அடுத்தடுத்து இரண்டாவது இரட்டைச் சதம் பெற்ற பிரியமால் பெரே

281

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) பிரிவு A உள்ளூர் கிரிக்கெட் கழகங்களுக்கு இடையே ஒழுங்கு செய்து நடாத்தும் மூன்று நாட்கள் கொண்ட மேஜர் ப்ரீமியர் லீக் முதல் தர கிரிக்கெட் தொடரின் ஆறு போட்டிகளின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று (12) நிறைவடைந்தன.

CCC எதிர் பதிரெலிய கிரிக்கெட் கழகம்

வனிந்து ஹசரங்கவின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் பதுரெலிய அணிக்கு எதிராக CCC வலுவான நிலையை எட்டியுள்ளது. மொரட்டுவை, டி சொய்சா அரங்கில் நடைபெற்றுவரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 130 ஓட்டங்களால் முன்னிலை பெற்ற நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிவரும் CCC இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது விக்கெட் இழப்பின்றி 34 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Photos: Baduruliya CC v CCC | Major League Tier A Tournament 2018/19

இதன் போது வனிந்து ஹசரங்க CCC அணிக்காக முதல் இன்னிங்ஸில் 82 ஓட்டங்களை பெற்றதோடு பந்துவீச்சில் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.

போட்டியின் சுருக்கம்

CCC (முதல் இன்னிங்ஸ்) – 378 (101) – வனிந்து ஹசரங்க 82, மாதவ வர்ணபுர 59, லசித் அபேரத்ன 49, ரொன் சந்திரகுப்தா 36, சச்சித் பத்திரன 4/154, புத்திக்க சஞ்சீவ 2/94

பதுரெலிய கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 248 (61.1) – பிரமுத் ஹெட்டிவத்த 59, நதீர நாவல 45, சுப்ரமனியன் ஆனந்த் 40, வனிந்து ஹசரங்க 5/78, மலிந்த புஷ்பகுமார 3/91, விஷ்வ பெர்னாண்டோ 2/41

CCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 34/0 (12) – மாதவ வர்ணபுர 22*


கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் BRC

இளம் வீரர் பிரியமால் பெரேரா அடுத்தடுத்து பெற்ற இரண்டாவது இரட்டைச் சதத்தின் மூலம் BRC அணிக்கு எதிராக கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் வலுவான நிலையை எட்டியுள்ளது.

கோல்ட்ஸ் அணிக்கு கைகொடுத்த பிரியமால் பெரேராவின் சதம்

இரண்டாவது நாளில் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த கோல்ட்ஸ் அணி 391 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. இதன் போது 110 ஓட்டங்களுடன் இன்று துடுப்பாட்டத்தை தொடர்ந்த 23 வயதுடைய பிரியமால் பெரேரா கடைசிவரை களத்தில் இருந்து ஆட்டமிழக்காது 200 ஓட்டங்களை பெற்றார். முன்னதாக அவர் பதுரெலிய அணிக்கு எதிராக கடைசியாக நடைபெற்ற ஆட்டத்தில் ஆட்டமிழக்காது 206 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த BRC கழகம் ஆட்ட நேர முடிவின் போது 208 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

போட்டியின் சுருக்கம்

கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 391 (128.5) – பிரியமால் பெரேரா 200*, நிஷான் மதுஷ்க 46, ஹஷான் துமிந்து 42, திலகரத்ன சம்பத் 6/86, துவிந்து திலகரத்ன 2/129

BRC (முதல் இன்னிங்ஸ்) – 208/7 (54) – ருமேஷ் புத்திக்க 62, ஹஷேன் ராமனாயக்க 47, அகில தனஞ்சய 3/50

>> நிபுன் – சமிந்துவின் சிறப்பாட்டத்தால் ஆஸி இளையோரை வீழ்த்திய இலங்கை இளையோர்

NCC எதிர் இலங்கை துறைமுக அதிகாரசபை CC

தனது சொந்த மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் முதல் இன்னிங்ஸில் தடுமாற்றம் கண்ட NCC அணி துறைமுக அதிகாரசபைக்கு எதிராக இரண்டாவது இன்னிங்ஸில் 230 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.

துறைமுக அதிகாரசபை முதல் இன்னிங்ஸில் 230 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த நிலையில் இரண்டாவது இன்னிங்சுக்காக துடுப்பாடிவரும் NCC அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 229 ஓட்டங்களை பெற்றுள்ளது.

Photos: NCC v SLPA SC – Major League Tier A Tournament 2018/19

போட்டியின் சுருக்கம்

NCC (முதல் இன்னிங்ஸ்) – 218 (59.1) – மாலிங்க அமரசிங்க 54, சமித ரங்கன 42, சத்துரங்க டி சில்வா 39, சமிந்த பண்டார 3/55, அனுக் டி அல்விஸ் 2/11, இமேஷ் உதயங்க 2/52, சானக்க கோமசாரு 2/59

இலங்கை துறைமுக அதிகாரசபை CC (முதல் இன்னிங்ஸ்) – 230 (74.5) – பிரிமோஷ் பெரேரா 76, அதீஷ நாணயக்கார 56*, அனுக் டி அல்விஸ் 37, சத்துரங்க டி சில்வா 4/99, சச்சின்த பீரிஸ் 3/42

NCC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 229/3 (44) – சதுரங்க டி சில்வா 84, மஹேல உடவத்த 67*, லஹிரு உதார 64


சோனகர் விளையாட்டுக் கழகம் எதிர் தமிழ் யூனியன் கழகம்

சோனகர் அணி முதல் இன்னிங்ஸில் பெற்ற 326 ஓட்டங்களை விஞ்சி தமிழ் யூனியன் அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது.

Photos: Moors SC v Tamil Union C & AC – Major League Tier A Tournament 2018/19

சோனகர் கிரிக்கெட் கழக மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் தமிழ் யூனியன் அணி இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 336 ஓட்டங்களை பெற்றுள்ளது. அபாரமாக துடுப்பெடுத்தாடிய சச்சித்ர சேரசிங்க (160) முதல் தர போட்டிகளில் தொடர்ந்து இரண்டாவது சதத்தை பெற்றார். அவர் கடந்த வாரம் ராகம கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக 152 ஓட்டங்களை பெற்றார்.  

போட்டியின் சுருக்கம்

சோனகர் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 326 (95.3) – ரமேஷ் மெண்டிஸ் 76, சாமர சில்வா 43, சரித் குமாரசிங்க 36, நிமன்த மதுஷங்க 35, அயன சிறிவர்தன 31, ஜீவன் மெண்டிஸ் 5/121, தமித் சில்வா 3/59

தமிழ் யூனியன் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 336/6 (86) – சச்சித்ர சேரசிங்க 160, தரங்க பரணவிதான 57, தமித சில்வா 37*, ரமேஷ் மெண்டிஸ் 2/113


நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் எதிர் சரசென்ஸ் விளையாட்டுக் கழகம்

மக்கொன, சர்ரே வில்லேஜ் மைதானத்தில் நடைபெற்று நடைபெற்றுவரும் போட்டியில் நீர்கொழும்பு கிரிக்கெட் கழகத்திற்கு எதிராக சரசென்ஸ் கழகம் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றுள்ளது. நீர்கொழும்பு அணி முதல் இன்னிங்ஸில் 216 ஓட்டங்களை பெற்ற நிலையில் சரசென்ஸ் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்சுக்காக 7 விக்கெட்டுகளை இழந்து 228 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

நீர்கொழும்பு கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 216 (65) – ஷெஹான் ஜயசூரிய 62, லசித் க்ரூஸ்புள்ளே 56, அஞ்செலோ ஜயசிங்க 31*, சாமிக்கர எதிரிசிங்க 4/51, ஹரீன் வீரசிங்க 2/29, சாலிய சமன் 2/30

சரசென்ஸ் விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 228/7 (100) – அஷேன் பண்டார 64, நிபுன் கருனநாயக்க 64*, மிலிந்த சிறிவர்தன 41, உபுல் இந்திரசிறி 4/64, ரொஷேன் பெர்னாண்டோ 2/39

>> முதலாவது போட்டியில் இந்தியாவை வீழ்த்திய அவுஸ்திரேலியா

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் எதிர் ராகம கிரிக்கெட் கழகம்

மக்கொன, இராணுவ மைதானத்தில் நடைபெற்றுவரும் போட்டியில் இராணுவப்படை அணி நிதானமாக துடுப்பாடி பெற்ற 284 ஓட்டங்களை எட்டி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற ராகம கிரிக்கெட் கழகம் போராடி வருகிறது. இரண்டாவது நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்ஸை துடுப்பாடும் ராகம கிரிக்கெட் கழகம் 5 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இராணுவப்படை கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 284 (109.2) – சன்ஜிக்க ரித்ம 62, ரிதுஷான் விமக்தி 62, லக்ஷித்த மதுஷான் 42, லக்ஷித்த எதிரிசிங்க 38, அமில அபொன்சோ 3/75, இஷான் ஜயரத்ன 2/65

ராகம கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 173/5 (64.3) – சுபேஷர ஜயதிலக்க 57*, தினெத் திமோத்ய 44, சமிந்த பெர்னாண்டோ 43, சமீர டி சொய்சா 26*, லக்ஷான மதுஷங்க 3/62, ஜனித் சில்வா 2/35

அனைத்து போட்டிகளினதும் மூன்றாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நாளை தொடரும்

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<