டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவிப்பாரா ஜேம்ஸ் எண்டர்சன்?

151

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேம்ஸ் எண்டர்சன், எதிர்வரும் 2021 ஆஷஷ் தொடர் வரை, டெஸ்ட் போட்டிகளில் விளையாட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார். 

ஜேம்ஸ் எண்டர்சன் இந்த பருவகாலத்தில் பந்துவீச்சில் 41.16 என்ற சராசரியில் பின்னடைவை சந்தித்துள்ள போதும், அவர் இந்த பருவகாலத்தின் சராசரியை விட, மிகச்சிறந்த பந்துவீச்சாளராக அடையாளப்படுப்படுத்தப்பட்ட ஒருவர். எனினும், அவரது வயது மற்றும் கடந்தகால பந்துவீச்சு பதிவுகள் என்பன, இந்த பருவகாலத்துடன், அவர் ஓய்வுபெறுவார் என்ற நிலைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. 

அடுத்த ஆண்டுக்கான T20 உலகக் கிண்ணம் இந்தியாவில்

அடுத்த ஆண்டுக்கான ஆடவர் T20 உலகக் கிண்ணம் இந்தியாவில் நடைபெறவுள்ளதாக ஐ.சி.சி. அறிவித்துள்ளது…

ஆனாலும், தான் இப்போதைய நிலையில் ஓய்வை அறிவிப்பதாக இல்லை என எண்டர்சன் சுட்டிக்காட்டியுள்ளார். அதுதொடர்பில் குறிப்பிட்ட இவர், “இப்போது ஓய்வுபெறும் எண்ணம் இல்லை. நான் இன்னும் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. ஒரு போட்டியில் மோசமாக ஆடினால், அது சற்று ஏமாற்றமாக அமையும். ஆனால், அதற்காக ஓய்வுபெறுவது சரியாக இருக்காது” என்றார்.

பாகிஸ்தான் அணிக்கு எதிரான முதல் போட்டியில் சரியாக பந்துவீசவில்லை என்ற ஏமாற்றத்தை உணர்ந்துள்ளதாக எண்டர்சன் குறிப்பிட்டுள்ளார். இவர், 97 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டினை கைப்பற்றியிருந்தார். ஆனாலும், இவரது பந்துவீச்சில் அபிட் அலியின் பிடியெடுப்பை, பென் ஸ்டோக்ஸ் தவறவிட்டிருந்தார்.

“எனக்கு இந்தவாரம் துரதிஷ்டமானது. காரணம் நான் சிறந்த முறையில் பந்துவீசவில்லை. எனது பந்துவீச்சில் சிறிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. கடந்த 10 வருடங்களில் நான் மைதானத்தில் சற்று உணர்ச்சிவசப்பட்டுள்ளேன். உணர்ச்சிவசப்பட்டதால், சற்று மனம் தளர்ந்துள்ளேன். மைதானத்தில் இவ்வாறு நடந்தால், நாம் மேலும் மேலும் வேகமாக பந்துவீச முற்படுவோம். அது சரியான விடயமல்ல.

எனவே, எதிர்வரும் இரண்டு மூன்று நாட்களுக்கு கடினமான பயிற்சிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன். குறிப்பாக எனது பந்துவீச்சில் உள்ள குறைபாடுகளை திருத்திக்கொள்ள வேண்டும்.  என்னால் சரிசெய்ய முடியும். எனவே, அடுத்த டெஸ்ட் போட்டியில், என்னால் எதனை செய்ய முடியும் என்பதை மக்களுக்கு தெளிவாக காட்ட முடியும்.

அடுத்தப் போட்டியில் என்னால் சரியாக செயற்பட முடியும் என உணருகிறேன். ஆனால், முதல் போட்டியில் என்னில் சில மாற்றங்களை உணர்ந்தேன். எனது பந்துவீச்சு பாணி சரியாக இல்லை. போட்டியில் வேகமாக பந்துவீச வேண்டும் என்ற எண்ணம் மாத்திரமே இருந்தது. வேகமாக ஓட முற்பட்டேன். அதனால், இரண்டு நோ போல் பந்துகளையும் வீசினேன். என்னால் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நான் மிகக் கடினமாக பந்துவீச முற்பட்டேன் என்பதை உணர்ந்தேன்.

இப்போது எனது பயிற்றுவிப்பாளர்களுடன் கலந்துரையாடியுள்ளேன். எனது பந்துவீச்சில் உள்ள அடிப்படை விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடினேன். அத்துடன், பந்துவீச்சு பாணியை சரிசெய்ய வேண்டும் என முடிவுசெய்துள்ளேன். அணித் தலைவர் மற்றும் பயிற்றுவிப்பாளர் ஆகியோர் என்மீது நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே, அதற்காக கடினமாக உழைக்க வேண்டும்” 

இதேவேளை, கடந்த மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் ஜேம்ஸ் எண்டர்சன் சிறப்பாக பந்துவீசியுள்ளார். எனவே, குறித்த தொடரிலிருந்து பாரிய மாற்றங்கள் பந்துவீச்சில் ஏற்பட்டிருக்காது. அனைவருக்கும் மோசமான போட்டிகள் என்பது இருக்கும். எனினும், அதிலிருந்து மீண்டு சாதிக்க வேண்டும் எனவும் ஜேம்ஸ் எண்டர்சன் சுட்டிக்காட்டியுள்ளார்.

 மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க