முத்தரப்பு T-20 தொடரில் குசல் மெண்டிஸ் விளையாடுவதில் சந்தேகம்

1023

இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் சுதந்திர கிண்ண முத்தரப்பு T-20 தொடரில் இலங்கை அணிக்காக ஆபாரமாக துடுப்பெடுத்தாடி வருகின்ற இளம் வீரரான குசல் மெண்டிஸ் உபாதைக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

[rev_slider LOLC]

இந்திய அணிக்கெதிராக கடந்த திங்கட்கிழமை(12) நடைபெற்ற லீக் போட்டியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த குசல் மெண்டிஸ், பௌண்டரி எல்லைக்கு அருகில் வந்த பந்தை தடுக்க முயன்றபோது கீழே விழுந்து உபாதைக்குள்ளானார். இதனையடுத்து உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேறிய குசலுக்கு அதேவேளையில் சிகிச்சை அளிக்கவும் இலங்கை கிரிக்கெட் முகாமைத்துவம் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கை வீரர்களுக்கு பார்சிலோனா கழகம் பயன்படுத்திய மென்பொருள்

இலங்கை கிரிக்கெட் வீரர்களின் திறமையை மேலும் அதிகரிக்கும் நோக்கிலும், எதிர்வரும் …

இதன்படி, தசைப் பகுதியில் ஏற்பட்டுள்ள உபாதையினால் குசல் மெண்டிஸ் தற்போது சிகிச்சை பெற்றுவருவதாகவும், இதனால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் அணிக்கெதிராக நடைபெறவுள்ள தீர்மானமிக்க லீக் போட்டியில் அவர் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், குசல் மெண்டிஸுக்கு நேற்றைய தினம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பின்னர் 24 மணி நேரத்திற்கு தொடர்ந்து அவரை கண்காணிப்பில் வைத்திருக்க வைத்தியர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

இதன்படி, அவர் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவாரா? இல்லையா என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து இலங்கை அணியின் முகாமையாளர் அசங்க குருசிங்க க்ரிக் பஸ் இணையத்தளத்துக்கு வழங்கிய செவ்வியில், குசல் மெண்டிஸுக்கு தசைப் பிடிப்பு ஏற்படுள்ளது. எனவே மருத்துவர்களின் ஆலோசனைக்கமைய தற்போது அவர் கண்காணிக்கப்பட்டு வருகின்றார். அடுத்த 24 மணி நேரத்தில் அவர் உடல்நிலை குறித்து சரியான தகவல் தெரியவரும். எனினும் அவர் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்கின்றது” என்றார்.

எமது எதிர்கால திட்டத்தில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான லசித் மாலிங்க …

இந்த தொடரில் இலங்கை அணிக்காக அடுத்தடுத்து அரைச்சதங்களைக் குவித்து தனது அபாரமான துடுப்பாட்ட திறமையினை வெளிப்படுத்தி வருகின்ற குசல் மெண்டிஸ், இந்தப் போட்டித் தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களின் பட்டியலில் ஷிகர் தவான் மற்றும் குசல் ஜனித் பெரேராவுக்கு அடுத்தபடியாக ள்ளார்.

முன்னதாக கடந்த மாதம் நடைபெற்ற பங்களாதேஷ் சுற்றுப்யணத்தின் போது இலங்கை அணியின் முன்னணி வீரர்களான அஞ்செலோ மெதிவ்ஸ், அசேல குணரத்ன மற்றும் ஷெஹான் மதுஷங்க ஆகியோர் உபாதைகளுக்கு உள்ளாகி அணியிலிருந்து வெளியேறினர். அதேபோன்று, பங்களாதேஷ் அணிக்கெதிராக கடந்த சனிக்கிழமை நடைபெற்ற லீக் போட்டியில் மந்த கதியில் ஓவர்கள் வீசிய குற்றச்சாட்டுக்காக தினேஸ் சந்திமாலுக்கும் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் பிரபல வீரர்கள் இன்றி இலங்கை அணி களமிறங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.