மத்திய வரிசை துடுப்பாட்டம் அணிக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது – டிக்வெல்ல

1384

இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோல்வியடைந்தமைக்கு, மத்தியவரிசை வீரர்கள் ஓட்டங்களை குவிக்கத் தவறியமையே காரணம் என இலங்கை அணியின் விக்கெட் காப்பாளர் மற்றும் துடுப்பாட்ட வீரர் நிரோஷன் டிக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பல்லேகலையில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

துடுப்பாட்ட வீரர்களின் கவனக் குறைவால் இலங்கை அணிக்கு மீண்டும் தோல்வி

இலங்கை அணிக்கு எதிராக கண்டி – பல்லேகலை …

மழை காரணமாக அணிக்கு 21 ஓவர்களாக மட்டுப்படுத்தப்பட்ட இந்தப் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. இலங்கை அணிக்கு சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்த டிக்வெல்ல அதிரடியாக ஆடி, 36 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். எனினும், அடுத்துவந்த வீரர்கள் ஓட்டங்கள் பெறத் தவறிய நிலையில், இலங்கை அணி தோல்வியை சந்திக்க நேரிட்டது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்ட டிக்வெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்,

போட்டியொன்றில் தோல்வியடையும் போது அனைவரது மனதிலும் கவலை ஏற்படும். இன்றைய (நேற்று) போட்டியில் நாம் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொடுத்தோம். எனினும் அடுத்து வந்த மத்திய வரிசை வீரர்கள் ஓட்டங்கள் பெறத் தவறியதால் எம்மால் வெற்றிபெற முடியவில்லை. முக்கியமாக திசர பெரேரா ஆட்டமிழந்தமை அணிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியது.

அணியொன்றை பொருத்தவரையில் 21 ஓவர்களுக்கு 150 ஓட்டங்களை பெற்று வெற்றிபெறுவது என்பது முடியாத காரியம். மைதானம் அதிக ஈரப்பதமாக (Wty) இருந்த காரணத்தால் பந்து வீச்சாளர்களை நாம் குறைக்கூற முடியாது. இன்னும் 20-25 ஓட்டங்களை அதிகமாக பெற்றிருந்தால் எமக்கு வெற்றிபெறும் வாய்ப்பு கிடைத்திருக்கும். போட்டியின் தோல்விக்கு முக்கிய காரணம், எமது துடுப்பாட்டம் என நான் நினைக்கிறேன்.

Photos: Sri Lanka vs England | 3rd ODI

ThePapare.com | Waruna Lakmal | 17/10/2018 Editing and re-using …

நாம் தற்போது துடுப்பாட்டத்தில் அதிக கவனத்தை செலுத்தி வருகின்றோம். கடந்த மூன்று போட்டிகளில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களின் பங்களிப்பு அணிக்கு கிடைக்கவில்லை. இந்த போட்டியில் ஆரம்ப துடுப்பாட்டம் சிறப்பாக இருந்தும் மத்திய வரிசை துடுப்பாட்டம் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  இதனால் நாம் ஆரம்பம் மற்றும் மத்திய வரிசை துடுப்பாட்டம் ஆகிய இரண்டையும் சரியாக செய்வதற்கு முயற்சிக்கிறோம்”. என்றார்.

டிக்வெல்ல அண்மைக் காலமாக ஒருநாள் போட்டிகளில் சிறந்த ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுக்கத் தவறி வந்தார். எனினும், நேற்றைய போட்டியில் வேகமான ஆரம்பத்தைப் பெற்றுக் கொடுத்தாலும், அவரால் நீண்ட நேர இன்னிஸ் ஒன்றை ஆட முடியாமல் போனது. இது குறித்து கருத்து தெரிவித்த அவர்,

ஒருநாள் போட்டிகளில் எனது துடுப்பாட்டத்தில் சிக்கல்கள் இருக்கின்றன. சிறந்த ஆரம்பத்தை நான் பெற்றுக்கொடுக்கின்ற போதிலும், அதே வேகத்தில் அதிக ஓட்டங்களை பெறத் தவறியுள்ளேன். நீண்ட இன்னிங்ஸிற்கு எனது துடுப்பாட்டத்தை நகர்த்துவதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளேன்என்றார்.

இலங்கைஇங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இங்கிலாந்து அணி 2-0 என முன்னிலைப்பெற்றுள்ளது. இரண்டு அணிகளுக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி பல்லேகலை சர்வதேச மைதானத்தில் எதிர்வரும் 20ம் திகதி நடைபெறவுள்ளது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…