டி20 அரங்கில் அவுஸ்திரேலியாவின் உலக சாதனையை முறியடித்த இந்திய அணி

94

பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 சர்வதேச போட்டியில் 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற இந்திய அணி டி20 சர்வதேச அரங்கில் அதிக தடவைகள் பதிலெடுத்தாடி வெற்றி பெற்ற அணியாக உலக சாதனை படைத்துள்ளது. 

டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய இரு தொடர்களுக்காக இந்தியா பயணித்துள்ள பங்களாதேஷ் அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நேற்று (07) ராஜ்கொட்டில் நடைபெற்றது. 

ரோஹித் சர்மாவின் அதிரடியோடு T20 தொடரை சமநிலை செய்த இந்தியா

சுற்றுலா பங்களாதேஷ் மற்றும் இந்திய……

இப்போட்டியில் 154 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி, அணித்தலைவர் ரோஹிட் சர்மாவின் அதிரடி துடுப்பாட்டத்துடன் இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 15.4 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்றது. 

தொடர் வெற்றியாளரை தீர்மானிக்கின்ற போட்டி எஞ்சியுள்ள நிலையில் இவ்வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரை 1-1 என்ற அடிப்படையில் சமநிலைப்படுத்தியுள்ள இந்திய அணி அவுஸ்திரேலிய அணியின் சாதனையையும் முறியடித்துள்ளது. 

டி20 சர்வதேச வரலாற்றில் 61 டி20 சர்வதேச போட்டிகளில் இரண்டாவதாக துடுப்பெடுத்தாடியுள்ள இந்திய அணி நேற்றைய (07) வெற்றியுடன் 41 போட்டிகளில் வெற்றி பெற்று இவ்வாறு அவுஸ்திரேலிய அணியின் உலக சாதனையை முறியடித்துள்ளது. 

இதற்கு முன்னர் 69 போட்டிகளில் 40 வெற்றிகளை குவித்திருந்த  அவுஸ்திரேலிய அணி முதலிடத்தில் காணப்பட்டது. இந்நிலையிலேயே தற்போது இந்திய அணி முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. மேலும் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 61 போட்டிகளில் 41 வெற்றிகளை குவித்துள்ள இந்திய அணி வெற்றி சதவீதத்தின் அடிப்படையிலும் முதலிடத்தை தக்க வைத்துள்ளது. 

மாலனின் அதிரடி சததத்தால் நியூஸிலாந்தை பந்தாடியது இங்கிலாந்து

நியூஸிலாந்து அணிக்கெதிரான நான்காவது….

இந்திய அணி 67.2 என்ற சதவீதத்தின் அடிப்படையில் முதலிடத்திலும் அவுஸ்திரேலிய அணி 57.9 என்ற சதவீதத்தின் அடிப்படையில் இரண்டாமிடத்திலும் காணப்படுகின்றன. இதேவேளை பதிலுக்கு துடுப்பெடுத்தாடி அதிக வெற்றிகளை குவித்த அணிகள் வரிசையில் 67 போட்டிகளில் 37 வெற்றிகளை குவித்துள்ள பாகிஸ்தான் அணி குறித்த பட்டியலில் மூன்றாமிடத்தில் காணப்படுகின்றது. 

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டி20 சர்வதேச போட்டி நாளை மறுதினம் (10) நாக்பூரில் நடைபெறவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<