Home Tamil மழையினால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

மழையினால் கைவிடப்பட்ட முதல் ஒருநாள் போட்டி

110

சுற்றுலா ஜிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழை காரணமாக வெற்றி, தோல்வி முடிவுகளின்றி கைவிடப்பட்டுள்ளது.

>>வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிஸ்ஸங்க; இளம் வீரருக்கு அழைப்பு!

முன்னதாக கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில்  ஆரம்பமான இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் குசல் மெண்டிஸ் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினைப் தமக்காகப் பெற்றிருந்தார்.

இப்போட்டிக்கான இலங்கை அணி ஜனித் லியனகேவிற்கு ஒருநாள் போட்டிகளில் அறிமுகம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேநேரம் பெதும் நிஸ்ஸங்க, வனிந்து ஹஸரங்க ஆகிய வீரர்களுக்கு முதல் போட்டியில் ஓய்வளிக்கப்பட்டிருந்தது.

இலங்கை XI  

குசல் மெண்டிஸ் (தலைவர்), அவிஷ்க பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க, ஜனித் லியனகே, சஹான் ஆராச்சிகே, தசுன் ஷானக்க, துஷ்மன்த சமீர, மகீஷ் தீக்ஷன, டில்சான் மதுசங்க

தொடர்ந்து நாணய சுழற்சிக்கு அமைய முதலில் துடுப்பாடிய இலங்கை அணிக்கு ஆரம்பவீரர்களில் ஒருவராக வந்த அவிஷ்க பெர்னாண்டோ ஓட்டமில்லாமல் ஓய்வறை நடந்து ஏமாற்றம் தந்த போதும், அணித்தலைவர் குசல் மெண்டிஸ் மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோர் இலங்கை தரப்பை பலப்படுத்தினர்.

பின்னர் இலங்கை அணி இவர்களது விக்கெட்டுக்களை இழந்து ஒரு கட்டத்தில் 207 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து சிறிது தடுமாற்றம் ஒன்றை சந்தித்த போதும் சரித் அசலன்கவின் அசத்தல் ஆட்டத்தோடு இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 273 ஓட்டங்களை எடுத்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் சரித் அசலன்க தன்னுடைய மூன்றாவது சதத்தோடு 95 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 101 ஓட்டங்களை எடுக்க, குசல் மெண்டிஸ் 46 ஓட்டங்களையும் சதீர சமரவிக்ரம 41 ஓட்டங்களையும் பெற்றார்.

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் ரிச்சாட் ன்கராவா, ப்ளெஸ்ஸிங் முசாரபானி மற்றும் பராஸ் அக்ரம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 274 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய ஜிம்பாப்வே அணி 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை இழந்து காணப்பட்ட நிலையில் போட்டி மழையினால் நிறுத்தப்பட்டதோடு, இறுதியில் நிலைமைகள் சீராகாமல் போக ஆட்டம் கைவிடப்பட்டது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


Sri Lanka
273/9 (50)

Zimbabwe
12/2 (4)

Batsmen R B 4s 6s SR
Avishka Fernando c Richard Ngarava b Clive Madande 0 5 0 0 0.00
Kusal Mendis run out (Sikandar Raza) 46 48 6 0 95.83
Sadeera Samarawickrama c Craig Ervine b Richard Ngarava 41 31 8 0 132.26
Janith Liyanage  c Sikandar Raza b Faraz Akram 24 34 1 0 70.59
Charith Asalanka run out (Clive Madande) 101 94 5 4 107.45
Sahan Arachchige c & b Faraz Akram 11 24 0 0 45.83
Dasun Shanaka c Ryan Burl b Blessing Muzarabani 8 19 0 0 42.11
Mahesh Theekshana b Sikandar Raza 10 16 0 0 62.50
Dushmantha Chameera c Ryan Burl b Blessing Muzarabani 18 23 1 0 78.26
Jeffery Vandersay not out 3 3 0 0 100.00
Dilshan Madushanka not out 3 2 0 0 150.00


Extras 8 (b 4 , lb 0 , nb 0, w 4, pen 0)
Total 273/9 (50 Overs, RR: 5.46)
Bowling O M R W Econ
Richard Ngarava 6.4 1 39 2 6.09
Blessing Muzarabani 10 1 62 2 6.20
Faraz Akram 10 0 58 2 5.80
Tapiwa Mufudza 10 0 37 0 3.70
Sikandar Raza 10 0 41 1 4.10
Ryan Burl 3.2 0 32 0 10.00


Batsmen R B 4s 6s SR
Takudzwanashe Kaitano not out 1 16 0 0 6.25
Tinashe Kamunhukamwe b Dilshan Madushanka 0 1 0 0 0.00
Craig Ervine c Sahan Arachchige b Dilshan Madushanka 0 4 0 0 0.00
Milton Shumba not out 2 3 0 0 66.67


Extras 9 (b 4 , lb 5 , nb 0, w 0, pen 0)
Total 12/2 (4 Overs, RR: 3)
Bowling O M R W Econ
Dilshan Madushanka 2 2 0 2 0.00
Dushmantha Chameera 2 1 3 0 1.50