ஜிம்பாப்வே செல்லும் இந்திய கிரிக்கெட் அணி!

India tour of Zimbabwe 2024

165

இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதம் ஜிம்பாப்வேவுக்கு சற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடவுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியாக 2016ம் ஆண்டு இந்திய அணி T20I தொடரில் விளையாடியிருந்ததுடன், 8 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் அங்கு சென்று விளையாடவுள்ளது. 

துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட மே.தீவுகள் வீரர்

கடந்த 2010, 2015 மற்றும் 2016ம் ஆண்டுகளில் இந்திய அணி, ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், தற்போது 4வது தடவையாக ஜிம்பாப்வேவுக்கு எதிராக அவர்களுடைய சொந்த மண்ணில் விளையாடவுள்ளது. 

இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதல் T20I போட்டி ஜூலை 6ம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், தொடர் ஜூலை 14ம் திகதி தொடர் நிறைவடையவுள்ளது. தொடரின் அனைத்து போட்டிகளும் ஹராரே மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

ஜிம்பாப்வேஇந்திய அணிகளுக்கு இடையிலான T20I தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள T20 உலகக்கிண்ணத்தை தொடர்ந்து நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

தொடர் அட்டவணை 

  • முதல் T20I – ஜூலை 6 
  • இரண்டாவது T20I – ஜூலை 7 
  • மூன்றாவது T20I – ஜூலை 10 
  • நான்காவது T20I – ஜூலை 13 
  • ஐந்தாவது T20I – ஜூலை 14 

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<