அகில இலங்கை வீதி ஓட்டப் போட்டியில் பாரமி மற்றும் மதுசங்கவுக்கு முதலிடம்

137

அகில இலங்கை பாடசாலை வீர, வீராங்கனைகளுக்கான 15 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி ஓட்டப் போட்டியில் குளியாபிடிய மத்திய கல்லூரி வீராங்கனை பாரமி வசந்தி மாரிஸ்டெல்லா மகளிர் பிரிவில் முதலிடத்தை பிடித்துள்ளதுடன், அம்புகஸ்துவ ஜனாதிபதிக் கல்லூரியின் வீரர் மதுசங்க நயணஜித்த ஆண்கள் பிரிவில் முதலிடத்தை பிடித்துக்கொண்டார்.

இளையோர் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இலங்கையிலிருந்து இரு வீரர்கள் தெரிவு

தாய்லாந்தின் பெங்கொங் நகரில் இன்று (04) ஆரம்பமாகிய இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவுக்கான ஆசிய…

அகில இலங்கை பாடசாலை விளையாட்டு விழாவின் ஒரு பாகமாக 15 கிலோ மீற்றர் தூரம் கொண்ட வீதி ஓட்டப் போட்டி மற்றும் 5 கிலோ மீற்றர் ஓட்டப் போட்டி என்பன கல்வி அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்றிருந்தது. இந்த போட்டிகள் ஆடவர் மற்றும் மகளிர் என இரண்டு பிரிவுகளிலும் நடத்தப்பட்டதுடன், 2000 இற்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் இதில் பங்கேற்றனர்.

இளையோர் பிரிவு 3000 மீற்றர் தடைதாண்டல் ஓட்டப் போட்டியில் உலகின் இரண்டாம் நிலையை பிடித்துள்ள பாரமி வசந்தி, மகளிர் பிரிவு 15 கிலோ மீற்றர் போட்டியை 57 நிமிடங்கள் மற்றும் 58 செக்கன்களில் நிறைவு செய்திருந்தார். மகளிர் பிரிவில் போட்டித் தூரத்தை ஒரு மணித்தியாலத்திற்குள் நிறைவுசெய்த ஒரே ஒரு வீராங்கனையும் இவர்தான். சிறந்த நெடுந்தூர ஓட்ட வீராங்கனையாக வளர்ந்து வரும் பாரமி வசந்தி, ஆர்ஜன்டீனாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள இளையோர் ஒலிம்பிக் விழாவில் பதக்கம் வெல்லக்கூடிய வீராங்கனையாகவும் எதிர்பார்க்கப்படுகிறார்.

இதேவேளை 15 கிலோமீற்றர் வீதி ஓட்டத்தில், மகளிர் பிரிவின் இரண்டாவது இடத்தை பிடித்த குளியாபிடிய மத்திய கல்லூரி வீராங்கனை ஹஸ்மிகா ஹேரத் ஒரு மணித்தியாலம் 2 நிமிடங்கள் மற்றும் 54 செக்கன்களில் போட்டித் தூரத்தை நிறைவுசெய்தார். மூன்றாவது இடத்தை வெலிமடை மத்திய கல்லூரியின் டில்ருக்ஷி சமரகோன் (1 மணித்தியாலம் 03.05 நிமிடம்) பிடித்துக்கொண்டார்.

இம்மாதம் ஆரம்பமாகும் 88வது சேர். ஜோன் டாபர்ட் மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்

இலங்கை பாடசாலை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் ஏற்பாட்டில் 88வது தடவையாக நடைபெறவுள்ள சேர். ஜோன்…

ஆடவர் பிரிவின் முதலிடத்தை பிடித்த மதுசங்க நயணஜித்த, 48 நிமிடம் 45 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்ததுடன், அவரின் பாடசாலையைச் சேர்ந்த சமிந்த நுவான் குமார 49.31 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து இரண்டாவது இடத்தையும், பயாகல பண்டாரநாயக்க வித்தியாலயத்தின் எரங்க சில்வா 50 நிமிடம் 20 செக்கன்களில் போட்டியை நிறைவுசெய்து மூன்றாவது இடத்தை பிடித்துக்கொண்டார்.

இதனையடுத்து ஐந்து கிலோமீற்றர் தூரம் கொண்ட வீதி ஓட்டப் போட்டியின் மகளிர் பிரிவின் முதலிடத்தை காலி ஸ்ரீ தம்மா வித்தியாலயத்தின் லக்மினி டுலான்ஜினி பிடித்ததுடன், முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களை பண்டாரநாயக்க மகா வித்தியாலயத்தின் கீத்மி சஞ்சனா மற்றும் கவரவில ஹட்டன் தமிழ் மகா வித்தியாலயத்தின் வி.ரிசாந்தி பிடித்துக்கொண்டனர்.

ஐந்து கிலோமீற்றர் ஆடவர் பிரிவில் அம்புகஸ்துவ ஜனாதிபதி கல்லூரியின் கவீஷ இந்துருவ முதலிடத்தை பிடித்துக் கொண்டதுடன், இரண்டாம் மூன்றாம் இடங்களை முறையே வேகட .வி. சந்தீப விக்ரமசிங்க மற்றும் திலின மதுஷான் ஆகியோர் பிடித்துக்கொண்டனர்.