Home Tamil இலங்கைக்கு எதிராக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே

இலங்கைக்கு எதிராக சிறந்த துடுப்பாட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே

Image Courtesy - ICC

சுற்றுலா இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர நிறைவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுள்ளது.

ஹராரே மைதானத்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.  இதன்படி, ஆட்டத்தை ஆரம்பித்த ஜிம்பாப்வே அணி வேகமாக ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

டெஸ்ட் தரவரிசையில் அஞ்செலோ மெதிவ்ஸிற்கு முன்னேற்றம்

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கன்னி……

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் நிதானமாக ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த போதும், அதன் பின்னர் வருகைதந்த ப்ரெண்டன் டெய்லர் வேகமாக ஓட்டங்களை குவித்திருந்தார். இதற்கிடையில் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பிரின்ஸ் மெஸ்வோர் (9) மற்றும் க்ரைக் எர்வின் (12) ஆகியோரின் விக்கெட்டுகளை முறையே லஹிரு குமார மற்றும் தனன்ஜய டி சில்வா ஆகியோர் வீழ்த்தினர்.

ஆட்டம் மதியபோசண இடைவேளைக்காக நிறுத்தப்படும் போது, ஜிம்பாப்வே அணி 2 விக்கெட்டுகளை இழந்து 96 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன் பின்னர் களம் நுழைந்த ஜிம்பாப்வே அணி வேகமாக ஓட்டங்களை குவிக்க, ப்ரெண்டன் டெய்லர் அரைச் சதம் கடந்தார்.

ப்ரெண்டன் டெய்லர் மற்றும் கெவின் கசுஸா ஆகியோரின் இணைப்பாட்டம் இலங்கை அணிக்கு ஏமாற்றம் வழங்க, கெவின் கசுஸா (38) மற்றும் ப்ரெண்டன் டெய்லர் (62) ஆகியோரை குறுகிய இடைவேளையில் ஆட்டமிழக்கச் செய்து சுரங்க லக்மால் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

எனினும், இவர்களின் ஆட்டமிழப்பின் பின்னர் களமிறங்கிய சோன் வில்லியம்ஸ் மற்றும் சிக்கந்தர் ராஸா ஆகியோர் மற்றுமொரு இணைப்பாட்டத்தை கட்டியெழுப்பினர். இவர்கள் இருவரும் 5 ஆவது விக்கெட்டுக்காக 159 ஓட்டங்களை பகிர்ந்ததுடன், சோன் வில்லியம்ஸ் தன்னுடைய இரண்டாவது டெஸ்ட் சதத்தையும், சிக்கந்தர் ராஸா அரைச் சதத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இதில், சிக்கந்தர் ராஸா 72 ஓட்டங்களுடன் லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, சோன் வில்லியம்ஸ் தனன்ஜய டி சில்வாவின் பந்துவீச்சில் 107 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இவர்கள் இருவரின் ஆட்டமிழப்பின் பின்னரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜிம்பாப்வே அணி, இன்றைய நாள் ஆட்ட நேர நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுள்ளது. ஜிம்பாப்வே அணி சார்பில் ரேகிஸ் சகப்வா ஆட்டமிழக்காமல் 31 ஓட்டங்களையும், டினோடென்டா முட்டம்போட்ஜி 10 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சினை பொருத்தவரை, தனன்ஜய டி சில்வா மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளதுடன், லஹிரு குமார மற்றும் லசித் எம்புல்தெனிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை பகிர்ந்துள்ளனர்.

ஸ்கோர் விபரம்

Stumps

Sri Lanka
Zimbabwe
352/6 (90)


BatsmenRB4s6sSR
Prince Masvaure c Niroshan Dickwella b Lahiru Kumara9441020.45
Kevin Kasuza b Suranga Lakmal38974039.18
Craig Ervine c Oshada Fernando b Dhananjaya de Silva121111109.09
Brendan Taylor lbw b Suranga Lakmal6262101100.00
Sean Williams b Dhananjaya de Silva10713710378.10
Sikandar Raza c Angelo Mathews b Lasith Embuldeniya72994272.73
Regis Chakabva not out31573054.39
Tinotenda Mutombodzi not out10341029.41
Extras11 (b 8 , lb 2 , nb 1, w 0, pen 0)
Total352/6 (90 Overs, RR: 3.91)
Fall of Wickets 1-21 (13.6) Prince Masvaure, 2-49 (19.4) Craig Ervine, 3-114 (32.6) Kevin Kasuza, 4-133 (36.5) Brendan Taylor, 5-292 (71.6) Sikandar Raza, 6-324 (78.5) Sean Williams,
BowlingOMRWEcon
Suranga Lakmal1763121.82
Vishwa Fernando1414503.21
Lahiru Kumara1534613.07
Lasith Embuldeniya30315315.10
Dhananjaya de Silva1406724.79

>>மேலும் கிரிக்கெட் செய்திகளை படிக்க<<