தீர்க்கமான உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் நாளை ஆரம்பம்

368
2018 World Cup Qualifiers

ரஷ்யாவில் நடைபெறவிருக்கும் 2018ஆம் ஆண்டு உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கான தீர்க்கமான தகுதிகாண் போட்டிகள் நாளை (29) தொடக்கம் செப்டம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.

வரும் நவம்பர் 14ஆம் திகதியுடன் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகள் முடிவடையவிருக்கும் நிலையில் இந்தப் போட்டிகள் பெரும்பாலான அணிகளுக்கு முக்கியமானதாக உள்ளன.

சர்வதேச அரங்கில் இருந்து ஓய்வு பெறும் இங்கிலாந்து ஜாம்பவான் ரூனி

இங்கிலாந்து தேசிய கால்பந்து அணிக்காக அதிக கோல்கள் பெற்ற வீரரான வேய்ன் ரூனி சர்வதேச…

2018 உலகக் கிண்ணம் ரஷ்யாவில் வரும் ஜுன் 14 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 15ஆம் திகதி வரை தொடர்ச்சியாக 32 தினங்கள் நடைபெறவுள்ளன. எனினும், இந்த போட்டிக்கான 32 அணிகளில் 31 அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதிகாண் போட்டிகள் கடந்த 2015, மார்ச் 12ஆம் திகதி தொடக்கம் நடைபெற்று வருகின்றன.  

குறிப்பாக, கடந்த முறை இலங்கை அணி சுகததாச அரங்கில் விளையாடிய தகுதிகாண் போட்டியில் பூட்டானிடம் 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் தோற்றது. பின்னர் 2015, மார்ச் 17 ஆம் திகதி பூட்டான் சென்று விளையாடிய இலங்கை அந்த போட்டியிலும் தோல்வியை சந்தித்து உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பை ஆரம்ப கட்டத்திலேயே இழந்தது.

இதுவரை, போட்டியை நடாத்தும் ரஷ்யாவுடன் ஆசிய மண்டலத்தில் ஈரானும் தென் அமெரிக்க மண்டலத்தில் பிரேஸிலும் மாத்திரமே உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 29 இடங்களுக்குமாகவே அணிகள் தொடர்ந்து போராடி வருகின்றன.

இந்நிலையில் ஆசிய மண்டலத்தில் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் சவூதி அரேபியாவுக்கு இடையிலான தகுதிகாண் போட்டியே நாளை நடைபெறவுள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தில் இடம்பெறும் இந்தப் போட்டி B குழுவுக்காக நடைபெறவுள்ளது. எனினும், இரு அணிகளுக்கும் உலகக் கிண்ணத்திற்கு முன்னேறுவதில் கடும் சவால் உள்ளது.

B குழுவில் தற்போது ஜப்பான் 17 புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு சவூதி 16 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் காணப்படுகிறது. ஐக்கிய அரபு இராச்சியம் தற்போது 10 புள்ளிகளுடன் 4 ஆவது இடத்திலேயே உள்ளது.

ஆசிய மண்டல தகுதிகாண் போட்டியின் மூன்றாவது சுற்றின் குழுநிலை ஆட்டங்களாகவே தற்போதைய போட்டிகள் இடம்பெறுகின்றன. இதில் மொத்தம் 12 அணிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து விளையாடுவதோடு உலகக் கிண்ணத்திற்கு ஆசிய மண்டலத்தில் இருந்து மொத்தம் நான்கு அணிகளே நேரடித் தகுதி பெறுகின்றன.  

2016/17 இற்கான UEFA இன் விருதுகளை வென்றோர் விபரம்

UEFA யின் 2016/17 ஆம் பருவகாலத்திற்கான விருது வழங்கும் நிகழ்வு இம்முறையும்…

ஏற்கனவே ஈரான் A குழுவில் இருந்து தகுதி பெற்றிருக்கும் நிலையில் மூன்று இடங்களுக்கே போட்டி நிலவுகிறது.  

இந்த குழு நிலையில் இரு குழுக்களிலும் மூன்றாவது இடத்தை பெறும் அணிகள் பரஸ்பரம் இரண்டு பிளே ஓப் போட்டிகளில் விளையாடி வெற்றிபெறும் அணி கான்காகேப் (Concacaf) அணி ஒன்றுடன் பிளே ஓப் சுற்றில் விளையாடி உலகக் கிண்ணத்தில் தகுதி பெற முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

உலகக் கிண்ண போட்டிக்கு அதிகபட்சம் 13 அணிகள் தேர்வு செய்யப்படும் ஐரோப்பிய மண்டலத்தின் முக்கிய சில போட்டிகள் வரும் 31ஆம் திகதி தொடக்கம் தொடர்ந்து ஆறு தினங்களுக்கு இடம்பெறவுள்ளன.   

இந்த மண்டலத்தில் ரஷ்யா நேரடித் தகுதி பெற்றிருக்கும் நிலையில் 47 அணிகள் உலகக் கிண்ணத்தில் தனது இடத்தை பிடிப்பதற்காக தொடர்ந்து போட்டியில் உள்ளன. இதில் நடப்புச் சம்பியன் ஜெர்மனி அணி வரும் செப்டம்பர் 1ஆம் திகதி செக் குடியரசை எதிர்த்து ஆடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆபிரிக்க மண்டலத்தில் இரண்டு தகுதிகாண் போட்டிகள் வரும் வியாழக்கிழமை நடைபெறும். உகண்டா அணி எகிப்தை எதிர்கொள்ளவிருப்பதோடு கினியா அணி லிபியாவுடன் மோதும்.

ஆபிரிக்க மண்டலத்தில் மொத்தம் 5 அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற முடியும் என்ற நிலையில் அந்த வாய்ப்புக்கு தொடர்ந்து 20 அணிகள் போட்டியில் உள்ளன.  

பார்சிலோனாவில் நெய்மரின் இடத்தை நிரப்பும் ஒஸ்மானே டேம்பல்லே

பார்சிலோனா கால்பந்துக் கழகத்தில் பிரகாசித்து வந்த பிரேசில் வீரர் நெய்மர்…

தென் அமெரிக்காவை பொறுத்தவரை உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் மொத்தம் 10 அணிகளே பங்கேற்கின்றன. எனினும் அனைத்துமே பலம்கொண்டவை என்பதால் நான்கு அணிகள் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும்.

ஏற்கனவே, தனது 14 தகுதிகாண் போட்டிகளில் 10 வென்று 33 புள்ளிகளுடன் பிரேசில் அணி 21ஆவது தடவையாகவும் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. எஞ்சிய மூன்று இடங்களுக்கும் கொலம்பியா, உருகுவே, சிலி, ஆர்ஜன்டீனா, ஈக்வடோர் அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. தென் அமெரிக்க மண்டலத்தின் ஐந்து தகுதிகாண் போட்டிகள் வரும் வியாழக்கிழமை நடைபெறும்.

கொஸ்டாரிக்கா, மெக்சிகோ போன்ற பலம் கொண்ட அணிகள் ஆடும் கான்காகேப் மண்டலத்தின் மூன்று தகுதிகாண் போட்டிகள் செப்டம்பர் 1 ஆம் திகதி இடம்பெறவுள்ளன. இந்த மண்டலத்தில் மூன்று அணிகள் தகுதி பெறுவது உறுதியாக உள்ள நிலையில் அதற்காக ஆறு நாடுகள் கடுமையாக போட்டியிடுகின்றன.