பாராலிம்பிக் படகோட்டம்: மஹேஷ் B பிரிவு இறுதிப் போட்டிக்குத் தகுதி

2020 Tokyo Paralympics

171

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவின் நான்காவது நாளான இன்று நடைபெற்ற ஆண்களுக்கான துடுப்பு படகோட்டத்தின் ரெப்சேஜ் தகுதிகாண் போட்டியில் பங்குகொண்ட இலங்கை வீரர் மஹேஷ் ஜயகொடி கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டார்.   

இதன்படி, ஆண்களுக்கான PR1 பிரிவு இரட்டைத் துடுப்பு படகோட்டத்தில் பதக்கத்துக்கான போட்டியில் பங்குபெறும் வாய்ப்பை அவர் தவறவிட்டார்

டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான PR1 பிரிவு ஒற்றையருக்கான இரட்டைத் துடுப்பு படகோட்டத்தின் ரெப்சேஜ் எனும் மறுசுழற்சி தகுதிகாண் சுற்றுப் போட்டிகள் இன்று காலை நடைபெற்றது.

இந்தப் போட்டியில் பங்குகொண்ட இலங்கையின் மஹேஷ் ஜயகொடி கடைசி இடத்தைப் பெற்று ஏமாற்றம் அளித்தார்

போட்டியை அவர் 11 நிமிடங்கள், 21.31 செக்கன்களில் நிறைவுசெய்து 5ஆவது இடத்தைப் பெற்றுக்கொண்டதுடன், நிரல்படுத்தலுக்கான B பிரிவு இறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றார்.

இதன்படி, நாளை நடைபெறவுள்ள தரவரிசைப்படுதலுக்கான (ஆறுதல் சுற்று) B பிரிவு இறுதிப் போட்டியில் மஹேஷ் ஜயகொடி பங்குபற்றவுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, முதலாவது ரெப்சேஜ் தகுதிகாண் போட்டியில் அவுஸ்திரேலியாவின் எரிக் ஹோரியும் (9:20.61), இஸ்ரேலின் செமுவல் டெனியலும் (9:28.78) முதலிரண்டு இடங்களைப் பெற்றுக்கொண்டனர்.

டோக்கியோ பாராலிம்பிக்கில் இலங்கை வீரர்கள் அபார ஆற்றல்

அதேபோல, மஹேஷ் ஜயகொடி பங்குபற்றிய இரண்டாவது தகுதிகாண் போட்டியில் முதலிரண்டு இடங்களை பிரித்தானியாவின் பெஞ்மின் ப்ரிச்சார்ட்டும் (9:14.41), ஸ்பெய்னின் ஜேவியர் ரேஜா முனோஸ்ஸும் (9:33.42) பெற்றுக்கொண்டனர்.

இதன்படி, குறித்த நாக்கு வீரர்களும் நாளை நடைபெறவுள்ள பதக்கத்துக்கான A பிரிவு இறுதிப் போட்டியில் பங்குபற்ற தகுதிபெற்றனர்.

இந்த இறுதிப் போட்டியில் பங்குபற்றுவதற்கு ஏற்கனவே பிரேசிலின் ரெனே கெம்ப்பஸ் பெரெய்ராவும், யுக்ரெய்னின் ரோமன் போலியன்ஸ்கியும் நேரடி தகுதிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல ஒலிம்பிக் செய்திகளைப் படிக்க…