உலக பதினொருவர் அணியில் பங்களாதேஷ், ஆப்கான் வீரர்கள் இணைப்பு

888
RE: Article on 76ers vs Heat. edited. upload

அடுத்த மாத இறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் இடம்பெறவிருக்கும் விஷேட T20 கிரிக்கெட் போட்டியில், உலக பதினொருவர் அணியை மேலும் பலப்படுத்த ஆப்கானிஸ்தானின் ராஷித் கான், பங்களாதேஷ் அணியின் சகீப் அல் ஹசன், தமிம் இக்பால் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

உலக பதினொருவர் அணியில் மீண்டும் திசர பெரேரா

லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும்..

மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஆண்டு ஏற்பட்ட புயல்களினால் அங்குள்ள கிரிக்கெட் மைதானங்களும், உட்கட்டமைப்பு வசதிகளும் சேதமடைந்திருந்தன. பாதிப்புக்குள்ளான மைதானங்களையும் ஏனைய வசதிகளையும் மீள் நிர்மாணம் செய்வதற்கான நிதியினை திரட்ட இந்த விஷேட T20 போட்டி, மே மாதம் 31ஆம் திகதி மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் உலக பதினொருவர் அணிக்கும் இடையில் கிரிக்கெட்டின் தாயகமான லண்டன் லோட்ஸ் மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நல்ல காரியம் ஒன்றுக்கான இந்த கிரிக்கெட் போட்டியில் விளையாடவிருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டிருந்தது. இப்போட்டியில் ஆடும் உலக பதினொருவர் அணியில் பாகிஸ்தானின் சஹீட் அப்ரிடி, சொஹைப் மலிக் மற்றும் இலங்கையின் திசர பெரேரா ஆகியோர் முன்னதாக இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இப்படியான ஒரு நிலையிலேயே உலக பதினொருவர் அணி ஆப்கான், பங்களாதேஷ் வீரர்களால் மேலும் பலப்படுத்தப்படுகின்றது.

இதில் இளம் சுழல் வீரரான ஆப்கானிஸ்தானின் ராஷித் கான், T20 போட்டிகளின் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தில் இருப்பதோடு, ஒரு நாள் போட்டிகளுக்கான தரவரிசையில் இரண்டாம் இடத்திலும் காணப்படுகின்றார். எனவே, ராஷித் கான் இப்போட்டியில் அனைவராலும் எதிர்பார்க்கப்படும் ஒரு வீரராக இருக்கின்றார்.  

உலக பதினொருவர் அணியில் இணைந்துள்ள பங்களாதேஷின் சகலதுறை வீரரான சகீப் அல் ஹஸன், ஒரு நாள் போட்டிகளுக்கான சகலதுறை வீரர்கள் தரவரிசையில் முதலிடத்திலும், T20 போட்டிகளுக்கான தரவரிசையில் மூன்றாம் இடத்திலும் இருக்கின்றார். அதோடு, பங்களாதேஷ் அணியின் அனுபவமிக்க இடது கை ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான தமிம் இக்பாலும் உலக பதினொருவர் அணியில் இருப்பது இப்போட்டிக்கு பங்களாதேஷ் இரசிகர்களின் ஆதரவினை பெருமளவில் பெற்றுத் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, உலக பதினொருவர் அணியினை தலைமை தாங்க இங்கிலாந்தின் மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களுக்கான அணியின் தலைவர் இயன் மோர்கன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.

இப்போட்டியில் விளையாடுவது பற்றி கருத்து தெரிவித்த ராஷித் கான் கிரிக்கெட் விளையாட்டின் மிகப் பழைய அங்கத்தவர்களுக்கு (மேற்கிந்திய தீவுகளுக்கு) உதவும் பணி ஒன்றில் இணைந்தது எனக்கும், என் நாட்டுக்கும் கிடைத்த கெளரவமாகும். இப்போதிருக்கும் கிரிக்கெட் சந்ததியும் இதற்கு முன்னர் இருந்த சந்ததியும் 70ஆம், 80ஆம் மற்றும் 90ஆம் ஆண்டுகளில் வெற்றிகரமாக வலம் வந்த மேற்கிந்திய தீவுகள் அணியை கண்டே கிரிக்கெட் போட்டிகளில் ஆர்வத்தையும், முன் உதாரணத்தினையும் எடுத்திருப்பார்கள் எனக் கூறினால் அது தப்பாகாது. இப்படியான மேற்கிந்திய தீவுகள் அணி எம்மிடம் உதவியை எதிர்பார்க்கின்றனர் எனின் ஒரு நொடியும் பின்வாங்காது அவர்களுக்கு எம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

மேலும், எனது கடமைகளையும் பொறுப்புக்களையும் ஒரு பக்கத்தில் வைத்து விட்டு கிரிக்கெட்டின் தாயகத்தில் நடைபெறும் இப் போட்டியில் இக்காலத்தில் உள்ள மிகச்சிறந்த வீரர்கள் கொண்ட அணியில் எனது 19ஆவது வயதிலேயே இணைவது, இப்போட்டிக்கான ஆர்வத்தினை மேலும் அதிகரிக்கின்றது.” என்றார்.

மேற்கிந்திய தீவுகள் – உலக பதினொருவர் இடையிலான T20 போட்டி மே மாதத்தில்

புயல் நிவாரண நிதி திரட்டுவதற்காக லண்டன்…

இப்போட்டியில் விளையாடுவது பற்றி பேசிய தமிம் இக்பால் கிரிக்கெட் விளையாட்டானது மக்களை இணைப்பதற்கான ஒரு பாலமாக இருக்கின்றது. இன்னும் இந்த விளையாட்டு வீரர்கள் தங்களுக்கிடையில் புரிந்துணர்வுடன் செயற்பட்டு ஒருவருக்கொருவர் ஆதரவாக இருக்கவும் துணை புரிகின்றது. அந்த வகையில் நடைபெறப் போகின்ற இப்போட்டி இந்த விடயங்கள் அனைத்திற்கும் ஒரு எடுத்துக் காட்டாக அமையப்போகின்றது. எனவே, மீண்டும் ஒரு தடவை உலக பதினொருவர் அணியில் நல்ல நோக்கம் ஒன்றுக்காக இணைவதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். இப்படியான விடயங்களே, இவ்விளையாட்டினை சிறந்தாக மாற்றுகின்றது. “

இந்த விளையாட்டுக்காக (கிரிக்கெட்) மேற்கிந்திய தீவுகள் அணி வழங்கிய பங்களிப்பினை அளவிட முடியாது என்பதோடு, அவர்களது பங்களிப்பை இன்னொன்றுடனும் ஒப்பிட இயலாது. சினேகபூர்வமாக விளையாடப்படும் இப் போட்டி, கடந்த வருடம் ஏற்பட்ட புயல்களினால் பாதிக்கப்பட்ட மைதானங்களை புணர்நிர்மானம் செய்ய உதவ பங்களிப்பு வழங்கும் எனில், இது சிறு துளி பெரு வெள்ளம் போன்ற ஒரு நிகழ்வாகும். “

மேலும் லோர்ட்ஸ் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட கிடைப்பது எந்தவொரு கிரிக்கெட் வீரருக்கும் வரமாகும். நான் அங்கே 2010 ஆம் ஆண்டில் ஒரேயொருதடவை மாத்திரம் விளையாடிள்ளேன். எனவே, அதே மாதிரியான ஞாபகங்களை புதுப்பித்துக் கொள்ள மீண்டும் ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது. இந்த காலகட்டத்தில் மிகத் திறமையாக இருப்பவர்களுடன் இணைந்து விளையாடப் போவதால், இப்போட்டி சிறந்த நினைவுகளைத் தரும். “ என்றார்.

புயல் நிவாரணத்துக்கான இப்போட்டியில் உலக பதினொருவர் அணியுடன், விளையாடவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணியினை கார்லோஸ் பராத்வைட் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<