Home Tamil முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை வளர்ந்துவரும் அணி

முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றிய இலங்கை வளர்ந்துவரும் அணி

1286

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் லஹிரு மதுஷங்கவின் மிரட்டல் பந்துவீச்சு மற்றும் பெதும் நிஸ்ஸங்கவின் அரைச் சதத்தின் உதவியுடன் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டி சம்பியனாகத் தெரிவாகியது. 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி, தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. 

பெதும் நிஸ்ஸங்கவின் அதிரடியில் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு வெற்றி

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க………

இந்த நிலையில், 9 லீக் ஆட்டங்களைக் கொண்டதாக நடைபெற்ற இந்த தொடரில் புள்ளிகள் பட்டியலில் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்ட இலங்கை வளரந்துவரும் கிரிக்கெட் மற்றும் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தின.

பிரிட்டோரியாவில் இன்று (14) நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, தங்களுடைய முதல் விக்கெட்டினை 5 ஓட்டங்களுக்கு இழந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கபிலோ செகுகுனே (4) லஹிரு மதுஷங்கவின் பந்து வீச்சில் சந்துன் வீரக்கொடியிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். 

இதற்கு அடுத்தபடியாக களமிறங்கிய அணித் தலைவர் நீல் பிரேண்ட் (8), லெசிகோ செனொக்வானே (19), இஸ்மாயீல் கபில்டீன் (9) ஆகிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி, ஆரம்பத்திலேயே 49 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதன் பிறகு ஜோடி சேர்ந்த டிலானனோ போட்கீசர் மற்றும் ருபின் ஹேர்மன் ஆகியோர் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தனர்..

நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 5ஆவது விக்கெட்டுக்காக 75 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, டிலானோ போட்கீசர் அரைச் சதம் கடந்த நிலையில் லஹிரு மதுஷங்கவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.

எனினும், ருபின் ஹேர்மனின் அரைச் சதத்தின் உதவியுடன் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 180 ஓட்டங்களை எடுத்தது. 

உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்

இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக்………

துடுப்பாட்டத்தில் தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக அணிக்காக அபாரமாக விளையாடிய ருபின் ஹேர்மன் 63 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் லஹிரு மதுஷங்க 35 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். 

பின்னர் 181 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சந்துன் வீரக்கொடி மற்றும் பெதும் நிஸ்ஸங்க களமிறங்கினர்.

இவ்விரண்டு வீரர்களும் முதல் விக்கெட்டுக்காக அரைச்சத இணைப்பாட்டம் ஒன்றை பெற்று நம்பிக்கை கொடுத்தனர். இருவரும் 56 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றிருந்த போது, சந்துன் வீரக்கொடி 26 ஓட்டங்களுடன் லுக்கி பிலாண்டரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெதும் நிஸ்ஸங்க தனது அரைச் சதத்தை பதிவு செய்தார். அவருடன் ஜோடி சேர்ந்து நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய கமிந்து மெண்டிஸ் 40 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் பேயர்ஸ் ஸ்வேன்போலின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க, அணித் தலைவர் சரித் அசலங்க ஆகியோர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இறுதியில் பெதும் நிஸ்ஸங்க 84(108) ஓட்டங்களையும், சரித் அசலங்க 30(21) ஓட்டங்களையும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். முடிவில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 37.4 ஒவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 184 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்தது. 

தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணி சார்பில் லுக்கி பிலாண்டர், பேயர்ஸ் ஸ்வேன்போல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் வீழ்த்தினர். 

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்காக ஜொலித்த வீரர்கள்

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் யார் என்பதை……..

இதன்படி, 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி முத்தரப்பு ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது. 

இது இவ்வாறிருக்க, இலங்கை வளர்ந்துவரும் மற்றும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான நான்கு நாட்கள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி போர்டப்ஸ்ட்ரூமில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result

Sri Lanka Emerging Team
184/2 (37.4)
University Sports South Africa XI
180/7 (50)
BatsmenRB4s6sSR
Lesego Senokwane c Sandun Weerakkody b Lahiru Madushanka19452042.22
Kabelo Sekhukhune b Asitha Fernando481050.00
Neil Brand c Sandun Weerakkody b Chamika Karunarathne8120066.67
Isma-eel Gafieldien c Sandun Weerakkody b Amila Aponso9300030.00
Delano Potgieter b Lahiru Madushanka52883059.09
Rubin Hermann not out63932067.74
Ruan de Swardt c & b Lahiru Madushanka130033.33
Beyers Swanepoel c Minod Bhanuka b Lahiru Madushanka8100080.00
L Philander not out111100100.00
Extras5 (b 0 , lb 1 , nb 0, w 4, pen 0)
Total180/7 (50 Overs, RR: 3.6)
Fall of Wickets 1-5 (2.4) Kabelo Sekhukhune, 2-23 (7.5) Neil Brand, 3-39 (14.1) Lesego Senokwane, 4-49 (17.3) Isma-eel Gafieldien, 5-124 (40.2) Delano Potgieter, 6-126 (40.6) Ruan de Swardt, 7-147 (44.6) Beyers Swanepoel,
BowlingOMRWEcon
Asitha Fernando1014414.40
Chamika Karunarathne1014514.50
Lahiru Madushanka1003543.50
Amila Aponso1002312.30
Ramesh Mendis401704.25
Sammu Ashan601502.50


BatsmenRB4s6sSR
Pathum Nissanka not out841087277.78
Sandun Weerakkody lbw b L Philander26363072.22
Kamindu Mendis c Delano Potgieter b Beyers Swanepoel40634063.49
Charith Asalanka not out292103138.10
Extras5 (b 0 , lb 0 , nb 2, w 3, pen 0)
Total184/2 (37.4 Overs, RR: 4.88)
Fall of Wickets 1-56 (13.4) Sandun Weerakkody, 2-141 (31.6) Kamindu Mendis,
BowlingOMRWEcon
Beyers Swanepoel812613.25
Gideon Peters604307.17
L Philander5.403416.30
Ruan de Swardt511603.20
Delano Potgieter402105.25
Siya Simetu501903.80
Neil Brand402506.25

முடிவு – இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி