Home Tamil பெதும் நிஸ்ஸங்கவின் அதிரடியில் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு வெற்றி

பெதும் நிஸ்ஸங்கவின் அதிரடியில் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கு வெற்றி

1331

முத்தரப்பு ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெதும் நிஸ்ஸங்கவின் அபார சதத்தின் உதவியுடன் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 21 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணி, தென்னாபிரிக்க விளையாட்டு பல்கலைக்கழக பதினொருவர் அணிகளுடனான முத்தரப்பு ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. 

இலங்கை வளர்ந்துவரும் அணியை வீழ்த்திய தென்னாபிரிக்க பல்கலைக்கழக அணி

தென்னாபிரிக்காவில் நடைபெற்றுவரும் முத்தரப்பு…..

இந்தத் தொடரில் அடுத்தடுத்து 2 தோல்விகளை சந்தித்த இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி, பிரிட்டோரியாவில் இன்று (09) நடைபெற்ற 8 ஆவது லீக் ஆட்டத்தில் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணியை எதிர்த்தாடியது. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை வளர்ந்துவரும் அணியின் தலைவர் சரித் அசலங்க முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார்.

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வன்டிலே மெக்வட்டு மற்றும் ஜென்னமன் மாலன் களமிறங்கினர். மெக்வட்டு 6 ஓட்டங்களுடன் அசித பெர்னாண்டோவின் வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து மாலனுடன் அணித் தலைவர் ரெய்னார்ட் வான் டன்டர் ஜோடி சேர்ந்தார். பொறுப்புடன் விளையாடிய இருவரும் 2 ஆவது விக்கெட்டுக்கு 35 ஓட்டங்களை சேர்த்தனர். ரெய்னார்ட் 23 ஓட்டங்களை எடுத்து சாமிக்க கருணாரத்னவின் பந்துவீச்சில் வெளியேறினார். 

இதனையடுத்து மாலனுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ஸ்மித் இலங்கை அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தார். 

நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 3 ஆவது விக்கெட்டுக்காக 65 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, ஜேசன் ஸ்மித் 30 ஓட்டங்களுடனும், அரைச் சதம் கடந்த ஜென்னமன் மாலன் 60 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

தொடர்ந்து மத்திய வரிசையில் களமிறங்கிய ஷனதெம்ப கியூஷல் (17), சிபனெலோ மகன்யா (35) மற்றும் கைல் சிம்மெண்ட்ஸ் ஆகியோர் பொறுப்பாக விளையாடி அந்த அணிக்கு நம்பிக்கை கொடுத்தனர்.

இந்த நிலையில், மார்கோ ஜென்சன், நன்றி பேர்கர் ஜோடி 9 ஆவது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி 44 ஓட்டங்களைக் குவிக்க, தென்னாபிரிக்க வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 296 ஓட்டங்களைக் குவித்தது.

அந்த அணிக்காக அபாரமாக துடுப்பெடுத்தாடிய நன்றி பேர்கர் 20 பந்துகளில் 6 சிக்ஸர்கள், ஒரு பௌண்டரி அடங்கலாக 53 ஓட்டங்களுடன் இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையில்…..

இலங்கை வளர்ந்துவரும் அணியின் பந்துவீச்சில் சாமிக்க கருணாரத்ன 3 விக்கெட்டுக்களையும், அசித பெர்னாண்டோ 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

பின்னர் 297 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக சந்துன் வீரக்கொடி மற்றும் பெதும் நிஸ்ஸங்க களமிறங்கினர்.

சந்துன் வீர்க்கொடி சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டமேதும் பெறாமல் வெளியேறினார். தொடர்ந்து வந்த கமிந்து மெண்டிஸ் ஒரு ஓட்டத்துடன் மார்கோ ஜென்சனின் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். 

இதனை அடுத்து பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்த சரித் அசலங்க 3 ஆவது விக்கெட்டுக்காக 137 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பகிர்ந்து வலுச்சேர்த்தார். 

எனினும், நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் சரித் அசலங்க 91 ஓட்டங்களுடன் துரதிஷ்டவசமாக மார்கோ ஜென்சனின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 

இதன் பிறகு பெதும் நிஸ்ஸங்கவுடன் ஜோடி சேர்ந்த சம்மு அஷான் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் பந்து வீச்சை நேர்த்தியாக எதிர்கொண்டு ஓட்டங்களை குவித்தார்.

நிதானமாக ஓட்டங்களைக் குவித்த இருவரும் 4 ஆவது விக்கெட்டுக்காக 69 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றுக்கொள்ள, சம்மு அஷான் 22 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து ஜோடி சேர்ந்த பெதும் நிஸ்ஸங்க, அஷேன் பண்டார ஆகியோர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் இலங்கை வளர்ந்துவரும் அணி வெற்றி இலக்கை நெருங்கியது. 

எனினும், இலங்கை வளர்ந்துவரும் அணி வெற்றி பெற 39 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பெதும் நிஸ்ஸங்க 104 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இந்த நிலையில், 44 ஆவது ஓவரில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 262 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது ஆட்டம் வெளிச்சமின்மை காரணமாக தடைப்பட்டது. இதனால் போட்டியை தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட டக்வத் லூயிஸ் முறையப்படி இலங்கை தரப்புக்கு வெற்றி வழங்கப்பட்டது. 

பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகமாட்டேன் என்கிறார் ஹதுருசிங்க

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கிண்ண கிரிக்கெட்….

இறுதியில் அஷேன் பண்டார 26 ஓட்டங்களையும், ரமேஷ் மெண்டிஸ் ஓட்டங்களையும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் ஆடுகளத்தில் இருந்தனர். முடிவில் இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி டக்வத் லூயிஸ் முறைப்படி 21 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. 

தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் சார்பில் அதிகபட்சமாக மார்கோ ஜென்சன் 2 விக்கெட்டுக்களைப் பெற்றுக்கொள்ள, சதமடித்து அசத்திய பெதும் நிஸ்ஸங்க போட்டியின் ஆட்ட நாயகன் விருதை தட்டிச் சென்றார். 

ஸ்கோர் விபரம்

Result


Sri Lanka Emerging Team
262/5 (44)

South Africa Emerging Team
296/9 (50)

Batsmen R B 4s 6s SR
Janneman Malan b Lahiru Madushanka 60 62 6 2 96.77
Wandile Makwetu c Kamindu Mendis b Asitha Fernando 6 8 1 0 75.00
Raynard van Tonder c Sandun Weerakkody b Chamika Karunarathne 23 34 3 0 67.65
Jason Smith run out (Kamindu Mendis) 30 42 4 0 71.43
Sinethemba Qeshile c Sandun Weerakkody b Ramesh Mendis 17 25 1 0 68.00
Sibonelo Makhanya b Amila Aponso 35 53 2 2 66.04
Dayyaan Galiem c Sandun Weerakkody b Chamika Karunarathne 6 11 0 0 54.55
Kyle Simmonds c Kamindu Mendis b Chamika Karunarathne 35 24 2 3 145.83
M Jansen not out 53 20 1 6 265.00
Nandre Burger c Kamindu Mendis b Asitha Fernando 15 19 0 0 78.95
Tladi Bokako not out 1 2 0 0 50.00


Extras 15 (b 1 , lb 4 , nb 0, w 10, pen 0)
Total 296/9 (50 Overs, RR: 5.92)
Fall of Wickets 1-15 (2.4) Wandile Makwetu, 2-50 (10.1) Raynard van Tonder, 3-120 (23.3) Jason Smith, 4-122 (24.3) Janneman Malan, 5-150 (31.5) Sinethemba Qeshile, 6-170 (36.2) Dayyaan Galiem, 7-214 (42.5) Sibonelo Makhanya, 8-226 (43.2) Kyle Simmonds, 9-270 (48.4) Nandre Burger,

Bowling O M R W Econ
Asitha Fernando 10 0 47 2 4.70
Lahiru Madushanka 10 1 74 1 7.40
Amila Aponso 10 0 68 1 6.80
Chamika Karunarathne 10 1 50 3 5.00
Kamindu Mendis 10 0 52 1 5.20


Batsmen R B 4s 6s SR
Pathum Nissanka c Wandile Makwetu b Nandre Burger 104 104 8 1 100.00
Sandun Weerakkody b M Jansen 0 1 0 0 0.00
Kamindu Mendis c Wandile Makwetu b Tladi Bokako 1 9 0 0 11.11
Charith Asalanka lbw b M Jansen 91 94 8 4 96.81
Sammu Ashan b Dayyaan Galiem 22 36 1 0 61.11
Ashen Bandara not out 26 21 4 0 123.81
Ramesh Mendis not out 2 4 0 0 50.00


Extras 16 (b 1 , lb 1 , nb 5, w 9, pen 0)
Total 262/5 (44 Overs, RR: 5.95)
Fall of Wickets 1-2 (0.2) Sandun Weerakkody, 2-4 (1.5) Kamindu Mendis, 3-141 (25.6) Charith Asalanka, 4-210 (36.2) Sammu Ashan, 5-257 (42.5) Pathum Nissanka,

Bowling O M R W Econ
M Jansen 8 0 35 2 4.38
Tladi Bokako 8 1 43 1 5.38
Nandre Burger 8 0 40 1 5.00
Dayyaan Galiem 8 0 51 1 6.38
Kyle Simmonds 10 0 72 0 7.20
Jason Smith 2 0 18 0 9.00



முடிவு – இலங்கை வளர்ந்துவரும் கிரிக்கெட் அணி 21 ஓட்டங்களால் வெற்றி (டக்வத் லூயிஸ் முறை)

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<