தேசிய அணி வீரர்களின் பங்களிப்போடு மாஸ் யுனிச்செலா, ஹேய்லஸ் அணிகளுக்கு வெற்றி

322

சிங்கர் நிறுவனத்தின் அனுசரணையோடு பிரிவு A வர்த்தக நிறுவனங்களுக்கு இடையில் ஒழுங்கு செய்யப்பட்டு நடைபெறும் ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று (17) மூன்று போட்டிகள் நிறைவடைந்தன.

கென்ரிச் பினான்ஸ் எதிர் மாஸ் யுனிச்செலா

கொழும்பு P. சரவணமுத்து மைதானத்தில் நிறைவுற்ற இப்போட்டியில் மாஸ் யுனிச்செலா அணி கென்ரிச் பினான்ஸ் அணியினை 5 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.

எக்ஸ்போ லங்கா அணிக்கு இலகு வெற்றி

பெயார் அண்ட் லவ்லி அனுசரணையில் நடைபெற்று வரும் வர்த்தக நிறுவனங்களுக்கு..

மழையின் இடையூறு காரணமாக அணிக்கு 36 ஓவர்கள் கொண்டதாக இடம்பெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற மாஸ் யுனிச்செலா அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை கென்ரிச் பினான்ஸ் அணிக்கு வழங்கியது. இதன்படி முதலில் துடுப்பாடிய கென்ரிச் பினான்ஸ் அணியினர் 32.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 136 ஓட்டங்களை மட்டுமே பெற்றனர்.

அவ்வணியில் அதிகபட்ச ஓட்டங்களை சரங்க ராஜகுரு பதிவு செய்ய தேசிய கிரிக்கெட் அணி வீரர் தனுஷ்க குணத்திலக்க மற்றும் கமிந்து மெண்டிஸ் ஆகியோர் மாஸ் யுனிச்செலாவின் பந்துவீச்சு சார்பில் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 137 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மாஸ் யுனிச்செலா அணி, தனுஷ்க குணத்திலக்க பெற்றுக் கொண்ட அரைச்சதத்தோடு 19.2 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 137 ஓட்டங்களை பெற்றவாறு வெற்றி இலக்கினை அடைந்தது. மாஸ் யுனிச்செலா அணியின் வெற்றிக்கு உதவியிருந்த தனுஷ்க குணத்திலக்க 51 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

போட்டியின் சுருக்கம்

கென்ரிச் பினான்ஸ் – 136 (32.3) சரங்க ராஜகுரு 27, தனுஷ்க குணத்திலக்க 3/24, கமிந்து மெண்டிஸ் 3/26

மாஸ் யுனிச்செலா – 137/5 (19.3) தனுஷ்க குணத்திலக்க 51, அலங்கார அசங்க  2/40

முடிவுகென்ரிச் பினான்ஸ் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி


டீஜேய் லங்கா எதிர் டிமோ நிறுவனம்

கட்டுநாயக்கவில் முடிவடைந்த இப்போட்டியில் டீஜேய் லங்கா அணியினர்  டிமோ நிறுவன வீரர்களை 20 ஓட்டங்களால் வீழ்த்தினர்.

போட்டியில் முதலில் துடுப்பாடிய டீஜேய் லங்கா வீரர்கள், மினோத் பானுக்க அரைச்சதம் தாண்டி பெற்றுக்கொண்ட 54 ஓட்டங்களின் துணையோடும், சாலிக்க கருணநாயக்க பெற்ற 47 ஓட்டங்களின் துணையோடும் 37.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 168 ஓட்டங்களை குவித்துக் கொண்டனர்.

பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 169 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய டிமோ அணி 34.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 148 ஓட்டங்களை மட்டும் பெற்று டீஜேய் லங்கா அணியிடம் தோல்வியினை தழுவியது. டீஜேய் லங்கா அணியின் பந்துவீச்சு சார்பாக சலிய சமன் வெறும் 21 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.

போட்டியின் சுருக்கம்

டீஜேய் லங்கா – 168 (37.4) மினோத் பானுக்க 54, சலிக்க கருணாநாயக்க 47, சம்மு அஷான் 3/29

டிமோ நிறுவனம் – 148 (34.4) கவிஷ்க அஞ்சுல 42, சாலிய சமன் 4/21

முடிவுடீஜேய் லங்கா அணி 20 ஓட்டங்களால் வெற்றி


மாஸ் சிலுவேட்டா எதிர் ஹேலிஸ் நிறுவனம்

மக்கோனவில் இடம்பெற்று முடிந்த இப்போட்டியில் மாஸ் சிலுவேட்டா அணியினை ஹேலிஸ் நிறுவன அணி 3 விக்கெட்டுக்களால் தோற்கடித்தது.

முன்னதாக போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஹேலிஸ் நிறுவன அணி மாஸ் சிலுவேட்டா அணியினை முதலில் துடுப்பாட பணித்தது. இதன்படி முதலில் துடுப்பாடிய மாஸ் சிலுவேட்டா அணியினர் நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 261 ஓட்டங்களை குவித்தனர்.

மாஸ் சிலுவேட்டா அணியின் துடுப்பாட்டத்தில் சரண நாணயக்கார 57 ஓட்டங்களையும், சங்கீத் கூரே 55 ஓட்டங்களையும் பெற ஹேலிஸ் நிறுவன பந்துவீச்சில் அலி கான் 3 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார்.

குசல் ஜனித் பெரேராவிற்கு பதிலாக இலங்கை அணியில் குசல் மெண்டிஸ்

இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா..

பின்னர், போட்டியின் வெற்றி இலக்கான 262 ஐ அடைய பதிலுக்கு ஆடிய ஹேலிஸ் தரப்பு தேசிய கிரிக்கெட் அணி வீரர் லஹிரு திரிமான்னவின் அபார துடுப்பாட்டத்தோடு 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 264 ஓட்டங்களுடன் வெற்றி இலக்கினை எட்டியது.

ஹேலிஸ் அணியின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்திருந்த லஹிரு திரிமான்ன 98 ஓட்டங்களை குவித்து வெறும் 2 ஓட்டங்களினால் சதத்தை விட்டிருந்தார். இதேநேரம், தினேத் திமோத்யவும் அரைச்சதம் ஒன்றுடன் (52) ஹேலிஸ் அணியின் வெற்றிக்கு உதவியிருந்தமை குறிப்பிடத்தக்கது. மாஸ் சிலுவேட்டா அணிக்காக துஷான் ஹேமன்த 4 விக்கெட்டுக்களை கைப்பற்றிய போதிலும் அது வெற்றிக்கு உதவியிருக்கவில்லை.

போட்டியின் சுருக்கம்

மாஸ் சிலுவேட்டா – 261/9 (50) சரண நாணயக்கார 57, சங்கீத் கூரே 55, அலி கான் 3/46

ஹேய்லஸ் நிறுவனம் – 264/7 (50) லஹிரு திரிமான்ன 98, தினேத் திமோத்யா 52, துஷான் ஹேமன்த 4/53

முடிவுஹேய்லஸ் நிறுவனம் 3 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<