இலங்கை – தென்னாபிரிக்க தொடருக்கான நடுவர்கள் குழாம் அறிவிப்பு

South Africa Tour Of Sri Lanka - 2021

470
Match officials appointed for Sri Lanka

இலங்கை – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் நடைபெறவுள்ள ஒருநாள், T20 தொடர்களுக்கான நடுவர்கள் குழாமை இலங்கை கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

அதன்படி, இரண்டு போட்டித் தொடருக்குமான போட்டி மத்தியஸ்தராக ரஞ்சன் மடுகல்ல செயல்படவுள்ளார். இதனிடையே, இலங்கை – தென்னாபிரிக்க தொடருக்காக ஐந்து நடுவர்கள் பெயரிடப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் இலங்கையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

>> IPL தொடரில் சமீர, ஹஸரங்க விளையாடுவதற்கு SLC அனுமதி!

இதில் ICCயின் பிரதான நடுவர் குழாத்தின் முக்கிய உறுப்பினராக உள்ள குமார் தர்மசேன இலங்கை – தென்னாபிரிக்க தொடரில் பிரதான நடுவராக செயல்படவுள்ளார்.

அத்துடன், ICCயின் பிரதான நடுவர் குழாத்தில் உள்ள ஏனையவர்களான ருச்சிர பல்லிய குருகே, ரவீந்திர விமலசிறி, லிண்டன் ஹெனிபல் மற்றும் பிரகீத் ரம்புக்வெல்ல ஆகியோர் நடுவர்களாக பெயரிடப்பட்டுள்ளனர். 

இலங்கை கிரிக்கெட் சபையால் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து நடுவர்களும் அண்மையில் நிறைவுக்கு வந்த இந்திய – இலங்கை தொடரிலும் பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சுற்றுலா தென்னாபிரிக்கா, இலங்கை அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது. 

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 4ஆம், 7ஆம் திகதிகளில் ஏனைய இரண்டு ஒருநாள் போட்டிகளும், செம்படம்பர் 10, 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் T20 போட்டிகளும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<