மேஜர் T20 லீக்கில் சதத்தை தவறவிட்ட சதீர் சமரவிக்ரம

SLC Major Club T20 Tournament 2020/21

274

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் முதல்தர கழகங்களுக்கு இடையில் நடைபெற்று வரும் மேஜர் T20 லீக் கிரிக்கெட் தொடரின் லீக் போட்டிகளின் கடைசி நாளான இன்று ஆறு போட்டிகள் (14) நிறைவுக்கு வந்தன.

இன்று நடைபெற்ற போட்டிகளில் கொழும்பு, தமிழ் யூனியன், இராணுவம், காலி, பாணந்துறை மற்றும் நீர்கொழும்பு உள்ளிட்ட கழகங்கள் வெற்றயீட்டியது.

கோல்ட்ஸ் கழக மைதானத்தில் நடைபெற்ற சரசென்ஸ் கழகத்துடனான போட்டியில் ஓரு ஓட்டத்தினால் த்ரில் வெற்றி பெற்ற இராணுவ கிரிக்கெட் கழகம் D பிரிவில் முதலிடத்தைப் பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.

பொலிஸ் கழகத்துக்காக பந்துவீச்சில் மிரட்டிய கபில்ராஜ்

இம்முறை லீக்கில் அதிக ஓட்டங்கள் பெறப்பட்டிருந்த கடற்படை கழகத்துடனான போட்டியில், சகலதுறையிலும் பிரகாசித்திருந்த தமிழ் யூனியன் கழகம், 69 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.

இப்போட்டியில் தமிழ் யூனியன் கழகத்துக்காக சதீர சமரவிக்ரம 93 ஓட்டங்களையும், சுபுன் காவிந்த 52 ஓட்டங்களையும் குவித்தனர். 

எதுஎவ்வாறயினும், இம்முறை உள்ளூர் T20 லீக் தொடரில் இரண்டு அரைச்சதங்களைக் குவித்துள்ள சதீர சமரவிக்ரம, அதிக ஓட்டங்களைக் குவித்த வீரர்களில் பட்டியலில் 236 ஓட்டங்களுடன் 2ஆவது இடத்தில் உள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும். 

இந்த வெற்றியுடன் டி பிரிவில் இரண்டாவது இடத்தைப் பெற்றுக்கொண்ட தமிழ் யூனியன் கழகம் காலிறுதியில் கொழும்பு கிரிக்கெட் கழகத்தை எதிர்த்தாடவுள்ளது.

மேஜர் T20 லீக்கில் ஐந்து விக்கெட்டுக்களை வீழ்த்திய ஜீவன் மெண்டிஸ்

இதன்படி, நாளை மறுதினம் (16) நடைபெறவுள்ள  முதலாவது காலிறுதியில் தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகமும், இரண்டாவது காலிறுதியில் இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகமும், மூன்றாவது SSC கழகம் எதிர் கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகமும் காலிறுதியில், நான்காவது காலிறுதியில் NCC கழகம் எதிர் குருநாகல் இளையோர் கிரிக்கெட் கழகமும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இதனிடையே, லீக் போட்டிகளின் முடிவில் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரராக நுகெகொட விளையாட்டுக் கழகத்தின் முதித்த லக்ஷானும் (247 ஓட்டங்கள்), அதிக விக்கெட்டுக்களைக் கைப்பற்றிய வீரராக ராகம கிரிக்கெட் கழகத்தின் இஷான் ஜயரட்னவும் (15 விக்கெட்) இடம்பெற்றுள்ளனர்.

போட்டியின் சுருக்கம்

A பிரிவு 

  • BRC கழகம் எதிர் கொழும்பு கிரிக்கெட் கழகம் 

BRC  கழகம் – 111/7 (20) – சனுக துலாஜ் 50, லஹிரு மதுஷங்க 3/12

கொழும்பு கிரிக்கெட் கழகம் – 118/3 (11.4) – ரொன் சந்திரகுப்த 38, லசித் அபேரட்ன 26*, ஷான் ப்ரியன்ஜன் 29*, சச்சின்த பீரிஸ் 3/21

முடிவு – கொழும்பு கிரிக்கெட் கழகம் 7 விக்கெட்டுக்களால் வெற்றி

  • நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் கண்டி சுங்க விளையாட்டுக் கழகம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் – 150/7 (20) – லஹிரு மிலன்த 30, அஞ்செலோ ஜயசிங்க 37, பசிந்து லக்ஷன்க 29, மாதவ வர்ணபுர 21, சச்சித்ர பெரேரா 3/27

கண்டி சுங்க விளையாட்டுக் கழகம் – 54/8 (9) – அகீல் இன்ஹாம் 26*, ரொஷேன் பெர்னாண்டோ 3/13, நிசல தாரக்க 2/10, நிஷான் பீரிஸ் 2/04

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் டக்வர்த் லூவிஸ் முறைப்படி 16 ஓட்டங்களால் வெற்றி

  • காலி கிரிக்கெட் கழகம் எதிர் நுகெகொட விளையாட்டுக் கழகம்

நுகெகொட விளையாட்டுக் கழகம் – 134/10 (20) – முதித்த லக்ஷான் 52, சந்தருவன் பெர்னாண்டோ 44, ரஜித் ப்ரியான் 4/20, டில்ஷான் கான்ஞசன 2/20, ரவிஷ் விஜேசிறி 2/26

காலி கிரிக்கெட் கழகம் – 135/5 (19.5) – டில்ஷான் கான்ஞன 56*, இமேஷ் உதயங்க 43, வினோத் பெரேரா 3/25

முடிவு – காலி கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுக்களால் வெற்றி 


D பிரிவு 

  • தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் எதிர் கடற்படை விளையாட்டுக் கழகம்

தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் – 215/4 (20) – சதீர சமரவிக்ரம 93, சுபுன் காவிந்த 52, சிதார கிம்ஹான் 39, சுரங்க பரணவிதான 1/18

கடற்படை விளையாட்டுக் கழகம் – 146/6 (20) – சானக்க ருவன்சிறி 37, டபிள்யூ. மயன்த 33. புத்திக மதுஷான் 20, ப்ரமோத் மதுஷான் 3/39, சச்சிந்து கொலம்பகே 2/14 

முடிவு – தமிழ் யூனியன் கிரிக்கெட் கழகம் 69 ஓட்டங்களால் வெற்றி

  • இராணுவ கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

இராணுவ கிரிக்கெட் கழகம் – 105/8 (20) – ஜனித் சில்வா 34*, உதித் மதுன் 2/19, மாலிங்க அமரசிங்க 2/20

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் – 104/9 (20) – தவீஷ கஹதுவாரச்சி 29, ஷான் துமிந்து 21, துஷான் விமுக்தி 2/11, மஹீஷ் தீக்ஷன 2/12, ஷி டில்ஷான் 2/27

முடிவு – இராணுவ கிரிக்கெட் கழகம் ஒரு ஓட்டத்தினால் வெற்றி 

  • பாணந்துறை விளையாட்டுக் கழகம் எதிர் செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம்

பாணந்துறை விளையாட்டுக் கழகம் – 122/8 (20) – ஷான் சாமர 29, ஹன்ஸ் பெர்னாண்டோ 26, சதுர ஒபேசேகர 3/17, தரூஷ பெர்னாண்டோ 3/16

செபஸ்டியன்ஸ் கிரிக்கெட் கழகம் –  சமீன் கந்தனாரஆச்சி 30, விஹான் குணசேகர 26, சரித் ஜயம்பதி 4/26,, கோஷான் தனுஷ் 3/22 

முடிவு – பாணந்துறை விளையாட்டுக் கழகம் 8 விக்கெட்டுக்களால் வெற்றி

 >>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<