51ஆவது தேசிய கூடைப்பந்தாட்ட வெற்றிக்கிண்ணத்திற்கான பிரிவு III இன் ஆண்கள் பிரிவு போட்டிகள் நேற்று கிளிநொச்சி 7ஆவது இராணுவ முகாம் கூடைப்பந்தாட்டத் திடலில் இடம்பெற்றிருந்தது. அன்றைய போட்டிகளில் கிளிநொச்சி, வவுனியா, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களினது கூடைப்பந்தாட்டச் சங்க அணிகள் பங்கெடுத்திருந்தன.

Senior Nationals Basketball Championship 2017 | Vote for your favorite team

With the senior nationals basketball championship…

கிளிநொச்சி எதிர் வவுனியா

போட்டியின் ஆரம்பம் முதலே லாவகமாக பந்தைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த வவுனியா அணிக்கு சுலக்சன் , செந்தூரன் ஆகியோர் புள்ளிகளைச் சேர்த்து அணியை முன்னிலைப்படுத்திக் கொண்டிருந்த வேளையில், புள்ளிகளைப் பெறத் தடுமாறிக் கொண்டிருந்த கிளிநொச்சி அணிக்கு நீல் உதயகுமார, சுஜித் நுவான் ஆகியோர் விரைவாகப் புள்ளிகளைச் சேர்த்த போதும் முதற் பாதியின் நிறைவில் 22:20 என்ற புள்ளி வீதத்தில், 2 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்தது வவுனியா அணி.

இரண்டாம் பாதியில் உத்வேகத்துடன் ஆடிய கிளிநொச்சி அணிக்கு சமீர மதுரங்க விரைவாகப் புள்ளிகளைச் சேர்த்தார். அதேவேளை தமது ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக வவுனியா அணியின் செந்தூரன் ஜெரோசன் ஆகியோரும் தம் அணியின் புள்ளிகளை உயர்த்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு விறுவிறுப்பாகப் போட்டி நடந்து கொண்டிருக்கையில் இறுதி நேரத்தில் சுசந்தவும் கைகொடுக்க 50:40 என்ற புள்ளியடிப்படையில் இரண்டாம் பாதியில் ஆதிக்கஞ் செலுத்திய கிளிநொச்சி அணி 10 மேலதிக புள்ளிகளால் வெற்றி பெற்றது.

கேகாலை எதிர் இரத்தினபுரி

போட்டியின் ஆரம்பத்தில்  இரு அணி வீரர்களும் மிகப்பிரதானமாகத் தடுப்பாட்டத்திலேயே கவனஞ் செலுத்திக் கொண்டிருந்தனர். அவ்வாறு இருந்த போதும் சுசங்க கேகாலை அணிக்கும், கவிந்து இரத்தினபுரி அணிக்கும் தம் பங்கிற்கு புள்ளிகளைச் சேர்த்துக் கொடுத்தனர். அவ்வாறாக இருக்கையில் 16:15 என முதற் பாதியில் முன்னிலை வகித்தது கேகாலை அணி.

இரண்டாம் பாதியில் தமது ஆட்டத்தை வேகப்படுத்த வேண்டும் என்பதனை உணர்ந்த சுசந்த, விஷ்வ ஆகியோர் கேகாலை அணியின் புள்ளிப்பட்டியலை உயர்த்தினர், இரத்தினபுரி அணியின் கௌஷல்ய, எடின ஆகியோர் சற்றுப் போராட்டத்தை வெளிப்படுத்திய போதும், இரண்டாம் பாதியிலும் ஆதிக்கத்தைத் தொடர்ந்த கேகாலை அணி 12 புள்ளிகள் முன்னிலையில் 41:21 என்ற முழுநேர புள்ளி அடிப்படையில் இரத்தினபுரி அணியை வென்றது.

Kegalle and Killinochchi tops the tableKegalle and Killinochchi tops the tableKegalle and Killinochchi tops the tableKegalle and Killinochchi tops the tableKegalle and Killinochchi tops the tableKegalle and Killinochchi tops the table

.

கிளிநொச்சி எதிர் இரத்தினபுரி

மாலை வேளையில் ஆரம்பமான இப்போட்டியில் கிளிநொச்சி அணிக்கு ஞானகரன், சுதேஷ் ஆகியோர் விரைவாகப் புள்ளிகளைச் சேர்த்து, 16:04 என்ற புள்ளியடிப்படையில் முதலாம் பாதியில் இரத்தினபுரி அணியை விட 12 புள்ளிகள் முன்னிலை பெற்றது கிளிநொச்சி அணி.

இரண்டாவது பாதியில் தமது பலத்தை நிருபிப்பதற்குப் போராடிய இரத்தினபுரி அணிக்கு கௌஷல்ய, நுவங்க ஆகியோர் புள்ளிகளைச் சேர்க்க இரண்டாவது பாதியில் 11 புள்ளிகளைப் பெற்றது இரத்தினபுரி அணி. மறுபுறத்தில் கிளிநொச்சி அணி இரண்டாம் பாதியில் 07 புள்ளிகளை மாத்திரம் பெற்று 03 புள்ளிகள் பின்தங்கியிருந்த போதும், மொத்தப் புள்ளிப் பட்டியல் 25:15 என மூடப்பட, 10 புள்ளிகள் முன்னிலை பெற்றிருந்த கிளிநொச்சி அணி, நாளில் தனது இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்தது.

கேகாலை எதிர் வவுனியா

காலை வேளையிலே கிளிநொச்சியிடம் தோல்வியடைந்திருந்த வவுனியா அணியை எதிர்த்து இரத்தினபுரி அணியை இலகுவாக வீழ்த்தியிருந்த கேகாலை அணி மோதியது.

போட்டியின் ஆரம்பம் முதலே வேகமாக ஆடிய கேகாலை அணி தமது தடுப்பையும் பலமாக வைத்துக்கொண்டு, விரைவாக புள்ளிகளைச் சேர்த்தனர். வேகமாக செயற்பட்ட சுசந்த, சஞ்ஜீவ ஆகியோர் கேகாலையின் புள்ளிகளை 24 ஆக உயர்த்தினர். மறுபுறத்தில் வவுனியா அணியின் கவிலவன், ஜெயவிக்காஷ் ஆகியோர் போராடிய போதும் அவர்களால் 16 புள்ளிகளையே சேகரிக்க முடிந்தது.

Photos: Senior Nationals 2017 | Day Two | Level III (Men)

இரண்டாவது பாதியை 08 புள்ளிகள் பின்னிலையில் தொடங்கிய வவுனியா அணியை முன்னிலைப்படுத்த கவிலவன், ஜெரோசன் ஆகியோர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதும் அவர்களது முயற்சிகள் கேகலையின் பின்கள வீரர்களை சற்றுச் சீண்டுவதாக மாத்திரமே இருந்தன. ஆனால் கேகாலையின் விஷ்வ, சஞ்ஜீவ ஆகியோர் தொடர்ந்தும் புள்ளிகளைப் பெற்ற வண்ணமே இருந்தனர்.

முழு நேர நிறைவில் 66:24 என புள்ளிப்பட்டியல் மூடப்பட 42 மேலதிக புள்ளிகளை பெற்று இலகுவாக வாவுனியாவைத் தோற்கடித்து, நாளில் தனது இரண்டாவது வெற்றியையும் பதிவு செய்திருந்தது கேகாலை அணி.

நேற்றைய நாளில் கேகாலை, கிளிநொச்சி ஆகிய அணிகள் இரு வெற்றிகளைப் பெற்றிருந்தபோதும் இரத்தினபுரி, வவுனியா அணிகள் தடுமாற்றங் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.