முதல் இன்னிங்ஸில் பின்தங்கிய NCC அதிரடி வெற்றி ​

130

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் பிரீமியர் லீக் முதல்தர கிரிக்கெட் தொடரின் ஆறு போட்டிகள் இன்று (13) நிறைவடைந்தன. இந்த போட்டிகளின் விபரம் வருமாறு.

NCC எதிர் இலங்கை துறைமுக அதிகரசபை CC

சதுரங்க டி சில்வாவின் அபார சதம் மற்றும் சச்சின்த பீரிஸின் அதிரடி பந்துவீச்சின் உதவியோடு துறைமுக அதிகாரசபை அணிக்கு எதிரான போட்டியில் NCC அணி 258 ஓட்டங்களால் இமாலய வெற்றி ஒன்றை பெற்றது.

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் NCC அணி முதல் இன்னிங்ஸில் பின்தங்கியபோதும் இரண்டாவது இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 365 ஓட்டங்களை பெற்றது. சதுரங்க டி சில்வா 100 ஓட்டங்களை பெற்றார். மஹேல உடவத்த 7 ஓட்டங்களால் சதத்தை தவறவிட்டார்.

அடுத்தடுத்து இரண்டாவது இரட்டைச் சதம் பெற்ற பிரியமால் பெரே

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A…

இந்நிலையில் 354 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு இரண்டாவது இன்னிங்ஸை ஆடிய துறைமுக அதிகாரசபை அணி 95 ஓட்டங்களுக்கே சுருண்டது. வலதுகை சுழற்பந்து வீச்சாளர் சச்சின்த பீரிஸ் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 218 (59.1) – மாலிங்க அமரசிங்க 54, சமித ரங்கன 42, சத்துரங்க டி சில்வா 39, சமிந்த பண்டார 3/55, அனுக் டி அல்விஸ் 2/11, இமேஷ் உதயங்க 2/52, சானக்க கோமசாரு 2/59

இலங்கை துறைமுக அதிகாரசபை CC (முதல் இன்னிங்ஸ்) – 230 (74.5) – பிரிமோஷ் பெரேரா 76, அதீஷ நாணயக்கார 56*, அனுக் டி அல்விஸ் 37, சத்துரங்க டி சில்வா 4/99, சச்சின்த பீரிஸ் 3/42

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 365/5d (72) – சதுரங்க டி சில்வா 100, மஹேல உடவத்த 93, லஹிரு உதார 64, நிமேஷ குணசிங்க 50*, சானக்க கோமசரு 2/94

இலங்கை துறைமுக அதிகாரசபை CC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 95 (23.5) – இமேஷ் உதயங்க 22, சச்சின்த பீரிஸ் 5/49, டிலேஷ் குணரத்ன 3/27

முடிவு NCC 258 ஓட்டங்களால் வெற்றி


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

மக்கொன, சர்ரே வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சரசென்ஸ் அணி தனது அதிரடி பந்துவீச்சு மூலம் நீர்கொழும்புக்கு எதிராக 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றி பெற்றது.

அடுத்தடுத்து இரண்டாவது இரட்டைச் சதம் பெற்ற பிரியமால் பெரே

நீர்கொழும்பு அணி இரண்டாவது இன்னிங்ஸில் 138 ஓட்டங்களுக்கு சுருட்டிய சரசென்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 53 ஓட்ட வெற்றி இலக்கை 2 விக்கெட்டுகளை இழந்து எட்டியது.

போட்டியின் சுருக்கம்   

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 216 (65) – ஷெஹான் ஜயசூரிய 62, லசித் க்ரூஸ்புள்ளே 56, அஞ்செலோ ஜயசிங்க 31*, சாமிக்கர எதிரிசிங்க 4/51, ஹரீன் வீரசிங்க 2/29, சாலிய சமன் 2/30

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 302 (134) – நிபுன் கருனநாயக்க 74, அஷேன் பண்டார 64, சாமிக்கர எதிரிசிங்க 54, மிலிந்த சிறிவர்தன 41, உபுல் இந்திரசிறி 5/76, ஷெஹான் ஜயசூரிய 3/108

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 138 (55.4) – அ​ஷேன் சில்வா 35, ஹரீன் வீரசிங்க 5/39, சாமிக்கர எதிரிசிங்க 3/41

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 58/2 (6.4) – கமிந்து கனிஷ்க 22

முடிவு – நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் 8 விக்கெட்டுகளால் வெற்றி


CCC எதிர் பதுரெலிய கிரிக்கெட் கழகம்

CCC அணி இரண்டு இன்னிங்ஸ்களிலும் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய நிலையில் பதுரெலிய கிரிக்கெட் கழகம் தோல்வி ஒன்றை தவிர்த்துக் கொண்டது.

போராட்டத்தின் பின் T20I தொடரையும் இழந்த இலங்கை

மொரட்டுவை டி சொய்சா அரங்கில் நடைபெற்ற போட்டியில் CCC அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சிறப்பாக ஆடி 357 ஓட்டங்களை பெற்ற நிலையில் பதுரெலிய அணிக்கு 488 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. எனினும் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த பதுரெலிய அணி கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போது 17 ஓவர்களில் 63 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

போட்டியின் சுருக்கம்

CCC (முதல் இன்னிங்ஸ்) – 378 (101) – வனிந்து ஹசரங்க 82, மாதவ வர்ணபுர 59, லசித் அபேரத்ன 49, ரொன் சந்திரகுப்தா 36, சச்சித் பத்திரன 4/154, புத்திக்க சஞ்சீவ 2/94

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 248 (61.1) – பிரமுத் ஹெட்டிவத்த 59, நதீர நாவல 45, சுப்ரமனியன் ஆனந்த் 40, வனிந்து ஹசரங்க 5/78, மலிந்த புஷ்பகுமார 3/91, விஷ்வ பெர்னாண்டோ 2/41

CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 357/9d (83) – லசித் அபேரத்ன 73, லஹிரு மதுசங்க 61, மினோத் பானுக்க 57, மாதவ வர்ணபுர 55, டிடென்டா டைபு 3/24, அலங்கார அசங்க 2/28

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (இரண்டாது இன்னிங்ஸ்) – 63/5 (17) – வனிந்து ஹசரங்க 2/24, ரொன் சந்திரகுப்தா 2/01

முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது

முன்வரிசை வீரர்களின் அரைச்சதங்களோடு வலுப்பெற்றுள்ள அயர்லாந்து A அணி

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

பாணகொட, இராணுவ மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது. எனினும் இராணுவப்படை கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக ராகம கிரிக்கெட் கழகத்திற்கு முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று அதற்கான புள்ளிகளை பெற முடிந்தது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 284 (109.2) – சன்ஜிக்க ரித்ம 62, துஷான் விமுக்தி 62, லக்ஷித்த மதுஷான் 42, லக்ஷித்த எதிரிசிங்க 38, அமில அபொன்சோ 3/75, இஷான் ஜயரத்ன 2/65

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 226 (88.3) – சுபேஷல ஜயதிலக்க 57, தினெத் திமோத்ய 44, சமிந்த பெர்னாண்டோ 43, சமீர டி சொய்சா 33, ஜனித் சில்வா 4/44, லக்ஷான் மதுஷங்க 3/70

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) 281/7 (66) – ஹிமேஷ் லியனகே 88, லக்ஷித்த மதுஷான் 80, சஞ்சிக்க ரித்ம 40, துஷான் விமுக்தி 31, செஹான் பெர்னாண்டோ 2/21

முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

இரு அணிகளும் துடுப்பாட்டத்தில் சோபித்த சோனகர் மற்றும் தமிழ் யூனியன் கழகத்திற்கு இடையிலான போட்டி வெற்றி தோல்வி இன்றி சமநிலையில் முடிவுற்றது.

நிபுன் – சமிந்துவின் சிறப்பாட்டத்தால் ஆஸி இளையோரை வீழ்த்திய இலங்கை இளையோர்

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடிய சோனகர் அணி சார்பில் அனுபவ வீரர் சாமர சில்வா 105 ஓட்டங்களை பெற்றார். முன்னதாக தமிழ் யூனியன் கழகத்திற்காக சச்சித்ர சேரசிங்க முதல் இன்னிங்ஸில் சதம் பெற்றார்.

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326 (95.3) – ரமேஷ் மெண்டிஸ் 76, சாமர சில்வா 43, சரித் குமாரசிங்க 36, நிமன்த மதுஷங்க 35, அயன சிறிவர்தன 31, ஜீவன் மெண்டிஸ் 5/121, தமித் சில்வா 3/59

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 361 (95.5) – சச்சித்ர சேரசிங்க 160, தரங்க பரணவிதான 57, தமித சில்வா 49*, ரமேஷ் மெண்டிஸ் 5/124   

சோனகர் விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 329/6 (63) – சாமர சில்வா 105, பபசர வாதுகே 64, ரமேஷ் மெண்டிஸ் 65, லஹிரு அத்தநாயக்க 52*, செஹான் மதுசங்க 2/26

முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

ரமிந்த விஜேசூரியவின் சதத்தின் மூலம் கோல்ட் அணியின் நெருக்கடியை தவிர்த்துக் கொண்ட BRC  அணி தனது சொந்த மைதானத்தில் நடைபெற்ற போட்டியை சமநிலையில் முடித்துக் கொண்டது.

பிரியமால் பேரேராவின் இரட்டைச் சதத்தின் மூலம் கோல்ட்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 391 ஓட்டங்களை பெற்றதோடு BRC அணி தனது முதல் இன்னிங்ஸில் 354 ஓட்டங்களை பெற்றது.

நியூசிலாந்து எதிராக சாதனை படைத்த திசர பெரேரா தரவரிசையில் அதிரடி முன்னேற்றம்

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 391 (128.5) – பிரியமால் பெரேரா 200*, நிஷான் மதுஷ்க 46, ஹஷான் துமிந்து 42, திலகரத்ன சம்பத் 6/86, துவிந்து திலகரத்ன 2/129

BRC (முதல் இன்னிங்ஸ்) – 354 (80) – ரமிந்த விஜேசூரிய 104, ருமேஷ் புத்திக்க 62, விகும் சஞ்சய 48*, ஹஷேன் ராமனாயக்க 47, அகில தனஞ்சய 4/104

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 194/5 (57.3) – சங்கீத் குரே 95, விஷாத் ரன்திக்க 50*, ஹஷான் துமிந்து 33, ருமேஷ் புத்திக்க 2/41

முடிவு போட்டி சமநிலையில் முடிவுற்றது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<