SLCயின் புதிய ஒப்பந்தத்தில் 77 வீரர்கள்: மாலிங்கவுக்கு சிறப்பு விருது

477

2018 மற்றும் 2019 பருவகாலத்துக்கான வருடாந்த கிரிக்கெட் வீர்ரகள் ஒப்பந்தத்திற்கு உள்ளுர் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற முதல்தர கிரிக்கெட் வீரர்கள் 77 பேரை உள்வாங்குவதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

2017/18 பருவகாலத்தில் நடைபெற்ற உள்ளூர் கழகமட்ட போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்திய வீரர்கள் இம்முறை வருடாந்த ஒப்பந்தத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன், இதற்கான ஆவணங்கள் மற்றும் நிதியினை கையளிக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு நேற்று (21) விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் தலைமையில் அமைச்சின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

இலங்கையின் முதலாவது கிரிக்கெட் அருங்காட்சியகம் திறந்துவைப்பு

கிரிக்கெட் உலகில் முன்னணி அணிகளில் ஒன்றாக வலம் வந்து கொண்டிருக்கின்ற இலங்கை அணியின்

இவ்வருடத்துக்கான ஒப்பந்தத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் தேசிய அணி வீரர்களும், கிரிக்கெட் ஒப்பந்தத்தில் இடம்பெறாமல் தேசிய அணிக்காக அண்மைக்காலமாக விளையாடி வருகின்ற வீரர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். அத்துடன், வளர்ந்து வரும் வீரர்கள் மற்றும் இளம் வீரர்கள் என இரண்டு பிரிவுகளிலும் இம்முறை ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேவேளை, 2017/18 பருவகாலத்திற்கான ப்ரீமியர் லீக் நிலை தொடரில் திறமைகளை வெளிப்படுத்தியிருந்த வீரர்களுக்கு பணப்பரிசும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வின்போது இலங்கை ஒருநாள் மற்றும் டி-20 அணித் தலைவர் லசித் மாலிங்க மீண்டும் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூர் டி-20 போட்டித் தொடரின் அதிசிறந்த பந்துவீச்சாளருக்கான விருதை தட்டிச் சென்றார்.

இதில் கழகங்களுக்கிடையிலான முதல்தர நான்கு நாள் போட்டித் தொடரில் அதிசிறந்த வீரராக சச்சித்ர சேரசிங்க தெரிவானார். அவருக்கு பணப்பரிசுடன், மோட்டார் கார் ஒன்றும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டது. அத்துடன், சிறந்த துடுப்பாட்ட வீரராக கௌஷால் சில்வாவும், சிறந்த பந்துவீச்சாளராக ஷானக்க கொமசாருவும் தெரிவாகினர்.  

இதனிடையே, கழகங்களுக்கிடையிலான முதல்தர ஒருநாள் போட்டித் தொடரில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரராக லஹிரு மிலன்தவும், அதிசிறந்த பந்துவீச்சாளராக சச்சித்ர சேனநாயக்கவும் தெரிவாகியதுடன், குறித்த தொடரின் சிறந்த வீரருக்கான விருதை ஷெஹான் ஜயசூரிய பெற்றுக்கொண்டார்.

>>Photos : Awarding Of Contracts For Domestic Cricket Players<<

இதேநேரம், கழகங்களுக்கிடையிலான முதல்தர டி-20 போட்டித் தொடரில் அதிசிறந்த துடுப்பாட்ட வீரராக ருவிந்து குணசேகர தெரிவாகியதுடன், குறித்த தொடரின் சிறந்த வீரருக்கான விருதை சதுரங்க டி சில்வா பெற்றுக்கொண்டார். இந்த வீரர்களுக்கு பணப்பரிசுடன், மோட்டார் கார் ஒன்றும் வழங்கிவைக்கப்பட்டன.   

இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய விளையாட்டுத்துறை அமைச்சர், இனிவரும் காலங்களில் பணம் சம்பாதிப்பதற்கு எந்தவொரு இலங்கை வீரரையும் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு இடமளிக்க மாட்டேன் என தெரிவித்தார்.   

அவர் அங்கு மேலும் கருத்து வெளியிடுகையில், “இலங்கை கிரிக்கெட் வீரர்களை பாதுகாப்பதற்கு இலங்கை கிரிக்கெட் நிறுவனம் எதிர்வரும் காலங்களில் சிறந்த திட்டமொன்றை நடைமுறைப்படுத்தும் என நான் நம்புகிறேன். உலகில் கிரிக்கெட் விளையாடுகின்ற ஏனைய நாடுகளில் உள்ள வீரர்களுக்கு வழங்குகின்ற சம்பளத்தைவிட எமது வீரர்கள் ஒப்பீட்டளவில் குறைந்தளவு சம்பளத்தையே பெற்றுக் கொள்கின்றனர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், தொழில்முறை கிரிக்கெட்டில் அது பெரிய பிரச்சினையாக இருக்காது. அதேபோல, கிரிக்கெட்டிலிருந்து அந்த வீரர்கள் ஓய்வுபெற்ற பிறகு தமது வாழ்வாதாரத்தை முன்னெடுப்பதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருவதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதன்காரணமாக நமது நாட்டு வீரர்கள் வெளிநாடுகளுக்கு குடிபெயர்ந்து அங்குள்ள கழகங்களில் விளையாடி வருகின்றனர். இது எமது நாட்டின் கிரிக்கெட் விளையாட்டுக்கு மிகப் பெரிய பின்னடைவை பெற்றுக்கொடுத்துள்ளது. எனவே, எமது கிரிக்கெட் நிறுவனத்தால் வீரர்களுக்கு இன்னும் உதவி செய்யமுடியும் என்பது எனது நிலைப்பாடாகும். அதை கருத்திற்கொண்டு விசேட வேலைத்திட்டமொன்றை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம். அத்துடன், புதிய கிரிக்கெட் யாப்பொன்றை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றோம்” என்றார்.

இலங்கை அணி தொடர்பில் வெளியான காணொளிக்கு விளையாட்டு அமைச்சரின் பதில்

இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தொடர்பில் பொய்யான செய்திகளை (gossip) சமூகவலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள்

இதேநேரம், உள்ளூர் போட்டிகளில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற வீரர்களுக்கு சர்வதேசப் போட்டிகள் நடைபெறுகின்ற மைதானங்களில் விளையாடுவதற்கான சந்தர்ப்பங்களை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல, ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நீச்சல் தடாகமொன்றையும், உள்ளக கிரிக்கெட் பயிற்சி நிலையமொன்றையும் விரைவில் நிர்மாணிக்க வேண்டும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனத்துக்கு அறிவித்தியுள்ளேன் என்றார்.

இந்த நிகழ்வில் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் பொறுப்பு வாய்ந்த அதிகாரியுமான சூலானந்த பெரேரா, நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க