ஒருநாள் அரங்கில் 3000 ஓட்டங்கள் மைல்கல்லை எட்டிய பாபர் அசாம்

320
 

உலகக் கிண்ண லீக் போட்டியில் பாபர் அசாம் சதமடித்து கைகொடுக்க, நியூசிலாந்தை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றது. 

இந்தப் போட்டியில் பாகிஸ்தானுக்காக சதமடித்து அசத்திய பாபர் அசாம், ஒருநாள் அரங்கில் குறைந்த இன்னிங்ஸில் 3000 ஓட்டங்களைக் கடந்த உலகின் 2ஆவது வீரராகவும், ஆசியாவின் முதல் வீரராகவும் புதிய மைல்கல்லை எட்டினார்.

நான் இதுவரை கண்டிராத சிறந்த இன்னிங்ஸ்: பாபரை புகழ்ந்த சர்பராஸ்

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் …….

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி, நீஷம்கிராண்ட்ஹோம் இருவரினதும் இணைப்பாட்டத்தின் உதவியுடன் 50 ஓவர்களில் 237 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

பாகிஸ்தான் அணிக்கு 238 ஓட்டங்கள் என்ற இலக்கு எளிய இலக்காகவே கருதப்பட்டது. ஆனால், ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான இமாம் உல் ஹக் (19), பக்கர் சமான் (9) ஆகியோர் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து, போட்டியை நியூசிலாந்து அணிக்கு சாதகமாக மாற்றினர்.

எனினும், பாபர் அசாம் ஒருபுறம் நங்கூரம் போட்டு நிதானமாக துடுப்பெடுத்தாடி தனது 10ஆவது சதத்தைக் கடந்தார். ஹபீஸ் 32, ஹாரிஸ் சொஹைல் 68 ஓட்டங்களைக் குவித்து அவருக்கு ஒத்துழைப்பு அளித்தனர். இறுதியில் 49.1 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டிய பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி அசத்தியது

இந்தப் போட்டியில் பாபர் அசாம், தனது 29 ஓட்டங்களை எடுத்திருந்த போது, ஒருநாள் அரங்கில் 3,000 ஓட்டங்கள் என்ற புதிய மைல்கல்லை எட்டினார். இவர், 68 இன்னிஸ்களில் இந்த இலக்கை அடைந்தார். இதன்மூலம் குறைந்த இன்னிங்ஸில் 3,000 ஒருநாள் ஓட்டங்களை எடுத்த உலகின் 2ஆவது வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்

உலகக் கிண்ணத்தில் ஆர்ச்சர், வோர்னர், ஸ்டார்க் படைத்த சாதனை

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ………

இந்தப் பட்டியலில் தென்னாபிரிக்காவின் ஹசிம் அம்லா (57 இன்னிங்ஸ்) முதலிடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் ஜாம்பவான் விவியன் றிச்சர்ட்ஸ் (69 இன்னிங்ஸ்) மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.  

முன்னதாக ஒருநாள் அரங்கில் 21 இன்னிங்ஸில் 1000 ஓட்டங்களைக் கடந்து குறைந்த இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ஓட்டங்களை எடுத்த உலகின் 3ஆவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்ட பாபர் அசாம், 2000 ஓட்டங்களை 45 இன்னங்ஸில் கடந்தார். இதன்படி, 2000 ஓட்டங்கள் மைல்கல்லை வேகமாக எட்டிய உலகின் 2ஆவது வீரராகவும் அவர் இடம்பிடித்தமை இங்கு குறிப்பிடத்தக்கது

10ஆவது சதம்

நேற்றைய போட்டியில் தனது 10ஆவது ஒருநாள் சதத்தைப் பூர்த்தி செய்த அவர், குறைந்த இன்னிங்ஸில் 10 ஒருநாள் சதங்களை எடுத்த உலகின் 3ஆவது வீரராக இடம்பிடித்தார்

குறித்த பட்டியலில் தென்னாபிரிக்க வீரர்களான குயிண்டன் டி கொக் (55 இன்னிங்ஸ்) மற்றும் ஹசிம் அம்லா (57 இன்னிங்ஸ்) ஆகிய இருவரும் முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொள்ள இந்திய வீரர்களான ஷிகர் தவான் (77 இன்னிங்ஸ்) மற்றும் விராத் கோஹ்லி (80 இன்னிங்ஸ்) ஆகியோர் முறையே 4ஆவது, 5ஆவது இடங்களில் உள்ளனர்

கெயில் ஓய்வு பெறுவதாக எடுத்த முடிவில் மாற்றம்

தற்போது நடைபெற்று வரும் கிரிக்கெட் ……

32 வருட சாதனை

இந்தப் போட்டியில் 3ஆம் இலக்கத்தில் களமிறங்கி சதமடித்து அசத்திய பாபர் அசாம், உலகக் கிண்ண வரலாற்றில் 32 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் அணி சார்பாக மத்திய வரிசையில் களமிறங்கி சதமடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். இதற்குமுன் 1987ஆம் ஆண்டு சலீம் மலிக் சதமடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

அதிக ஓட்டம்

.சி.சியின் ஒருநாள் உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் 25 வயதுக்குள் அதிக ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட 5ஆவது வீரராகவும் அவர் புதிய மைல்கல்லை எட்டினார். இம்முறை உலகக் கிண்ணத்தில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 333 ஓட்டங்களைக் குவித்தார்.

குறித்த பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் (1996 – 523 ஓட்டங்கள்) முதலிடத்திலும், தென்னாபிரிக்காவின் ஏபி டி வில்லியர்ஸ் (2007 – 372 ஓட்டங்கள்) இரண்டாவது இடத்திலும், அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் (1999 – 354 ஓட்டங்கள்) மூன்றாவது இடத்திலும், மேற்கிந்திய தீவுகளின் பிரையன் லாரா (1992 – 333) நான்காவது இடத்திலும் உள்ளனர்

இந்த நிலையில், நியூசிலாந்துடனான வெற்றி குறித்து ஆட்டநாயகன் விருது வென்ற 24 வயதான பாபர் அசாம் கூறியதாவது:-

ஜிம்பாப்வே தொடருக்கான அயர்லாந்து குழாம் அறிவிப்பு

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியானது அயர்லாந்து……..

”இது எனது சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்றாகும். உண்மையில் இந்த ஆடுகளம் கடினமாக இருந்ததுடன், இரண்டாவது பாதியில் அதிக சுழற்சியை ஏற்படுத்தியது. எனினும், போட்டியின் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து எனது 100 சதவீத பங்களிப்பினை கொடுக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோளாக இருந்தது

எனவே அவ்வாறு விளையாடினால் நிச்சயம் பாகிஸ்தான் அணி வெற்றி பெறும் என்பதை அறிந்து வைத்தேன்

போட்டியை தொடங்கிய போது நாங்கள் லுக்கி பெர்குசனின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து திட்டமிட்டோம். எனினும், மிட்செல் சாண்ட்னெர் பந்துவீச வந்தபோது விக்கெட்டுக்களை கொடுக்காமல் வேகப் பந்துவீச்சாளர்கள் வந்தால் அதை நிவர்த்தி செய்ய எதிர்பார்த்தோம். அதிலும், குறிப்பாக, ஓரு ஓவரில் மூன்று அல்லது நான்கு ஓட்டங்களை குவிக்குமாறு ஹபீஸ் என்னிடம் சொன்னார். இறுதியில் எமது திட்டம் நிறைவேறியது” என அவர் தெரிவித்தார்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<