ஆப்கான் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகும் பில் சிம்மொன்ஸ்

136
ICC

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக செயற்பட்டு வந்த மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பில் சிம்மொன்ஸ், உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வீரரான பில் சிம்மொன்ஸ், 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக பதவியேற்றார். தற்போது 18 மாதங்கள் ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட இவர், தனக்கு வழங்கப்பட்ட கடமைகள் சிறப்பாக பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, பதவியிலிருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் அணிக்கு ஒருநாள் தரவரிசை புள்ளியில் கணிசமான அதிகரிப்பு

அயர்லாந்தில் நடைபெற்ற முக்கோண ஒருநாள் ……….

இவரது பதவிக்காலத்தில் ஆப்கானிஸ்தான் அணி பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. குறிப்பாக, உலகக் கிண்ண தகுதிகாண் தொடரில் வெற்றிபெற்றமை, ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடர் வெற்றி, அயர்லாந்து அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் வெற்றி என பல்வேறு வெற்றிகளை ஆப்கானிஸ்தான் அணி பதிவுசெய்திருந்தது.  

இதன் காரணமாக பில் சிம்மொன்ஸின் பதவிக்காலம் நீடிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், குறித்த பதவியில் தொடர்ந்தும் நீடிக்கப் போவதில்லை என சிம்மொன்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார். தனது பதவி விலகல் குறித்து கருத்து வெளியிட்ட பில் சிம்மொன்ஸ்,

“ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையுடன் 18 மாத ஒப்பந்தத்துடன் பயிற்றுவிப்பாளராக இணைந்திருந்தேன். அதாவது, உலகக் கிண்ண நிறைவுடன் எனது பதவிக்காலம் நிறைவடைகின்றது. எனது பதவிக்காலத்தில் சிறந்த முறையில் கடமைகளை நிறைவேற்றியுள்ளேன். ஆனால், தொடர்ந்தும் குறித்த ஒப்பந்தத்தை நீடிக்க முடியாது என ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையிடம் ஏற்கனவே அறிவித்துள்ளேன். அதன்படி, நான் பயிற்றுவிப்பாளர் பதவியிலிருந்து விலகிய பின்னர், வேறு ஏதாவது ஒரு விடயத்தை செய்வதற்கு தீர்மானித்திருக்கிறேன்.

உலகக் கிண்ணத்துக்கு ஆப்கானிஸ்தான் அணி தகுதிபெறவேண்டும் என்பதே எனக்கு கொடுக்கப்பட்ட இலக்கு. குறித்த இலக்கினை நாம் அடைந்துள்ளோம். அதுமாத்திரமின்றி ஒவ்வொரு வீரரும், அனைத்து துறையிலும் சிறப்பாக செயற்படுவதற்காக என்னால் முடிந்த உதவிகளை அவர்களுக்கு வழங்கியுள்ளேன்” என்றார்.

பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலியின் 2 வயது மகள் புற்று நோயால் மரணம்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஆசிப் அலியின் 2………….

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் தேர்வுக் குழு கடந்த ஏப்ரல் மாதம் அணித் தலைமை பதவிகளில் மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. குறிப்பிட்ட மாற்றங்களானது பில் சிம்மொன்ஸ் தனது ஒப்பந்தத்தை முடித்துக்கொள்வதற்கு முக்கிய காரணமாக மாறியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த விடயம் தொடர்பில் சிம்மொன்ஸ் குறிப்பிடுகையில்,

“ஆப்கானிஸ்தான் தேசிய அணியின் தலைமை பதவிகளில் மாற்றங்களை ஏற்படுத்துவது தொடர்பில் என்னிடம் எந்த கலந்துரையடல்களும் மேற்கொள்ளவில்லை. மாற்றங்கள் ஏற்படுத்தியமைக்கு எந்த காரணங்களையும் தெரிவிக்கவும் இல்லை. குறித்த முடிவை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை மற்றும் தேர்வுக் குழு மாத்திரம் இணைந்து மேற்கொண்டிருந்தது. இதனை நான் எப்படி ஏற்றுக்கொள்வது? அதனை என்னால் மாற்றவும் முடியாது. அதனால், தலைமைத்துவ தடைக்கு மத்தியிலும் ஏற்கனவே சென்ற தயார்படுத்தல்களை தொடர்ந்தும் நான் நடைமுறைப்படுத்தி வருகின்றேன்” என்றார்.

மேற்கிந்திய தீவுகளின் முன்னாள் வீரரான பில் சிம்மொன்ஸ் அந்த அணிக்காக 26 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 143 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<