சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ஹஷிம் அம்லா

1333

தென்னாபிரிக்க அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரும் பல ஒருநாள் சாதனைகளுக்கு சொந்தக்காரருமான ஹஷிம் அம்லா உடன் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து விதமான (டெஸ்ட், ஒருநாள், டி20) சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக திடீர் அறிவிப்பு விடுத்துள்ளார்.

1983 மார்ச் 31 ஆம் திகதி தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் பிறந்த ஹஷிம் அம்லா தனது 36 ஆவது வயதில் இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு விடைகொடுத்துள்ளார். 1999 ஆம் ஆண்டு தனது 16 ஆவது வயதில் முதல் தர போட்டிகள் மூலமாக கிரிக்கெட் வாழ்க்கையில் தடம் பதித்தார் ஹஷிம் அம்லா.

நியூசிலாந்துடனான பயிற்சிப் போட்டியில் வலுவடைந்துள்ள இலங்கை தரப்பு

இலங்கை கிரிக்கெட் சபை பதினொருவர்….

முதல் தர போட்டியிலிருந்தும் 2000 ஆம் ஆண்டு A தர போட்டிகளிலும் தடம் பதித்தார். தனது சிறப்பான துடுப்பாட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க அணிக்காக 2004 ஆம் ஆண்டு இந்திய அணியுடன் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலமாக தனது 21 ஆவது வயதில் முதல் முதலாக சர்வதேச அரங்கிற்கு அறிமுகமானார். 

டெஸ்ட் அறிமுகம் பெற்று நீண்ட கால இடைவெளியின் பின்னரே 2008 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணியுடன் நடைபெற்ற போட்டியில் ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்டார். அதன் பின்னர் அடுத்த ஆண்டு இடைவெளியில் டி20 சர்வதேச அறிமுகமும் பெற்றுக்கொண்டார். 

டெஸ்ட் மற்றும் ஒருநாள் சர்வதேச அரங்கில் ஹஷிம் அம்லா என்ற பெயர் யாராலும் மறக்க முடியாத பெயராக காணப்படுகின்றது. அதிலும் ஒருநாள் சர்வதேச அரங்கில் பல ஆயிரம் ஓட்டங்களை முறியடிப்பதில் அதிலும் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியின் அதிவேக ஓட்டங்களை முறியடிப்பதில் ஹஷிம் அம்லா திறமை வாய்ந்தவராக காணப்பட்டார். 

தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 124 போட்டிகளில் 215 இன்னிங்சுகளில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா 28 சதங்கள் மற்றும் 41 அரைச்சதங்கள் உள்ளடங்களாக மொத்தமாக 9,282 ஓட்டங்களை குவித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிகூடிய ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் அம்லா 14 ஆவது இடத்தில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் மாற்றம் ஏற்படலாம் – திமுத்

நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட்…

2008 ஆம் ஆண்டு ஒருநாள் சர்வதேச அறிமுகம் பெற்றுக்கொண்ட அம்லா இறுதியாக ஒருநாள் போட்டியில் கடந்த ஐ.சி.சி உலகக்கிண்ண தொடரில் விளையாடியிருந்தார். தனது ஓய்வு செய்தியை அறிவிக்கும் வரையில் 181 ஓருநாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அம்லா 27 சதங்கள் மற்றும் 39 அரைச்சதங்களுடன் 8,113 ஓட்டங்களை குவித்துள்ளார். 

ஒருநாள் சர்வதேச அரங்கில் அதிக ஓட்டங்களை குவித்தவர்கள் வரிசையில் அம்லா 29 ஆவது இடத்தில் காணப்படுகின்றார். ஒருநாள் சர்வதேச அரங்கை பொறுத்தவரையில் தனது 2000 ஓட்டங்களை 40 இன்னிங்சுகளில், 3000 ஓட்டங்களை 57 இன்னிங்சுகளில், 4000 ஓட்டங்களை 81 இன்னிங்சுகளில், 5000 ஓட்டங்களை 101 இன்னிங்சுகளில், 6000 ஓட்டங்களை 123 இன்னிங்சுகளில், 7000 ஓட்டங்களை 150 இன்னிங்சுகளில் கடந்து குறித்த ஓட்டங்களை விரைவாக கடந்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் காணப்படுகின்றார். 

தனது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 1000 மற்றும் 8000 ஓட்டங்களே சாதனை இல்லாத ஓட்டங்களாக காணப்பட்டது. அதிலும் இறுதியாக பெறப்பட்ட 8000 ஓட்டங்கள் விரைவான ஓட்டங்களாக கருதப்படுவதற்கு ஒரு இன்னிங்ஸினாலேயே தவறவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. 

2009 ஆம் ஆண்டிலிருந்து தனது ஓய்வு வரையில் 44 டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள ஹஷிம் அம்லா 8 அரைச்சதங்களுடன் 1,277 ஓட்டங்களை குவித்துள்ளார். இவ்வாறு சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அதிலும் ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் பல சாதனைகளை தனக்கென வைத்திருக்கும் ஹஷிம் அம்லாவின் திடீர் ஓய்வு அனைத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ஹபீஸ் மற்றும் மலிக்கை புதிய ஒப்பந்தத்திலிருந்து நீக்கிய பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்….

ஹஷிம் அம்லாவின் சர்வதேச ஓய்வின் மூலமாக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரரை அதிலும் சிறந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரரை இழக்கிறது என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்றாலும் உள்ளளூர் தொடர்களில் ஹஷிம் அம்லா தொடர்ந்தும் விளையாடுவார் என தென்னாபிரிக்க கிரிக்கெட் சபை தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.    

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<