ரொனால்டோவின் சாகசத்துடன் சம்பியன்ஸ் லீக்கில் ரியல் மெட்ரிட் ஆதிக்கம்

393
AFP

ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் முதல் கட்ட காலிறுதி போட்டிகளில் ரியல் மெட்ரிட் மற்றும் பேயர்ன் முனிச் அணிகள் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியுள்ளன.  

இதில் ஜுவன்டஸ் அணியுடனான போட்டியில் ரொனால்டோ பாய்ந்து தலைகுப்புற அடித்த அபார கோல் ரியல் மெட்ரிட் அணியின் வெற்றிக்கு உதவியது. செவில்லா அணியுடனான காலிறுதிப் போட்டியில் தியாகோ அல்கன்டாரா தலையால் முட்டி போட்ட கோல் சம்பியன்ஸ் லீக்கில் பேயர்ன் முனிச் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த உதவியது.

காயமடைந்துள்ள நெய்மார் உலகக் கிண்ணத்தில் ஆடுவதில் நெருக்கடி

பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் (PSG) கால்பந்து அணியின் முன்கள வீரர் நெய்மார் JR இற்கு …

32 அணிகளுடன் ஆரம்பமான 63ஆவது சம்பியன்ஸ் லீக் போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில்ரவுன்ட் ஒப் 16′ சுற்று முடிவில் தேர்வான எட்டு அணிகளும் இரண்டு கட்டங்கள் கொண்ட காலிறுதி சுற்றில் ஆடுகின்றன. இதன்போது ஒரு அணி தனது சொந்த மைதானத்தில் ஒரு போட்டியிலும் எதிரணி மைதானத்தில் ஒரு போட்டியிலும் விளையாடி, இரண்டு மோதல்களினதும் முடிவில் முன்னிலை பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

ஜுவன்டஸ் எதிர் ரியல் மெட்ரிட்

இத்தாலியின் ஜுவன்டஸ் அணி தனது சொந்த மைதானத்தில் நடந்த முதல் கட்ட காலிறுதி போட்டியில் ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழகத்தை சமாளிக்க முடியாமல் தோல்வியடைந்தது. அதிலும் நட்சத்திர வீரர் ரொனால்டோ தனது வழக்கமான ஆட்டத்தை வெளிக்காட்ட ரியல் மெட்ரிட் அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.

இத்தாலி நேரப்படி நேற்று (03) இரவு நடைபெற்ற இந்த போட்டியில் ரியல் மெட்ரிட் முன்கள வீரர் ரொனால்டோ பெற்ற இரண்டு கோல்களில் முதல் கோலை போட்டபோது 10 சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் தொடர்ச்சியாக கோல்களை பெற்றவர் என்ற சாதனையையும் படைத்தார்.   

அவர் போட்டியின் மூன்றாவது நிமிடத்திலேயே அந்த கோலை போட்டு தனது அணியை முன்னிலை பெறச் செய்தார். இதன் பின் ஜுவன்டஸ் அணிக்கு அந்த கோலை சமநிலைப் படுத்த முதல் பாதியில் சிறந்த வாய்ப்பொன்று கிடைத்தபோதும், அதனை மெட்ரிட் கோல் காப்பாளர் நவாஸ் சிறந்த முறையில் பாய்ந்து தடுதத்தார். பின்னர் அவ்வணியின் டோனி குரூஸ் உதைத்த பந்து கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது.

இதனால் முதல் பாதியில் ரியல் மெட்ரிட் வீரர்களால் 1-0 என முன்னிலை பெற முடிந்தது.  

முதல் பாதி: ரியல் மெட்ரிட் 1 – 0 ஜுவன்டஸ்

இதனைத் தொடர்ந்தே சம்பியன்ஸ் லீக் தொடரின் சிறப்பான தருணத்தை பார்க்க முடிந்தது. ரியல் மெட்ரிட் வீரர்களின் தொடர் முயற்சியின் முதல் முயற்சியை 40 வயதுடைய ஜுவன்டஸ் கோல் காப்பாளர் கியான்லிகி பபோன் சிறப்பாகத் தடுத்தார்.

எகிப்து கால்பந்து நட்சத்திரம் சலாஹ்வுக்கு மற்றுமொரு விருது

லிவர்பூல் அணிக்காக விளையாடி வரும் எகிப்தின் மொஹமட் சலாஹ், 2017ஆம் …

எனினும் மீண்டும்  டானியல் கர்வஜால் உயரத் தூக்கி போர்த்துக்கல் வீரர் ரொனால்டோவுக்கு பரிமாற்றிய பந்தை ரொனால்டோ பறந்த படியே எதிரணியில் கோலை நோக்கி உதைத்தார். அதனை பபோனினால் தடுக்க முடியாமல் போக, பந்து கோலாக மாறியது. 64ஆவது நிமிடத்தில் போடப்பட்ட இந்த கோலால் ரியெல் மெட்ரிட் 2-0 என வலுவான முன்னிலை பெற்றது.

இந்நிலையில் இரண்டு நிமிடங்கள் கழித்து கர்வஜான் நெஞ்சில் பாதத்தால் மிதித்த ஜுவன்டஸ் அணியின் முன்னணி வீரர் போல் டைபால் இரண்டாவது மஞ்சள் அட்டை பெற்று, மைதானத்தில் இருந்து வெளியேற இத்தாலி கழகத்தின் நம்பிக்கை சிதறியது

இந்நிலையில் 72ஆவது நிமிடத்தில் முன்களத்தில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பந்துப் பரிமாற்றங்களின் நிறைவில் மர்செலோ மற்றொரு கோலை புகுத்த ரியல் மெட்ரிட்டின் வெற்றி உறுதியானதோடு அந்த அணி அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பையும் அதிகரித்துக் கொண்டது.

ரியல் மெட்ரிட் அணியில் கோல் இயந்திரமாக மாறியிருக்கும் ரொனால்டோ அந்த அணிக்காக கடைசியாக ஆடிய ஒன்பது போட்டிகளில் 19 கோல்களை போட்டுள்ளார். அதேபோன்று கடைசியாக ஆடிய தனது 10 சம்பியன்ஸ் லீக் போட்டிகளிலும் அவர் 14 கோல்களை புகுத்தியுள்ளார். இதில் கடந்த ஆண்டு சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டியில் இதே ஜுவன்டஸ் அணிக்கு எதிராக பெற்ற இரட்டை கோல்களும் அடங்கும்.   

இரு அணிகளும் தனது இரண்டாவது கட்ட காலிறுதியில் ஏப்ரல் 11ஆம் திகதி பலப்பரீட்சை நடத்தவுள்ளன.  

முழு நேரம்: ரியல் மெட்ரிட் 3 – 0 ஜுவன்டஸ்

கோல் பெற்றவர்கள்

ரியல் மெட்ரிட் ரொனால்டோ 3′, 64′, மார்செலோ 72′

சிவப்பு அட்டை டைபாலா 66′  

ரினௌன் அணியோடு இணையும் சொலிட் இளம் வீரர் ஜூட்சுபன்

கடந்த பல ஆண்டுகளாக அநுராதபுரம் சொலிட் விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடி …

பேயர்ன் முனிச் எதிர் செவில்லா

ஸ்பெயினின், அன்தலூசியாவில் உள்ள தனது சொந்த மைதானத்தில் நேற்று (03) நடைபெற்ற போட்டியில் செவில்லா அணி முதல் கோலை போட்டு முன்னிலைபெற்றது. எனினும் அவ்வணி ஓன் கோல் ஒன்றை பெற்றுக் கொடுத்தமை பேயர்ன் முனிச் அணி வெற்றியை பெறுவதற்கு உதவியது.

ரவுன்ட் ஒப் 16′ சுற்றில் மன்செஸ்டர் யுனைட்டட் அணியை வெளியேற்றி அதிர்ச்சி கொடுத்த செவில்லா அணி 32ஆவது நிமிடத்தில் கோல் போட்டபோது மற்றொரு வெற்றி வாய்ப்பை பெற்றது. பப்லோ சரபியா கோல் கம்பத்திற்கு நெருக்கமாக உதைத்த பந்து கோலாக மாறியது.

எனினும் போட்டியின் 32ஆவது நிமிடத்தில் பிரான்க் ரிபரி கடத்தி வந்த பந்தை செவில்லா கோல் கம்பத்திற்கு அருகில் வைத்து பரிமாற்றியபோது அதனை வெளியே தட்டிவிட ஜேஸுஸ் நவாஸ் முயன்றார். எனினும் அது கோல் காப்பாளரை தாண்டி ஓன் கோலாக மாறியது. இதன்மூலம் பேயர்ன் முனிச் அணியால் முதல் பாதியில் 1 – 1 என சமநிலை பெற முடிந்தது.    

முதல் பாதி: பேயர்ன் முனிச் 1 – 1 செவில்லா

இந்நிலையில் இரண்டாவது பாதி ஆட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. இரு அணிகளும் சரிசமமாக பந்தை தக்கவைத்துக் கொண்டு கோலாக மாற்ற முயற்சித்தன.

இந்நிலையில் போட்டியில் 68 ஆவது நிமிடத்தில் எதிரணி கோல் கம்பத்திற்கு அருகால் உயர பரிமாற்றப்பட்ட பந்தை டியாகோ அல்கன்டாரா வேகமாக தலையால் முட்டி கோலாக்க பேயர்ன் முனிச் அணிக்கு அது வெற்றி கோலாக மாறியது. இதனைத் தொடர்ந்து முதல் முறை சம்பியன்ஸ் லீக் காலிறுதி வரை முன்னேறிய செவில்லா அணிக்கு கோல் புகுத்த முடியாமல்போனது.  

இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முதல் கட்ட காலிறுதியில் வெற்றி பெற்றிருக்கும் பேயர்ன் முனிச் இரண்டாவது கட்ட போட்டியில் ஏப்ரல் 11ஆம் திகதி செவில்லா அணியை எதிர்கொள்ளவுள்ளது.  

இதில் கடந்த ஏழு ஆண்டுகளில் ஆறாவது தடவையாக பேயர்ன் முனிச் அணிக்கு சம்பியன்ஸ் லீக் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

முழு நேரம்: பேயர்ன் முனிச் 2 – 1 செவில்லா

கோல் பெற்றவர்கள்

பேயர்ன் முனிச் ஜேசுஸ் நவாஸ் 37′ (ஓன் கோல்), டியாகோ அல்கன்டாரா 68′

செவில்லா சரபியா 32′

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க..