தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு எதிர் மஹாநாம கல்லூரி, கொழும்பு

தர்ஸ்ட்டன் கல்லூரி மைதானத்தில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் முதலில் துடுப்பாடியிருந்த தர்ஸ்ட்டன் கல்லூரி மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி 164 ஓட்டங்களையே முதல் இன்னிங்சுக்காகப் பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் மஹாநாம அணி சார்பாக ஹஷான் சந்தீப 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார்.

அசத்தல் ஆரம்பத்தின் பின்னர் அதிர்ச்சியடைந்த சிலாபம் மேரியன்ஸ்

இதனையடுத்து பதிலுக்கு தங்களுடைய முதல் இன்னிங்சில் மஹாநாம கல்லூரியினர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களைப் பெற்றனர்.

தொடர்ந்து 16 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பெடுத்தாடிய தர்ஸ்ட்டன் கல்லூரி அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் சொனால் தினூஷ 4 விக்கெட்டுக்களை மஹாநாம கல்லூரி சார்பாக கைப்பற்றியிருந்தார்

போட்டியின் சுருக்கம்

தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 164 (61) – நிபுன் லக்‌ஷான் 87, ஹஷான் சந்தீப 5/84, ஹேஷான் ஹெட்டியாரச்சி 4/36

மஹாநாம கல்லூரி, கொழும்பு (முதல் இன்னிங்ஸ்) – 148 (53.1) – பவன் ரத்னாயக்க 51, துஷான் மெண்டிஸ் 42, சந்தரு டயல் 4/14, நிபுன் லக்‌ஷான் 2/45

தர்ஸ்ட்டன் கல்லூரி, கொழும்பு (இரண்டாவது இன்னிங்ஸ்) – 159 (62.5) – நிமேஷ் லக்‌ஷான் 49, பன்சிலு டில்ஷான் 20, சொனால் தினூஷ 4/23, பவன் ரத்னாயக்க 2/04, ஹேஷான் ஹெட்டியாரச்சி 2/29, ஹஷான் சந்தீப 2/51

முடிவு – போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.