FA கிண்ண சம்பியனானது மென்செஸ்டர் யுனைடட்

276
FA CUP Fianl
@Getty Images

கிறிஸ்டல் பேலஸ் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து இறுதிப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் கழகம் வெற்றிபெற்று சம்பியன் பட்டம் வென்றுள்ளது.

இங்கிலாந்தில் கழகங்களுக்கு இடையிலான கால்பந்து அணிகளுக்கான பிரிமியர் லீக் போட்டித்  தொடர் மிகவும் பிரபல்யம் வாய்ந்தது. அந்த அடிப்படையில் 2015/16ஆம் ஆண்டுக்கான போட்டியில் 20 அணிகள் பங்கேற்றன.

இங்கிலாந்தின் பல்வேறு பகுதியில் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகள் நடந்தன. இதில் வெம்பிலி நகரில் நடைபெற்ற இறுதி போட்டியில் கிறிஸ்டல் பேலஸ், மென்செஸ்டர் யுனைடட் அணிகள் மோதின.

மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் மென்செஸ்டர் யுனைடட் கழகம் 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 24 ஆண்டுகளுக்குப் பிறகு மென்செஸ்டர் யுனைடட் கழகம் சம்பியன் பட்டம் வென்றுள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.