விஸ்டனின் ‘கோல்டன் போய்’ பட்டியலில் ரபாடா முதலிடம்; குசலுக்கும் சிறப்பிடம்

1382

உலக ஆடவர் கிரிக்கெட்டின் 23 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய சிறந்த வீரருக்கு வழங்கப்படும் விஸ்டனின் கோல்டன் போய் (Golden Boy) விருதுக்கு தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபார திறமையுடன் தனது சர்வதேச கிரிக்கெட்டை ஆரம்பித்த ரபாடா, 2015 இல் தனது கன்னி போட்டியில் விளையாடியது முதல் இதுவரை 32 டெஸ்ட் போட்டிகளில் 151 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். டெஸ்ட் பந்துவீச்சாளர்களுக்கான ஐ.சி.சி. தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் அன்டர்சனுக்கு அடுத்து அவர் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஐ.சி.சி. டெஸ்ட் பந்துவீச்சாளர் தரவரிசையில் முதல் இடத்தை பிடித்த இளம் வீரராக 23 வயதுடைய ரபாடா இந்த ஆண்டு ஆரம்பத்தில் பதிவானதோடு, 150 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இளம் வீரர் என்ற ஹர்பஜன் சிங்கின் சாதனையையும் அவர் அண்மையில் முறியடித்தார்.

தென்னாபிரிக்காவை சுழலால் மிரட்டிய தனஞ்சய ஒருநாள் தரவரிசையில் முன்னேற்றம்

சர்வதேச கிரிக்கெட் வாரியம் புதிதாக வெளியிட்டுள்ள ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில்..

”ககிசோ ரபாடாவுக்கு பெரிய எதிர்காலம் இருப்பது தென்னாபிரிக்காவில் அனைவருக்கும் தெரியும். இது நடக்கும் என்பது எனக்குத் தெரியும் இத்தனை விரைவில் வரும் என்று எனக்கு தெரிந்திருக்கவில்லை” என்று முன்னாள் தென்னாபிரிக்க வேகப்பந்து வீச்சாளர் அலன் டொனல்ட் விஸ்டன் கிரிக்கெட் மாத இதழுக்கு குறிப்பிட்டார்.

டேல் ஸ்டெயின் தனது ஸ்தீரமான பந்துவீச்சை வெளிப்படுத்தி விக்கெட்டுகளை வீழ்த்திய வேகம் அச்சுறுத்தலாக இருந்ததுபோல் ககிசோவால் அதே போன்ற நிலை இருந்து வருகிறது. அவருடைய பந்துவீச்சு வியக்கத்தக்கதும் பார்க்க அற்புதமாகவும் உள்ளது.

ககிசோ தென்னாபிரிக்காவின் அனைத்துக் காலங்களிலும் சிறந்த பந்துவீச்சாளராக வரும் பயணத்தில் ஈடுபட்டுள்ளார். இந்த வேகத்தில் சென்றால் அவர் தென்னாபிரிக்காவின் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் வீழ்த்தியவராக வருவார். இந்த இளம் வீரர் அதனைச் செய்வது எனக்கு பெருமை தரும் தருணமாக இருக்கும். அவரது அற்புதமான ஒரு சாதனை தென்னாபிரிக்காவின் அனைத்து கருப்பின கிரிக்கெட் வீரர்களுக்கும் முன்மாதிரியாக இருக்கும்.

இந்தப் பட்டியலில் முதல் பத்து இடங்களில் இருக்கும் மூன்று தென்னாபிரிக்க வீரர்களில் ரபாடா ஒருவராவார். எய்டன் மார்க்ராம் 3 ஆவது இடத்தில் இருப்பதோடு லுன்கி நிகிடி 9 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். முதல் பத்து இடங்களில் எஞ்சி இருக்கும் வீரர்களாக ரஷீத் கான் (2 ஆவது இடம்), பாபர் அஸாம் (4 ஆவது இடம்), குல்தீப் யாதவ் (5 ஆவது இடம்), ரிஷாப் பாண்ட் (6 ஆவது இடம்), குசல் மெண்டிஸ் (7 ஆவது இடம்), மாட் ரென்ஷோ (8 ஆவது இடம்) மற்றும் ஷதாப் கான் (10 ஆவது இடம்) உள்ளனர்.

இந்தப் பட்டியலில் முதல் 50 இடங்களில் 13 நாடுகளின் வீரர்கள் உள்ளனர். இதில் இந்த ஆண்டு நடைபெற்ற 19 வயதுக்கு உட்பட்ட ஐ.சி.சி. உலகக் கிண்ண போட்டியில் சோபித்த பல இளம் வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். அவுஸ்திரேலிய சுழல் பந்துவீச்சாளர் லொய்ட் பொப் (45 ஆவது இடம்), ஆப்கானின் முஜிபுர் ரஹ்மான் (13 ஆவது இடம்) மற்றும் இளையோர் உலகக் கிண்ணத்தை வென்ற இந்திய அணியின் தலைவர் பார்திவ் ஷோவ் (15 ஆவது இடம்) உடன் நான்கு வீரர்கள் உச்ச இடங்களில் உள்ளனர்.

உலகெங்கும் உள்ள தனது நிருபர்களிடம் இருந்து கருத்துகளை பெற்றே விஸ்டன் கிரிக்கெட் மாதந்த இதழ் இந்தப் பட்டியலை தொகுத்துள்ளது. 23 அல்லது அதற்கு குறைந்த வயதுடைய சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனைக்கான விஸ்டனின் ‘கோல்டன் கேர்ல்’ (Golden Girl) விருது அடுத்த மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க