சாதனை மேல் சாதனை படைத்த இலங்கை

4813

தென்னாபிரிக்காவுக்கு எதிராக கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்று முடிந்த ஐந்தாவதும் கடைசியுமான ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 178 ஓட்டங்களால் பெற்ற வெற்றி தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது மிகப்பெரிய ஒருநாள் வெற்றியாகும். அதேபோன்று, ஒருநாள் போட்டிகளில் பெறப்பட்ட 12ஆவது பிரமாண்ட வெற்றியாகும்.

தென்னாபிரிக்காவை சுழலால் மிரட்டிய தனஞ்சய ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள…

கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் இதே, ஆர். பிரேமதாச மைதானத்தில் தென்னாபிரிக்க அணியை 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வென்றது அந்த அணிக்கு எதிராக இலங்கையின் சிறந்த வெற்றிப் பதிவாகும்.

மறுபுறம், தென்னாபிரிக்க அணி தனது ஒருநாள் வரலாற்றில் பெறும் மூன்றாவது மோசமான தோல்வி இதுவாகும். 2002ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக 182 ஓட்டங்களால் தோற்றதே இதன் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு இடங்களிலும் இலங்கையிடம் பெற்ற தோல்விகளே உள்ளன.   

தென்னாபிரிக்காவுக்கு இதுதான் குறைவு

தென்னாபிரிக்க அணி 121 ஓட்டங்களுக்கு சுருண்டதானது, அந்த அணி இலங்கைக்கு எதிராக பெற்ற மிகக் குறைந்த ஓட்டங்களாகும். இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 140 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்ததே மோசமான சாதனையாக இருந்தது.

எவ்வாறாயினும் இலங்கை அணி ஒருநாள் சர்வதேச போட்டிகளில் எதிரணியை 18 தடவைகள் 100க்கும் குறைவான ஓட்டங்களுக்கு சுருட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

உலகக் கிண்ண இலங்கை அணியில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய..

தனஞ்சயவின் சிறந்த பந்துவீச்சு

தனது 24 ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியில் ஆடிய அகில தனஞ்சய 9 ஓவர்களில் 29 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது ஒருநாள் போட்டிகளில் அவரது சிறந்த பந்துவீச்சாகும். எனினும், ஒருநாள் போட்டிகளில் அவர் 6 விக்கெட்டுகளை வீழ்த்துவது இது முதல் முறையல்ல. சரியாக ஓர் ஆண்டுக்கு முன் இந்தியாவுக்கு எதிராக 10 ஓவர்கள் பந்து வீசி 54 ஓட்டங்களை விட்டுக் கொடுத்து 6 விக்கெட்டுகளை அவர் பதம்பார்த்தார்.

அதேபோன்று, தனஞ்சயவின் பந்துவீச்சானது ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணியின் 10ஆவது சிறந்த பந்து வீச்சாகும். சமிந்த வாஸ் 2001ஆம் ஆண்டு ஜிம்பாப்வேயின் 8 விக்கெட்டுகளை வீழ்த்திய மறக்க முடியாத பந்துவீச்சே இதன் முதலிடத்தில் உள்ளது.

ஆர். பிரேமதாச மைதானம் புதிய மைல்கல்

தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது ஒருநாள் போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் பகலிரவு போட்டியாக நடைபெற்ற 100ஆவது ஒருநாள் சர்வதேச போட்டியாக புதிய மைல்கல்லை எட்டியது. இதன்படி சர்வதேச அளவில் 100 பகலிரவு ஒருநாள் போட்டிகள் இடம்பெற்ற நான்காவது மைதானம் ஆர். பிரேமதாசவாகும். இதில் சிட்னி கிரிக்கெட் மைதானம் 149 பகலிரவு ஒருநாள் போட்டிகளை நடத்தி முதலிடத்தில் உள்ளது.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது பகலிரவு ஒருநாள் போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் 1979 நவம்பர் 27ஆம் திகதி அவுஸ்திரேலிய மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக நடைபெற்றது. இதற்கு கிட்டத்தட்ட 13 ஆண்டுகள் கழித்து 1992 செப்டம்பர் 5ஆம் திகதி இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான போட்டியே ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெற்ற முதலாவது பகலிரவு ஆட்டமாகும்.

குசல் மெண்டிஸின் அதிகூடிய ஓட்டம்

மத்திய வரிசையில் வந்து உற்சாகமாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 38 ஓட்டங்களை பெற்றார். இளம் விரர் குசல் மெண்டிஸ் 2018ஆம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும்.

இந்த ஆண்டில் இதுவரை 10 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கும் அவர் ஒரு அரைச் சதத்தைக்கூட பெறாத நிலையில், கடந்த ஜனவரியில் ஜிம்பாப்வேயுக்கு எதிராக பெற்ற 36 ஓட்டங்கள் என்ற அதிகபட்ச ஓட்டங்களை 2 ஓட்டங்களால் அதிகரித்துக் கொண்டுள்ளார். அதாவது, இந்த ஆண்டில் குசல் மெண்டிஸ் சராசரியாக ஒரு போட்டியில் 18 ஓட்டங்கள் வீதமே பெற்றுள்ளார்.

இது சாதனையாக இல்லாவிட்டாலும், மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த குசல் குறித்து குறிப்பிட வேண்டிய விடயமாகும்.

அனுபவ அணித்தலைவர் மெதிவ்ஸ்

தென்னாபிரிக்காவுடனான ஐந்தாவது ஒருநாள் போட்டி அஞ்செலோ மெதிவ்ஸ் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் இலங்கை அணித் தலைவராக செயற்படும் 104 ஆவது சந்தர்ப்பமாகும். இதன்மூலம், அதிக ஒருநாள் போட்டிகளில் தலைவராக இருந்த வீரர்கள் வரிசையில் தென்னாபிரிக்க அணியின் முன்னாள் தலைவர் .பி. டிவிலியர்ஸை (103) பின்தள்ளி அவர் 17ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

விஸ்டனின் ‘கோல்டன் போய்’ பட்டியலில் ரபாடா முதலிடம்; குசலுக்கும் சிறப்பிடம்

உலக ஆடவர் கிரிக்கெட்டின் 23 அல்லது அதற்கு குறைந்த…

எனினும் ஒருநாள் சர்வதேச போட்டிகளில் தற்போது அணித்தலைவராக இருப்பவர்களில் மெதிவ்ஸே அனுபவம் கொண்டவராக முதலிடத்தில் உள்ளார். இதற்கு அடுத்து 85 ஒருநாள் போட்டிகளில் தலைவராக செயற்பட்டிருக்கும் இங்கிலாந்தின் இயன் மோர்கன் உள்ளார்.

மெதிவ்ஸும் 90களும்

அஞ்செலோ மெதிவ்ஸ் தனது மூன்றாவது ஒருநாள் சதத்தை பூர்த்தி செய்ய கடைசி பந்து வரை போராடியபோதும் அவரால் ஆட்டமிழக்காது 97 ஓட்டங்களையே பெற முடிந்தது. ஒருநாள் போட்டிகளில் இது அவரது மூன்றாவது அதிகூடிய ஓட்டங்களாகும். எனினும், மெதிவ்ஸ் ஒருநாள் போட்டிகளில் 90களில் தனது சதத்தை நான்கு தடவைகள் தவறவிட்டுள்ளார். இதில் இரண்டு முறை ஆட்டமிழக்காது இருந்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் இவ்வாறு 90களில் ஆட்டமிழக்காது இரண்டு தடவைகள் சதத்தை தவறவிட்ட ஐந்தாவது இலங்கை வீரர் மெதிவ்ஸ் ஆவார். இதற்கு முன் அரவிந்த டி சில்வா, ரொஷான் மஹானாம, திலின கண்டம்பி மற்றும் அர்ஜுன ரணதுங்க ஆகியோர் இவ்வாறு ஏமாற்றத்தை சந்தித்துள்ளனர்.   

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<