தாயகம் திரும்பிய இலங்கை லெஜன்ட்ஸ் கிரிக்கெட் அணி

140

முதன்முறையாக நடைபெற்று முடிந்திருக்கும் வீதி பாதுகாப்பு உலக T20 தொடரில், இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்ட இலங்கை லெஜன்ட்ஸ் அணியினர் இன்று (23) தாயகம் திரும்பியிருக்கின்றனர்.

இலங்கை லெஜன்ட்ஸ் அணியின் போராட்டம் வீண்

இந்தியாவில் வீதி பாதுகாப்பு தொடர்பிலான அவதானம் ஒன்றினை ஏற்படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்ட வீதி பாதுகாப்பு உலக T20 தொடர், இம்மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 21ஆம் திகதி வரையில் நடைபெற்றிருந்தது.

மொத்தமாக ஆறு நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் நட்சத்திரங்கள் உள்ளடங்கிய அணிகள் பங்குபெற்றிய இந்த தொடரில், இறுதிப் போட்டிக்கு இந்தியா, இலங்கை ஆகியவற்றின் லெஜன்ட்ஸ் அணிகள் தெரிவாகியிருந்தன.

லக்மாலின் 5 விக்கெட் பிரதியை கடந்தும் முன்னேறிய மே.தீவுகள்

பின்னர் கடந்த 21ஆம் திகதி நடைபெற்ற இந்த தொடரின் இறுதிப் போட்டியில் 14 ஓட்டங்களால் இலங்கை லெஜன்ட்ஸ் வீரர்களை வீழ்த்திய இந்திய லெஜன்ட்ஸ் அணி தொடரின் சம்பியன் பட்டம் வெல்ல இலங்கை லெஜன்ட்ஸ் அணி இரண்டாம் இடத்தினைப் பெற்றுக் கொண்டது. 

இவ்வாறு இந்த தொடரில், இரண்டாம் இடத்தினைப் பெற்றுக்கொண்ட இலங்கை லெஜன்ட்ஸ் அணி வீரர்களே, இன்று (23) அவர்களின் தாயகமான இலங்கை மண்ணினை வந்தடைந்திருக்கின்றனர். 

இவர்கள் தற்போது வெளிநாடுகளில் இருந்து இலங்கை வருவோர் கடைபிடிக்க வேண்டிய சுகாதார வழிமுறைகளுக்கு அமைய, தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இந்தியாவிலும் உயிர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த இந்த வீரர்கள் 7 நாட்களின் பின்னர் தமது வீடுகளுக்கு செல்வார்கள் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தொடரின் இலங்கை லெஜன்ட்ஸ் அணியினை முன்னாள் சகலதுறைவீரர்ன திலகரட்ன டில்ஷான் வழிநடத்தியிருந்ததோடு, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நாயகர்களான சனத் ஜயசூரிய, ரங்கன ஹேரத், நுவான் குலசேகர போன்ற வீரர்களும் இந்த தொடரில் பங்கெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<