மூன்றாவது LPL தொடர் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு

525
 

லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் மூன்றாவது பருவகாலத்திற்கான போட்டிகள் அனைத்தும் ஜூலை மாதம் 31ஆம் திகதி தொடக்கம் ஒகஸ்ட் மாதம் 22ஆம் திகதி வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

>> கேன் வில்லியம்சனுக்கு கொவிட்-19 தொற்று

இலங்கை கிரிக்கெட் சபை (SLC) இன்று வெளியிட்ட ஊடக அறிக்கை மூலம் லங்கா ப்ரீமியர் லீக் (LPL) தொடரின் திகதிகள் குறித்து உறுதி செய்திருக்கின்றது.

கிரிக்கெட் இரசிகர்களுக்கு விருந்து படைக்கும் LPL தொடரானது இம்முறையும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானம் மற்றும் ஹம்பாந்தோட்டை மஹிந்தராஜபக்ஷ மைதானம் என்பவற்றில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது. அதேநேரம் இந்த தொடரின் ஆரம்பகட்ட போட்டிகள் கொழும்பிலும், தொடரின் பிளே ஒப் சுற்று அடங்கலான எஞ்சிய போட்டிகள் ஹம்பாந்தோட்டையிலும் நடைபெறவிருக்கின்றன.

>> மூன்றாவது T20I போட்டியிலிருந்தும் நீக்கப்படும் ஸ்டார்க்!

ஐந்து அணிகள் பங்குபெறவுள்ள LPL தொடரில், மொத்தம் 24 போட்டிகள் நடைபெறவிருப்பதோடு, தொடருக்கான வீரர்கள் ஏலம் விரைவில் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை கடைசியாக நடைபெற்றிருந்த LPL தொடரில் திசர பெரேரா தலைமையிலான ஜப்னா கிங்ஸ் அணி சம்பியன் பட்டம் வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<