நாடு திரும்புகிறார் தென்னாபிரிக்க அணியின் டெப்ரைஷ் ஷம்சி

689

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர் டெப்ரைஷ் ஷம்சி தனிப்பட்ட காரணங்களுக்காக தொடரின் இடையில் நாடு திரும்பவுள்ளதாக தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

மூன்று நாட்களுக்குள்ளேயே தென்னாபிரிக்காவுடனான டெஸ்ட் போட்டியினை முடித்த இலங்கை

சுற்றுலா தென்னாபிரிக்கா மற்றும் இலங்கை அணிகள்…

தென்னாபிரிக்க டெஸ்ட் அணி காலியில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் 278 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்திருந்தது. சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளத்தில் எதிரணியின் துடுப்பாட்ட வீரர்களை இலங்கை சுழற்பந்து வீச்சாளர்கள் தினறடித்தனர்.  இதேபோன்ற எதிர்பார்ப்புடன் தென்னாபிரிக்க அணியும் இரண்டு முன்னணி சுழற்பந்து வீச்சாளர்ளான டெப்ரைஷ் ஷம்சி மற்றும் கேஷவ் மஹாராஜ் ஆகியோரை களமிறக்கியது.

இதன்படி பந்து வீசிய தென்னாபிரிக்க அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களால் இயன்ற அளவு சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினர். இதில் கேஷவ் மஹாராஜ் இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் அதிகமான சவாலை கொடுத்திருந்தாலும், டெப்ரைஷ் சம்ஷியின் பந்து வீச்சு முதல் இன்னிங்ஸிற்கு பின்னர் அவ்வளவுக்கு எடுபடவில்லை.  மஹாராஜ் முதல் இன்னிங்ஸில் விக்கெட்டுகள் இன்றி ஏமாற்றமடைந்தாலும், இரண்டாவது இன்னிங்ஸில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். எனினும் முதல் இன்னிங்ஸில் ஷம்சி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாவது இன்னிங்ஸில் கடுமையான சவாலுக்கு மத்தியில் ஒரு விக்கெட்டினை மாத்திரமே வீழ்த்தினார்.

எவ்வாறாயினும் முதல் போட்டியில் தென்னாபிரிக்க சுழற்பந்து வீச்சாளர்கள் கற்றுக்கொண்டதை வைத்து, அடுத்த போட்டியில் வியூகம் அமைத்து பந்து வீச்சை பலப்படுத்த முடியும் என்ற தருணத்தில் டெப்ரைஷ் ஷம்சி நாடு திரும்புவது தென்னாபிரிக்க அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஷம்சி நாடு திரும்பும் தினம் இதுவரையில் அறிவிக்கப்படவில்லை என்ற போதிலும், அவர் தென்னாபிரிக்காவுக்கு திரும்புவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சந்திமால், ஹதுருசிங்க, குருசிங்க ஆகியோருக்கு 2 டெஸ்ட், 4 ஒரு நாள் போட்டிகளில் தடை

கடந்த மாதம் 14 ஆம் திகதி சென். லூசியாவில் ஆரம்பமான…

இதனால், இலங்கை அணிக்கு எதிராக கொழும்பில் நடைபெறவுள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஷம்சிக்குப் பதிலாக, சுழற்பந்து வீச்சாளர் ஷோன் வொன் பேர்க் விளையாடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 31 வயதான ஷோன் வொன் பேர்க் இதுவரையில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகவில்லை. எனினும் 96 முதல்தர கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 28.31 என்ற சராசரியில்  345 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதுமாத்திரமின்றி துடுப்பாட்டத்தில் 28.71 என்ற சராசரியில் 3,474 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டுள்ளார். எனவே, துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டிலும் பிரகாசிக்கக்கூடிய ஷோன் வொன் பேர்க் அடுத்த போட்டியில் தென்னாபிரிக்க அணி சார்பில் விளையாடுவதற்கு அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

தென்னாபிரிக்க அணியின் ஷம்சி நாடு திரும்பும் அதேவேளை, இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால், தலைமை பயிற்றுவிப்பாளர் சந்திக ஹதுருசிங்க மற்றும் இலங்கை கிரிக்கெட் முகாமையாளர் அசங்க குருசிங்க ஆகியோரும் தென்னாபிரிக்க டெஸ்ட் தொடர் மற்றும் அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள 4 ஒரு நாள் போட்டிகளில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு விருந்து படைத்த “93 நிமிடங்கள்”

இலங்கை கிரிக்கெட் இரசிகர்களுக்கு நேற்றைய…

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாள் ஆட்டத்தின் போது, இலங்கை கிரிக்கெட் அணி இரண்டு மணித்தியாலங்கள் போட்டியை தாமதப்படுத்தியமைக்காக ஐசிசி குறித்த மூவருக்கும் மூன்றாம் நிலை குற்றத்துக்கான, எட்டு போட்டித் தடை புள்ளிகளை வழங்கியுள்ளது.

ஐசிசியின் புதிய சட்டத்திட்டத்தின் படி எட்டு போட்டித் தடை புள்ளிகள் வழங்கப்படுமாயின், இரண்டு டெஸ்ட் மற்றும் நான்கு ஒரு நாள் அல்லது நான்கு T-20 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும். குறித்த மூவரும் (ஹதுருசிங்க, சந்திமால், குருசிங்க) ஏற்கனவே தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தென்னாபிரிக்க அணிக்கெதிரான நான்கு ஒரு நாள் போட்டிகளிலும் பங்கேற்க மாட்டார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<