சிலாபம் மேரியன்ஸ் மற்றொரு வெற்றியுடன் ப்ரீமியர் லீக் தொடரில் ஆதிக்கம்

139

இலங்கை கிரிக்கெட் சபை நடாத்தும் 2017/18 ஆண்டுக்கான உள்ளூர் பருவத்திற்கான ப்ரீமியர் லீக் A நிலை தொடரின் இரண்டு போட்டிகள் இன்று (04) நிறைவடைந்தன.

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் எதிர் பதுரெலிய விளையாட்டுக் கழகம்

பதுரெலிய விளையாட்டுக் கழகத்துடனான போட்டியை 320 ஓட்டங்களால் இலகுவாக வென்ற மலிந்த புஷ்பகுமார தலைமையிலான சிலாபம் மேரியன்ஸ் கழகம் ப்ரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

B குழுவில் முதலிடத்தில் இருக்கும் சிலாபம் மேரியன்ஸ் கழகம் இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் மூன்றில் வென்று முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டது.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய மைதானத்தில் நடைபெற்ற போட்டியின் கடைசி நாளில் பதுரெலிய விளையாட்டுக் கழகத்திற்கு 477 என்ற சவாலான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. எனினும் அந்த அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து 156 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

தலைமைப் பதவியில் இருந்து நீக்கப்பட்ட திசர பெரேரா

இதன்போது சிலாபம் மேரியன்ஸ் அணி சார்பாக வேகப்பந்து வீச்சாளர் அசித்த பெர்னாண்டோ, சச்சித்ர சேரசிங்கவுடன் மலிந்த புஷ்பகுமாரவும் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். புஷ்பகுமார இந்த போட்டியில் மொத்தம் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக கடைசி நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த சிலாபம் மேரியன்ஸ் கழகம் ஓஷத பெர்னாண்டோவின் சதத்துடன் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 267 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது.

போட்டியின் சுருக்கம்   

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 371 (85.2) – சச்சித்ர சேரசிங்க 103, புலின தரங்க 70, இசுரு உதான 41, மலிந்த புஷ்பகுமார 31, கசுன் விதுர 23, அலங்கார அசங்க 5/74, டிலேஷ் குணரத்ன 3/91, துவிந்து திலகரத்ன 2/80

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 162 (47.3) – பதும் நிஸ்ஸங்க 42, சன்ஜய சதுரங்க 39, நதீர நாவல 22, மலிந்த புஷ்பகுமார 5/40

சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 267/3d (58) – ஓஷத பெர்னாண்டோ 103*, கசுன் விதுர 78, சச்சித்ர சேரசிங்க 51

பதுரெலிய விளையாட்டுக் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 156 (52.1) – பதும் நிஸ்ஸங்க 50, மதுர லக்மால் 28, நதீர நாவல 26, அசித பெர்னாண்டோ 3/22, சச்சித்ர சேரசிங்க 3/49, மலிந்த புஷ்பகுமார 3/55

முடிவு – சிலாபம் மேரியன்ஸ் கிரிக்கெட் கழகம் 320 ஓட்டங்களால் வெற்றி


SSC எதிர் கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம்

முதல் இன்னிங்சில் பின்னடைவை சந்தித்த SSC அணி இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக ஆடி கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகத்துடனான போட்டியை வெற்றி தோல்வி இன்றி முடித்துக்கொண்டது. ப்ரீமியர் லீக் தொடரின் A குழுவில் SSC அணி தனது முதல் இடத்தை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டது.

கொழும்பு கோல்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியின் மூன்றாவது மற்றும் கடைசி நாளில் தனது இரண்டாவது இன்னிங்சைத் தொடர்ந்த கொழும்பு கோல்ட்ஸ் கழகம் 203 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. SSC அணித்தலைவர் சச்சித்ர சேனநாயக்க 4 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அந்த அணியின் 6 அடி 3 அங்குல உயரம் கொண்ட அக்தாப் காதர் மற்றும் ஆகாஷ் சேனாரத்ன தலா 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தனர்.

சிலாபம் மேரியன்ஸ் அணிக்கு மற்றொரு வெற்றி வாய்ப்பு

எனினும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்ற கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் 271 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. கடைசி நாள் ஆட்டத்தின் கடைசி நேரத்தில் வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்சை ஆரம்பித்த SSC அணி முதல் இரண்டு விக்கெட்டுகளையும் 28 ஓட்டங்களுக்கு இழந்தபோதும் அனுபவ ஆரம்ப துடுப்பாட்ட வீரர் திமுத் கருணாரத்ன மீண்டும் ஒருமுறை சோபித்து அரைச்சதத்தை பெற்றார்.

இந்த தொடரில் அதிக ஓட்டங்களைப் பெற்றவரான கருணாரத்ன 2 சதம் 2 அரைச்சதங்களோடு மொத்தம் 434 ஓட்டங்களைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் கடைசி நாள் ஆட்டநேர முடிவின்போதும் SSC அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 2 விக்கெட்டுகளை இழந்து 100 ஓட்டங்களை பெற்றது.

போட்டியின் சுருக்கம்

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (முதல் இன்னிங்ஸ்) – 267 (82.3) – சங்கீத் குரே 53, டில்ருவன் பெரேரா 45, கவிஷ்க அஞ்சுல 37*, பிரியமால் பெரேரா 32, அவிஷ்க பெர்னாண்டோ 32, விஷாத் ரந்திக்க 21, நிசல தாரக்க 20, ஆகாஷ் சேனாரத்ன 4/76, சச்சித்ர சேனநாயக்க 3/70, கசுன் மதுஷங்க 2/53

SSC (முதல் இன்னிங்ஸ்) – 200 (59.1) – சாமர கபுகெதர 61, கௌஷால் சில்வா 43, ஆகாஷ் சேனாரத்ன 28, சச்சித்ர சேனநாயக்க 27, பிரபாத் ஜயசூரிய 4/63, டில்ருவன் பெரேரா 3/55, கவீஷ்க அஞ்சுல 2/31

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் கழகம் (இரண்டாவது இன்னிங்ஸ்) – 203 (79.5) – பிரியமால் பெரேரா 87, கவீஷ்க அஞ்ஜுல 27*, சங்கீத் குரே 23, அவிஷ்க பெர்னாண்டோ 21, சச்சித்ர சேனநாயக்க 4/50, அக்தாப் காதர் 3/40, ஆகாஷ் செனரத்ன 3/80

SSC (இரண்டாவது இன்னிங்ஸ்) – 100/2 (34) – திமுத் கருணாரத்ன 55*, ஷம்மு அஷான் 28*, பிரபாத் ஜயசூரிய 2/44

முடிவு – போட்டி வெற்றி தோல்வியின்றி முடிவுற்றது