ரசூனியாவின் கடைசி நேர கோல் மூலம் புனித பேதுரு இறுதிப் போட்டிக்கு தகுதி

80

சபீர் ரசூனியா கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் Thepapare  கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் முதல் அரையிறுதியில் நடப்புச் சம்பியன் புனித ஜோசப் கல்லூரியை 3-2 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி புனித பேதுரு கல்லூரி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்தத் தொடரின் ஆரம்ப சுற்று மற்றும் காலிறுதிப் போட்டிகள் போன்று புனித பேதுரு கல்லூரி கடைசி நிமிடங்களில் ஆட்டத்தை தனக்கு சாதகமாக்கிக் கொண்டது. இதன் மூலம் 78 ஆவது மற்றும் 89 ஆவது நிமிடங்களில் அந்த அணி கோல்கள் பெற்று வெற்றியை உறுதி செய்துகொண்டது.

ThePapare கால்பந்து சம்பியன்ஷிப்: யாருக்கு இறுதிப் போட்டி வாய்ப்பு?

இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com…

கொழும்பு, குதிரைப்பந்தயத் திடல் அரங்கில் இன்று (19)  நடைபெற்ற போட்டியின் ஆரம்பத்தில் புனித ஜோசப் கல்லூரியின் கோல் எல்லையை ஆக்கிரமித்த புனித பேதுரு கல்லூரி சார்பில் சபீர் ரசூனியா இலக்கை நோக்கி பந்தை உதைத்தபோது அது நேராக கோல் காப்பாளரின் கைகளுக்கே சென்றது.

எனினும் ஒரு நிமிடம் கழித்து செயற்பட்ட ரசூனியா புனித பேதுரு கல்லூரிக்கு ஆரம்பத்திலேயே முதல் கோலை பெற்றுக்கொடுத்தார். புனித பேதுரு கல்லூரியின் மத்திய கள வீரர் பரிமாற்றிய பந்தை பெனால்டி பெட்டிக்குள் இருந்து பெற்ற ரசூனியா அதனை நேராக கோலை நோக்கிச் செலுத்தினார்.
மறுபுறம் ஆரம்பத்தில் பந்தை கட்டுப்படுத்த தடுமாறிய புனித ஜோசப் கல்லூரிக்காக அதன் நட்சத்திர வீரர் ஷெனால் சந்தேஷ் பதில் கோல் திருப்ப தனித்து போராடியதை காணமுடிந்தது.

5 ஆவது நிமிடத்தில் போட்டியின் முதலாவது கோனர் கிக் புனித ஜோசப் கல்லூரிக்கு கிடைத்தபோது ஷெனால் சந்தேஷுக்கு கோல் பெறும் வாய்ப்பு நூலிழையில் தவறியது.

தொடர்ந்து 9 ஆவது நிமிடத்தில் ஷெனால் சந்தேஷுக்கு மற்றொரு கோல் வாய்ப்புக் கிடைத்தது. புனித பேதுரு கல்லூரியின் பெனால்டி பெட்டியில் பந்துக்கும் வலைக்கும் இடையே எவரும் இல்லாத நிலையில் அங்கு வேகமாக வந்த மலிந்த அத்துகோரல சந்தேஷிடம் இருந்து பந்தை பறித்து அதனை வெளியே உதைத்தார்.

ஆரம்பத்தில் பந்தை நேர்த்தியாக பரிமாற்றி வந்த புனித பேதுரு கல்லூரி அடிக்கடி எதிரணி பின்களத்திற்கு சவால் விடுத்தது. புனித ஜோசப் கல்லூரியின் கோல்கம்பத்திற்கு அருகில் வைத்து ரசூனியா வழங்கிய பந்தை, மொஹமட் செயிட் இலகுவாக கோல் ஒன்றை பெற வாய்ப்பு இருந்தபோதும் அவரது இலக்குத் தவறியது.

தோல்வியுறாத அணியாக அரையிறுதிக்கு நுழைந்த கொழும்பு ஸாஹிரா கல்லூரி

டி மெசனோட் கல்லூரிக்கு எதிரான Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின்…

எனினும் முதல் பாதியின் நடுவே தண்ணீர் அருந்துவதற்காக இடைவேளை ஒன்று வழங்கப்பட்டதைத் தொடர்ந்து ஆட்டத்தின் போக்கே மாறியது. அதுவரை பந்தை பரிமாற்றுவதில் தவறுகளை இழைத்து வந்த புனித ஜோசப் வீரர்கள் உற்சாகத்துடன் விளையாட ஆரம்பித்தார்கள்  

32 ஆவது நிமிடத்தில் இடது பக்கத்திலிருந்து பரிமாற்றிய பந்தை கோல் கம்பத்திற்கு அருகில் இருந்து ஷெனால் சந்தேஷ் தாவி உதைத்து பதில் கோல் திருப்பினார்.

அதனைத் தொடர்ந்து புனித பேதுரு கல்லூரியின் பெனால்டிப் பெட்டி விளிம்பில் கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை புனித ஜோசப் வீரர்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை.

முதல் பாதி: புனித ஜோசப் கல்லூரி 1 – 1 புனித பேதுரு கல்லூரி             

இரண்டாவது பாதி ஆட்டம் மந்தமாக ஆரம்பமான நிலையில் பந்து மைதானத்தின் நடுவில் சுற்றிவந்தது. 55 ஆவது நிமிடத்தில் சமிந்த, உயர உதைத்த பந்தை ரசூனியா தலையால் முட்டியபோது பந்து கோல் கம்பத்தில் பட்டும் படாமலும் வெளியேறியது.

மறுபுறம் ஷெனால் சந்தேஷ் பந்தை பெனால்டி பெட்டிக்குள் வேகமாக கடத்தி வந்தபோது எதிரணி பின்கள வீரரால் கீழே வீழ்த்தப்பட்டதால் புனித ஜோசப் கல்லூரிக்கு ஸ்பொட் கிக் வாய்ப்பு வழங்கப்பட்டது. எனினும் சந்தேஷ் உதைத்த பெனால்டி கிக், கோல் கம்பத்தில் கட்டு வெளியேறியது.

எனினும் பட்டுவந்த பந்தை சலன பிரமன்த கோலை நோக்கி உதைத்தபோது புனித பேதுரு கோல்காப்பாளர் அதனை அபாரமாக தடுத்தார்.

68 ஆவது நிமிடத்தில் புனித பேதுரு கல்லூரியின் பின்கள வீரர்களை முறியடித்து பத்தும் கிம்ஹான பரிமாற்றிய பந்தை பெற்ற ஷெனால் சந்தேஷ் இலகுவாக கோலாக மாற்றினார். இது அந்தத் தொடரில் அதிக கோல்கள் பெற்றிருக்கும் சந்தேஷின் 10 ஆவது கோலாக இருந்தது.

எவ்வாறாயினும் இந்த தொடரில் கடைசி நேரத்தில் தனது வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் புனித பேதுரு கல்லூரி அந்த ஆட்டப் பாணியை இந்தப் போட்டியிலும் காட்டியது. 78 ஆவது நிமிடத்தில் பெனால்டி பெட்டிக்கு வலது பக்கமாக விளிம்பில் இருந்து ரசூனியா உதைத்த ப்ரீ கிக் நேராக வலைக்குள் சென்று கோலாக மாறியது.

புனித ஹென்றியரசரை வீழ்த்திய புனித ஜோசப் அரையிறுதியில்

Thepapare கால்பந்து சம்பியன்ஷிப் தொடரின் நடப்புச் சம்பியனான புனித ஜோசப் கல்லூரி,…

இதன் மூலம் போட்டியை சமநிலைக்கு கொண்டுவந்த புனித பேதுரு கல்லூரி கடைசி பத்து நிமிடங்களில் புனித ஜோசப் கல்லூரியின் கோல் பகுதியை அடிக்கடி ஆக்கிரமித்தது.

போட்டியின் 89 ஆவது நிமிடத்தில் இதற்கு நல்ல பலன் கிடைத்தது. பெனால்டி பெட்டிக்குள் தனக்கு பரிமாற்றிய பந்தை சிறப்பாக கட்டுப்படுத்திய இலங்கை தேசிய அணி வீரர் ரசூனியா வலது பக்க மூலையால் புனித பேதுரு கல்லூரியின் வெற்றி கோலை பெற்றார்.

முழு நேரம்: புனித ஜோசப் கல்லூரி 2 – 3 புனித பேதுரு கல்லூரி  

கோல் பெற்றவர்கள்

  • புனித ஜோசப் கல்லூரி – ஷெனால் சந்தேஷ் 32’ & 68’
  • புனித பேதுரு கல்லூரி – சபீர் ரசூனியா 3’ & 89’, சூரியகே 78’ (OG)

  >>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<