இவ்வாரம் ஆரம்பமாகும் தேசிய கனிஷ்ட வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர்

64
Dialog Junior National Netball Championship

தேசிய வலைப்பந்து சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் டயலொக் தேசிய கனிஷ்ட வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் இம்மாதம் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் நடைபெறவிருக்கின்றது.

>>மரதனில் உலக சாதனை செய்த வீரர் தீடிர் மரணம்<<

அதன்படி இந்த வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரானது கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க மைதானத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதோடு, தொடரில் வலைப்பந்து சம்மேளனத்தில் அங்கம் வகிக்கும் சங்கங்களுக்கு இரண்டு அணிகளை அனுப்ப முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை தொடரில் நாடு பூராகவும் இருக்கும் மொத்தம் 40 அணிகள் பங்கேற்கவிருப்பதோடு, தொடர் முதற்கட்டமாக லீக் அடிப்படையில் நடைபெறவிருக்கின்றது.

இதேநேரம் இந்த சம்பியன்ஷிப் தொடரின் காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகும் அணிகளின் பயிற்சியாளர்களை கௌரவிக்கும் சிறப்பு நிகழ்வு ஒன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.

அதேநேரம் தொடரில் சிறப்பாக செயற்படும் வீராங்கனைகளைக் கொண்டு அடுத்த ஆண்டு 20 வயதின் கீழ்ப்பட்ட வீராங்கனைகளுக்கான ஆசிய கனிஷ்ட வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் மற்றும் உலக கனிஷ்ட வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றுக்கான இலங்கை குழாம்கள் தெரிவு செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருக்கின்றது.

இதேவேளை தேசிய கனிஷ்ட வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரின் அனைத்துப் போட்டிகளும் இலங்கையின் முதல்தர விளையாட்டு தொலைக்காட்சி அலைவரிசையான ThePapare தொலைக்காட்சியில் ஒளிபரப்படவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் விளையாட்டுச் செய்திகளை படிக்க<<