பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளராக ஹபீஸ் நியமனம்

Pakistan Cricket

1546

அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக முன்னாள் வீரர் மொஹமட் ஹபீஸ் செயற்படவுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பணிப்பாளராக மொஹமட் ஹபீஸ் அண்மையில் நியமிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

>> சமரி அதபத்துவை கௌரவிக்கும் சிட்னி தண்டர்ஸ்!

பாகிஸ்தான் அணியின் பணிப்பாளர் மற்றும் தலைமை பயிற்றுவிப்பாளர் என்ற இரண்டு பதவிகளை கிரிக்கெட் சபை ஒரு பதவியின் கீழ் கட்டமைத்துள்ளது.

அதன்படி பணிப்பாளராக நியமிக்கப்பட்ட மொஹமட் ஹபீஸ் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறவுள்ள அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான தொடர்களில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

மொஹமட் ஹபீஸ் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன், அணியின் தலைவராக செயற்பட்டு வந்த பாபர் அசாம் ஏற்கனவே தலைவர் பதவியிலிருந்து விலகியிருந்தார்.

பாபர் அசாம் தலைவர் பதவியிலிருந்து விலகியதுடன் சான் மசூட் டெஸ்ட் போட்டிகளுக்கான தலைவராகவும், சஹீன் ஷா அப்ரிடி T20i போட்டிகளுக்கான தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பாகிஸ்தான் அணி அவுஸ்திரேலியாவுக்கு சென்று 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளதுடன், நியூசிலாந்து அணிக்கு எதிராக 5 T20i போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<